"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Saturday, August 20, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 18

ஜீன் 15 ம் தேதி, விடியலுக்கு முன் எங்களை வழிகாட்டி தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டதோடு. இரவு மழை ஏதும் இல்லாததால், மற்ற குழுக்கள் செல்வதாகவும் நாங்களும் கிளம்பலாம் என எங்களின் இரண்டாவது நாள் பரிக்ரமாவை உறுதி செய்தார்.

காலைக்கடன்களை முடித்து கிளம்ப தயாரானபோது அமைப்பாளர், தன் விருப்பத்திற்கு ஏற்ப இன்னும் இரண்டு பேரை உங்களால் நன்கு நடக்க முடியும் நான் அழைத்துச் செல்கிறேன் வாங்க என அழைத்தார்.அவர்கள் தங்களின் பிற பொருள்களை திரும்பிச் செல்வோரிடம் ஒப்படைத்துவிட்டு, தயாராக கூடுதலாக இன்னும் முக்கால் மணிநேரம் ஆனது.

இன்னும் இருள் விலகாத நேரம், இருட்டில் டார்ச் உதவியுடன் நடக்க ஆரம்பித்தோம். பாதை ஏதும் இல்லை. கூழாங்கற்களின் மீது நடக்க ஆரம்பித்தோம். புதிதாக கிளம்பிய இருவரில் ஒருவர் பெண்மணி. அரை பர்லாங் தூரம் சென்றதும் நடக்க இயலாமல் திரும்பிவிட்டார்:( கூடவே இன்னொரு நபரும் எனக்கு காலணி சரியில்லை கால் பிரளுகின்றது என அவரும் திரும்பிவிட்டார்:(

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் உங்களுக்கு உள்மனதில் போகலாம் எனத் தோன்றாத பட்சத்தில் அவரு சொல்லிட்டாரு.,கிளம்புவோம், எதுனாலும் அவரு பாத்துக்குவாரு என கிளம்பிவிட வேண்டாம். இந்த ஒரு மணி நேர காலதாமதத்தினால், பல குழுக்களும் முன்னதாக சென்றுவிட கிட்டத்தட்ட கடைசியாக நாங்கள் சென்றோம்.,காலை நேரத்தில் கைலை நாதனின் தரிசனம். வடக்கு முகமும், கிழக்கு முகமும் சேர்ந்து.....


அருகில் உள்ள மலைகள் சூரியனின் ஒளியில்..


ஐந்து யாத்திரீகர்கள், நான்கு உதவியாளர்கள் எங்களின் குழு:)

திருக்கைலையின் வடகிழக்கு தரிசனம்

யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா
Post a Comment