"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, October 22, 2009

காதலிப்பதே என் தொழில்

திருநல்வேலி தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் நிகழ்ந்த பதின்கவனக நிகழ்ச்சியின்போது, வெண்பாவுக்கு ஈற்றடி தந்த பேராசிரியர் பா.வளவன் அரசு அவர்கள் நகைச்சுவையாகவும் சிக்கலாகவும் இருக்குமாறு ஓர் ஈற்றடியைக் கொடுத்தார்.

”காதலிப்பதே என் தொழில்’ என்று வெண்பா முடிய வேண்டும். ஆனால் பாடல் அகத்துறைப்பாடலாக அதாவது ஆண்-பெண் காதல் பற்றிப் பாடும் பாடலாக இருக்கக் கூடாது” என்று நிபந்தனையுடன் பாடலைக் கேட்டார்.

அதற்கு கவனகர் திரு.இராமையாபிள்ளை சற்றும் தடுமாறாமல் புன்னகையோடு பாடிய வெண்பா இதுதான்

‘சங்கத் தமிழைத் தடையின்றிக் கற்றறிந்தே
மங்காப் புகழுடனே வாழ்ந்திங்கே-இங்கிதமாய்
ஓதல் உணர்தல் உடைய புலவர்களைக்
காதலிப்ப தேஎன் தொழில்

பாராட்டுகள் குவிந்தன. தந்தையிடம் இராம.கனகசுப்புரத்தினம் வியப்புடன் கேட்கிறார். “எப்படிச் சிக்கலாகக் கேள்வி கேட்டாலும் உடனே உரிய குறளை எடுத்து நீட்டுகிறீர்களே, எப்படி அய்யா முடிகிறது?”

”அப்பா, திருக்குறளை வெறுமனே மனப்பாடம் செய்து வைத்திருக்கவில்லை. என் உயிருடன் உணர்வுடன் கலந்து இருக்கிறது. அது மட்டுமல்ல, திருக்குறளுக்குள் இன்னும் திருவள்ளுவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மீது அன்பு வைத்து, நம் உயிருடனும் உணர்வுடனும் அவரோடு கலந்து விட்டால் அவையோர் எந்த கேள்வி கேட்டாலும், அவரே பதிலைக் கூறிவிடுவார். நாம் வெறும் கருவியாய் இருந்து வேடிக்கை பார்த்தால் போதும். என்றார்.

9 comments:

  1. ஆஹா..அருமை.திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தையே இல்லை(1330 லிம்)

    ReplyDelete
  2. கவர்ச்சிகரமான தலைப்பின் கீழ் தமிழின் கவர்ச்சியைக் காட்டியதற்கு மகிழ்ச்சி,சிவா.

    தண்டோரா ...... said...
    ஆஹா..அருமை.திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தையே இல்லை(1330 லிம்)//

    தண்டோரா சாரின் இந்தத் தகவ்லும் புதிது.நன்றி சார்.

    ReplyDelete
  3. \\தண்டோரா ...... said...

    ஆஹா..அருமை.திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தையே இல்லை(1330 லிம்)\\

    எனக்கு புதிய தகவல் இது.,

    தகவலுக்கு நன்றி..

    தமிழில் எழுதிய திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தை இல்லை என்றால் இதிலும் கூட திருவள்ளுவர் கவனம் செலுத்தியது மலைக்க வைக்கிறது..

    வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  4. \\கவர்ச்சிகரமான தலைப்பின் கீழ் தமிழின் கவர்ச்சியைக் காட்டியதற்கு மகிழ்ச்சி,சிவா.\\

    தலைப்பே நமக்கு ஈர்ப்பை தருவதாக இருந்தது. அதனாலேயே பகிர்ந்து கொண்டேன்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  5. //...கற்றறந்தே//

    `கற்றறிந்தே' என்றிருக்கவேண்டும்.

    கட்டுரை நன்று.

    ReplyDelete
  6. \\அ. நம்பி said...

    //...கற்றறந்தே//

    `கற்றறிந்தே' என்றிருக்கவேண்டும்.

    கட்டுரை நன்று.\\

    சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..

    சரி செய்து விட்டேன்..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஒவ்வொரு முறையும் மகாகவி பாரதியின் வரிகள், மற்றும் அய்யா திருவள்ளுவரின் சிந்தனைகள் என்று மேம்போக்காக மேலே தூவியுள்ள இனிப்பை தனியாக எடுத்து சாப்பாடும் குழந்தைகள் போலத்தான் பாவித்து படித்து வந்துள்ளேன். ஆனால் மிக சிறிதாக உள்ளே நுழைய மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. கடைசியில் இன்றைய காப்பிய கவிஞர் வரைக்கும் நினைக்கும் அளவிற்கு ஏராளமான சிந்தனைகள் வந்து போகின்றது. நீங்கள் சொன்னது எனக்கு புதிய விசயம்.

    ReplyDelete
  8. தங்களின் சிந்தனையை தூண்டும் விதத்தில் இடுகை அமைந்ததில் மகிழ்கிறேன் :))

    ReplyDelete
  9. அருமை

    தங்களின் இடுகைகளை இப்பொழுது தான் பார்த்தேன்.


    எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை

    வாழ்த்துகள்

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)