"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, August 19, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 17

மூன்று நாள் கோரா எனப்படும் பரிக்ரமாவில் உள்ள சிரமங்கள் அலசப்பட்டன. ஒரு நாள் பரிக்ரமாவை முடித்துக்கொண்டு, மறுநாள் திரும்பினால் கூடவே சமையல்குழுவும் இருப்பதால் உணவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் மூன்று நாள் பரிக்ரமாவில் அடுத்த இரண்டு நாளுக்கு உணவு சமைக்க இயலாது. காரணம் பொருள்கள் கொண்டு போவதில் உள்ள சிரமங்கள்., இரண்டாம் நாள் பயண நேரம் 10-12 மணி நேரம் இருக்கலாம்.ஒரு ஆப்பிளும் ஒரு பாக்கெட் ஜீஸ் மட்டுமே ஒவ்வொரு வேளைக்கும் கொடுக்கப்படும். இதற்கு வருபவர்கள் தயாராக இருக்க வேண்டும்.:)

இரண்டாவது நாள் பரிக்ரமாவில் கைலை நாதனின் தரிசனம் கொஞ்ச நேரம் மட்டுமே தெரியும். முதல்நாளில் தரிசனம் கிடைக்கிற அளவிற்கு இருக்காது.

அப்படி செல்லும்போது டோல்மாலா பாஸ் என்ற இந்த பரிக்ரமாவின் உயர்ந்த இடத்தை கடக்க வேண்டும். அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருக்கும். இதை சமாளிக்கும் தகுதியான உடல்திறன் இருக்க வேண்டும்.

இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு எங்களின் வழிகாட்டியான ’க்யான்’  தகுதியானவர்களைத் தானே தேர்ந்தெடுப்பதாகக்கூறினார். அவருக்கு பலமுறை பரிக்ரமா வந்த அனுபவம் இருப்பதால் அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டோம்.

நீங்கதான் நான் தேர்ந்தெடுக்கும் முதல் நபர் என என்னை நோக்கி கையைக் காட்டினார்.:) முதல் நாள் பரிக்ரமாவின் தங்குமிடமான ’திராபுக்’கிற்கு முதலாவதாக வந்ததோடு, ஓய்வெடுக்காமல் காமெராவை கையில் வைத்துக்கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததும்,  டயாமாக்ஸ் மாத்திரை தினமும் எடுக்காமலே இதுவரை வந்து சேர்ந்தாலும் என்னைத் தேர்ந்தெடுத்தாக தெரிவித்தார். அடுத்ததாக மலேசியாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர், கேரளாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர், அமைப்பாளரும், அவரது உதவியாளரும் ஆக மொத்தம் ஐந்து பேர் மட்டுமே போதும் என்றார்.

அந்த வழிகாட்டியின் தேர்வு, எனக்கு சிவத்தின் ஆணையாகவே மனதில் பட்டது.ஏற்கனவே நியாலத்தில் மலை ஏறியும் ,மனோசரவோரில் தீர்த்தமாடியும், சூரியனின் முழு ஆசிர்வாததுடன் இறைசக்தியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த எங்களுக்கு, (எனக்கு), இதுவும் கூடுதல் அங்கீகாரமாகவே பட  தன் தேவை எது என  கண்டறிந்து தந்தை செயல்படும்போது  எப்படி குழந்தையின் மனம் கவலையின்றி, குதூகலத்துடன் இருக்குமோ அதுபோல் உணர்ந்தேன்.
.
எங்களுக்கு உதவியாக நான்கு ஷெர்பாக்களும் உடன் வருவார்கள்.நாளை விடியலுக்கு முன் கிளம்பலாம். நாளைய பொழுது இனியதாக அமையட்டும் எனக்கூறி வழிகாட்டி ’க்யான்’விடைபெற்றார்.

யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

3 comments:

  1. திருக்கையிலாயத்தின் அரிய தோற்றங்களை காண காத்திருக்கிறேன். பரிக்ரமா செய்ய முடியாதவர்கள் என்ன செய்வார்கள், அங்கேயே காத்திருப்பார்களா? அப்படியெனில் அவர்கள் ஏதாவது விசேச பூஜை செய்ய திட்டம் இருக்கிறதா?

    ReplyDelete
  2. முந்தய இடுகைகளில் படங்கள் இருக்கின்றன. பரிக்ரமா செய்ய முடியாதவர்கள் கீழே டார்சனில் இருப்பார்கள். அவர்கள் அருகில் உள்ள அஷ்டபத் என்கிற இடத்திற்கு ஜீப்பில் சென்று அங்கிருந்து கொஞ்சம் நடந்து திருக்கைலை நாதனை தரிசித்து வருவார்கள்.

    விசேச பூஜைகள் யாத்திரிகர்கள் மற்றும் அமைப்பாள்ர்களின் விருப்பத்தை பொறுத்ததே...செய்யலாம்

    ReplyDelete
  3. நல்ல அனுபவங்கள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)