"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, August 9, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 14

இந்த மேற்கு முக தரிசனத்திற்கு பிறகு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தோம். நம்முடன் கூடவே வருகிறார்போல் திருக்கைலை நாதர் தோற்றமளித்துக் கொண்டே வந்தார். கூடவே நந்தி பர்வதம் மலையும்.,:)
அதே இடத்தில் நின்று  பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல பரவச உணர்வு உள்ளத்தில் பொங்க,  உடன் வந்த யாத்திரீக நண்பர்கள் என்னைத் தாண்டிச் செல்ல, நானும் வேறு வழியில்லாமல் மெள்ள மெள்ள நகர்ந்தேன்.
 தூரம் செல்லசெல்ல, கால்கள் ஓய ஆரம்பித்தது. பாதித்தூரத்தை கடந்தது போன்ற உணர்வு ஏற்பட கண்ணில் பட்டது கடை.. ஆம் அங்கே பிஸ்கட், குளிர்பானங்கள், சூப், நூடுல்ஸ் போன்றவை விற்பனைக்கு இருந்தன.


நல்ல பசியாக இருந்ததால் ஒரு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிகொண்டேன். கூட வந்த ஷெர்பாவுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டேன். ஒரே ஒரு கோக் மட்டும் வாங்கிக்கொண்டார்.வேறு ஏதும் தேவையில்லை என மறுத்து விட்டார். கடையைத் தாண்டி இன்னும் தூரம் சென்று அமர ஏதுவாக பசுமை, நீரோடை என ஒரு இடம் கிடைக்க அமர்ந்தேன்.

கூடவே யாக்குகள் எனப்படும் லக்கேஞ்களை தூக்கிக்கொண்டு வந்த எருமைகள் வந்தன. அவைகளும் அதே இடத்தில் மேய்ந்து கொண்டு இருந்தன.

பத்து நிமிட ஓய்விற்குப்பின் நடக்க ஆரம்பிக்க, மேற்கு முக தரிசனத்திலிருந்து வடக்கு முகமும் தெரிய ஆர ம்பிக்கிறது. திருக்கைலைநாதரின் மேற்கும் முகமும் வடக்கு முகமும் ஒரு சேர காட்சியளிக்கும் அற்புதத்தை நீங்களும் கண்டு களியுங்களேன் !!

நடந்து சென்ற பாதை... லாசூ பள்ளத்தாக்கின் காட்சி....

யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

5 comments:

 1. அற்புதமான கைலைநாதன் தரிசனம்...

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. அருமையான படங்கள்.
  அற்புதமான தரிசனம் செய்வித்த பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. படங்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது, தொடருங்கள்,

  ReplyDelete
 4. பரவசப் படுத்தும் படங்கள். இப்போதுதான் பார்க்கிறேன். எல்லா பாகத்தையும் படிக்க வேண்டும்.

  ReplyDelete
 5. திருக்கைலாய யாத்திரை தொடர் புகைப்படங்களுடன் மிகச் சிறப்பாக உள்ளது.

  தினமும் படிப்பது பகுதியில் அருட்சிவம் உள்ளதை கண்டு சந்தோஷப்படுகின்றேன்.
  உங்களின் தளத்தையும் இனி நான் தினமும் படிக்க உள்ளேன்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)