"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, January 25, 2010

திருப்பூரில் புத்தகத் திருவிழா - 2010

அன்பு நண்பர்களே,

திருப்பூரில் கடந்த ஆறுவருடங்களாக நடந்து வந்த புத்தக கண்காட்சி இந்த வருடமும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெறப் போகிறது. இந்த செய்தியை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

(படத்தின் மீது ’க்ளிக்’ செய்து பெரிதாக்கி பார்க்கலாம்)
















வாய்ப்பும் வசதியும் இருக்கிற அன்பர்கள் அனைவரும் கலந்து பயன்பெறுக..:))

திருப்பூர் : பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில், ஏழாம் ஆண்டு புத்தக கண்காட்சி, திருப்பூர் கே.ஆர்.சி., சென்டரில் நாளை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது; தினமும் காலை 11.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடக்கிறது. தமிழகத்தின் முன் னணி புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர் கள் என, 72 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.இந்நிறுவனங்கள் அமைக்கும் 94 ஸ்டால்களில், குழந்தை இலக்கியம், அறிவியல், கலை, இலக் கியம், மொழி, வரலாறு, அரசியல், தொழில்நுட்பம், தத்துவம், மதம், ஆளுமை, கதை, நாவல்கள் என, அனைத்து பிரிவுகளிலும் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.கண்காட்சி வரவேற்புக்குழு தலைவர் துரைசாமி, செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் நிசார் அகமது ஆகியோர் கூறுகையில், "ஜெய்வாபாய் பள்ளியில் நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். பேச்சு போட்டியில் வென்ற மாணவ, மாணவியர் கண் காட்சி விழா மேடையில் பேச உள்ளனர். தினமும் குறும்படங்கள் ஒளிபரப்பப்படும்,' என்றனர்.
வாழ்த்துகள்

10 comments:

  1. பயணிக்கும் போது பார்த்த போது வியப்பாக இருந்தது. அதிக விளம்பரங்கள் இல்லை.எந்த விளம்பரமும் அதிக நபர்களை இந்த செய்திகள் சேர்வதாக இல்லை சிவா.

    சென்னைக்கு இருந்த வரவேற்பு இங்கு இல்லையோ? அல்லது முடியும் போது எண்ணங்கள் மாறுமா?

    ReplyDelete
  2. தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  3. \\ஜோதிஜி said...

    பயணிக்கும் போது பார்த்த போது வியப்பாக இருந்தது. அதிக விளம்பரங்கள் இல்லை.எந்த விளம்பரமும் அதிக நபர்களை இந்த செய்திகள் சேர்வதாக இல்லை சிவா.\\

    திருப்பூர் தொழில் நகரம் ஆதலால் புத்தகம் படிப்பது குறைவே.:((

    சினிமா, டாஸ்மார்க் கூட்டம் பிச்சுகிட்டு ஓடும்..

    ReplyDelete
  4. \\வெ.இராதாகிருஷ்ணன் said...

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா\\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே:))

    ReplyDelete
  5. விளம்பரத்தைக் கவனித்துப் படித்தால், இது இரண்டு புத்தக நிறுவனங்கள் சேர்ந்து நடத்தும் ஏற்பாடு என்பது தெரியும்!

    சென்னைப் புத்தகக் கண்காட்சி மாதிரி, புத்தக வெளியீட்டாளர்கள் அமைப்பான பபாசி அரசு உதவியோடு நடத்துவது போல அல்ல. மிகக் குறைந்த பதிப்பகங்கள் பங்குபெறும், அல்லது இவர்கள் விற்பனை செய்யும் புத்தகங்கள் மட்டுமே இருக்கும் என்பதால் தான் விளம்பரம் குறைவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்! விளம்பரம் என்பது வியாபாரத்தைப் பொறுத்தது மட்டுமே!

    குறிப்பாக பாரதி புத்தகாலயம், இடது சாரி சார்ந்த எழுத்தாளர்களை, புத்தகங்களைக் கொண்டது! என்சிபிஎச் போல! நிறைய புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள்!

    தவிர திருப்பூரில் தொழில் அதிகம் அஆனதால் புத்தகம் படிப்பது குறைவு என்ற கருத்தும் கூட சரியாகத் தெரியவில்லை! மற்ற இடங்களில் எல்லாம் படிப்பவர்கள் அதிகமாக இருப்பது போல ஒரு மாயையைத் தோற்றுவிப்பது போல இருப்பதால் சொல்கிறேன்.

    ReplyDelete
  6. \\கிருஷ்ணமூர்த்தி said...

    விளம்பரத்தைக் கவனித்துப் படித்தால், இது இரண்டு புத்தக நிறுவனங்கள் சேர்ந்து நடத்தும் ஏற்பாடு என்பது தெரியும்!\\

    உண்மைதான். :))

    சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ தான் சர்க்கரை :))

    \\திருப்பூரில் தொழில் அதிகம் அஆனதால் புத்தகம் படிப்பது குறைவு என்ற கருத்தும் கூட சரியாகத் தெரியவில்லை\\

    இப்படி வைத்துக்கொள்ளுங்கள், அதாவது மற்ற ஊர்களைவிட மிகக்குறைவு..

    ReplyDelete
  7. சென்னையில் கூட வருடத்திற்கு ரெண்டு முறை புத்தகக் கண்காட்சி வைத்தால் நன்றாகத் தான் இருக்கும். 10 நாட்களுடன் முடித்து விடுகிறார்கள்.

    ReplyDelete
  8. குவியல் என்று திருப்பூர் புத்தகக் கடை, தனது எல்லைகளை திண்டுக்கல் புதிய பேருந்து நிலையத்திற்கு வெளியே கடைபரப்புவது வரை வளர்ந்திருந்தது.

    ஒரு இருபது வருடங்களுக்கு முன்னாள் வார இறுதி நாட்களில்,நான் அவர்களிடம் புத்தகம் வாங்குவதற்காகவே, திண்டுக்கல்லில் இறங்கி, புத்தகங்கள் வாங்கிய பிறகும் கூட சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பிறகே மதுரை திரும்புவேன்!

    இப்போது அந்த நிறுவனம் திருப்பூரில் செயல்படுகிறதா என்று தெரியவில்லை!

    இன்னொரு காரணமும் இருக்கிறது. திருப்[பூரில் பணியாற்றுகிற தொழிலாளர்களில் பெரும்பாலானோர் கேரளாவில் இருந்து வந்தவர்கள். தமிழ்ப் புத்தக வாசிப்பை அவர்களிடம் அதிகமாகப் பார்க்க முடியாது.

    ReplyDelete
  9. \\கிருஷ்ணமூர்த்தி said...

    குவியல் என்று திருப்பூர் புத்தகக் கடை\\

    நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அக்கடை எனக்குத் தெரிந்தவரை இல்லை:(

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)