"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, July 2, 2009

முடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்

சென்ற வாரத்தில் புதன்கிழமை அன்று காலை எழுந்தவுடன் முடிதிருத்தி்க் கொள்ளும் பொருட்டு சலூனுக்கு சென்றேன்.

பல வருடங்களாக வழக்கமாக முடி திருத்தும் நண்பர் அவர்., காலை 7.00 மணி ஆதலால் கூட்டம் ஏதும் இல்லை.

முடிதிருத்தும் பணி தொடங்கியது. சுமார் இருபது நிமிடத்தில் பணி முடியும் பொழுது, வழக்கமான செயலாக, கையை உயர்த்தச் சொல்லி அக்குள் பகுதியை சுத்தப்படுத்த தொடங்கினார்.

அப்போது அவர் கேட்ட கேள்வி. ”உங்ககிட்ட கேட்கவேண்டும் என நினைத்தேன், குளித்து விட்டு வந்தீர்களா?” என்றார்.

”இல்லை, எழுந்தவுடன் வந்துவிட்டேன்., ஏன்?” என்றேன்

”பலபேருக்கு கையை உயர்த்தினாலே துர்நாற்றம் வீசும், ’கப்’அடிக்கும், வீச்சத்துடன், முடியில் முடிச்சு,முடிச்சாக அழுக்கு பிரிக்க முடியாதபடி ஒட்டி கிடக்கும், உங்களிடத்தில் அப்படி எதுவுமே அடிக்கவில்லை, குளிக்கவுமில்லை, என்கிறீர்களே? எப்படி?“ என்றார் ஆச்சரியத்துடன் அவர்.

சரி,அவருக்கு புரிகிற மாதிரி, எனக்குத் தெரிந்த காரணத்தைச் சொல்லவேண்டும்.

மெள்ள ஆரம்பித்தேன்.,

“அது வேறொன்றுமில்லை. அக்குள் பகுதியில் அழுக்கு சேர வியர்வைதான் காரணம், வாசம் அடிக்க காரணமும் வியர்வையே.

வியர்வை என்பது உடலில் உள்ள கழிவுப்பொருளை வெளியேற்ற உதவுவது. வியர்வை சுத்தமாக இருந்தால் இது போன்று உடலும் சுத்தமாக இருக்கும்“ என்றேன்

அவர் உற்சாகமானார், அதோடு என்னை விடுவதாக இல்லை.

”வியர்வைன்னாலே அழுக்கை வெளிக் கொண்டு வருவதுதானே, அதுல அழுக்கு இல்லாம எப்படி?” என்றார்.

வியர்வை சுத்தமாக இருக்க வேண்டுமானால் நம்ம உடலில் கழிவுகள் எந்த ரூபத்திலும் தேங்கக்கூடாது., முக்கியமாக சளி, துளி கூட இருக்கக்கூடாது சளிதான் அனைத்து கிருமிகளுக்கும் வைட்டமின் மாத்திரை மாதிரி. கிருமிகள் உடலில் வளர ஆதாரமாக இருக்கும். உடல் இயங்குவதில் ஏற்படும் சாதரண கழிவுகளைக் கூட முழுமையாக வெளியேற்ற சளி இடைஞ்சலாகவே இருக்கும்”. என்றேன்.

அது மட்டுமல்ல, மது,புகைப் பழக்கங்களும், முறையற்ற உணவுப் பழக்கங்களும் உடலில் கழிவுகளைச் சேர்த்துக் கொண்டேதான் இருக்கும். இதனால் உடல் உள்உறுப்புகள் வெளியே தெரியாமல் உள்ளே இயக்கக் குறைபாடு அடையும். அது நமக்கு தெரியவரும்போது திரும்ப சரிசெய்ய இயலாத அல்லது சரி செய்யெ கடுமையாக வைத்தியம் பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருப்போம்.

சளியினால் ஏற்படும் இது நமக்கு தேவைதானா?“ என்றேன்.

”சரிங்க அப்படி நாம் உள்ளே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்படி தெரிஞ்சிக்கிறது?” என்றார் அவர்.

”எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

எப்பொழுது மலம் கழித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

எப்போழுது சளி பிடித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

அவ்வளவுதான்”
என்றேன்

”வாசமடிக்கிற பாத்ரூமை சுத்தம் செய்யாமல் இருப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் பாத்ரூமைப் பார்க்காதே, நம்மைப் பார் என்று சொல்கிறீர்களே!” என்றார்.

”ஆமாம். நம் உடல் உள்ளே சுத்தமாக இருந்தால் அதிலிருந்து வெளியாகும் எந்த கழிவுமே துர்நாற்றம் அடிக்காது. அதற்குண்டான இயல்பான வாசமே இருக்கும். இதை உணர்ந்து, தொடர்ந்து கழிவுகளின் வாசனையை கவனித்து வர வேண்டும், இதுகுறித்து குடும்ப உறவுகளோ, நண்பர்களோ சுட்டிக்காட்டினால் கூட அக்கறையோடு கேட்டு செயல்படவேண்டும்”. என்றேன்.

”உடல் நாற்றம் அடிக்காமல் இருக்க உணவுப்பாதையான வாய் முதல் மலம் வெளியேறும் பகுதி வரை சுத்தமாக இருக்கவேண்டும். இதுவே சுத்தமான உடல் அமைய அடிப்படை“ என்றேன்.

”சரி இதற்கு என்ன செய்ய வேண்டும்,, நீங்க என்ன செய்றீங்க?” என்றார்.,

மிக எளிமையான சில விசயங்கள்தாம் காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு சிறிது எண்ணெய் கொப்பளித்தல், இது தொண்டையில் தேங்கியுள்ள உள்ள சளிக் கிருமிகள் அனைத்தையும் நீக்க...

பல்பொடி கொண்டு விரலால் பல்துலக்குதல், பின்னர் பிரஸ் கொண்டும் தேவையானால் பல் துலக்குதல்.

முடித்தபின் தண்ணீர் ஐந்து அல்லது ஆறு மிளகை கடிக்காமல் தண்ணீருடன் சேர்த்து விழுங்குதல், கூடவே போதுமான வரை தண்ணீர் அருந்துதல் இது குடலில் உள்ள சளிப்படலத்தை வெளியேற்ற உதவும்..

பின்னர் மலம் கழித்தபின்பு, குடல் தூய்மை”
என்றேன்.

“அப்படின்னா?” என்றார்.

பல்விளக்கியபின் வாய்கொப்பளிக்கிறோம் அல்லவா? அதுபோல் மலம் கழித்தபின் மலக்குடலை இயற்கைஎனிமா மூலம் சாதரண தண்ணீரை உள்செலுத்தி சுத்தப்படுத்துதல் அவ்வளவுதான்”


”இவற்றை தொடர்ச்சியாக நான் செய்து வருகிறேன். இவையெல்லாம் உடல் உள்ளும், புறமும் சுத்தமாக மாற சில எளிய வழிமுறைகள் ஆகும்.

இதை பின்பற்றினால் அன்றாட வாழ்க்கையில் மருத்துவரை அடிக்கடி அணுக வேண்டியதில்லை” என்றேன்

”நல்ல விசயமாக இருக்கே!” என்றார்

”நம்மால் பிறருக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது. சமுதாயத்திற்கும் நாம் பாரமாக இருக்கக் கூடாது இதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும். நல்ல விசயங்களில் நாட்டம் வரும்.” என்று சொல்லி விடைபெற்றேன்.,

என்ன நண்பர்களே, இனி நீங்களும் உங்கள் கழிவுகளின் வாசனையை கவனிப்பீர்கள்தானே, உங்கள் நன்மைக்காக முயற்சித்துப் பாருங்களேன்

சந்திப்போம், சிந்திப்போம்

38 comments:

  1. Super matter sir pls continue helpful posts same

    ReplyDelete
  2. Very nice article

    ReplyDelete
  3. அறிவே தெய்வம்.,

    அருமையான இடுகை...

    ReplyDelete
  4. வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான தகவல் கொடுத்தமைக்கு நன்றிகள் பல. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. \\துளசி கோபால் said...

    நல்ல பதிவு\\

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  6. \\வடிவேலன் ஆர்.

    ngprasad\\

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. very useful one..

    gud yaar...

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு.. தொடருங்கள்

    ReplyDelete
  9. அக்குள் சேவிங் : இன்னும் முடித்திருத்துவோர் அதைப் சாதித் தொழிலாக செய்துவருவதும், அவர்களை இழிவாக நினைக்கிறோம் என்பதையே அக்குள் சேவிங் உணர்த்துகிறது.

    நம்மால் செய்ய முடியாத ஒன்று என்றால் பிறரின் உதவியை நாடலாம், பெண்களுக்கும் அக்குள் முடி வளர்வதுண்டு, அவர்களெல்லாம் பிறரின் உதவியை நாடுவது இல்லை.

    வெளிநாட்டில் கையைத் தூக்கி சேவிங் செய்யச் சொன்னால் 'எனக்கு நீ பண்ணி விடுவியான்னு' மறுப்பாங்காளாம். வெளிநாட்டிலும் பர்சனல் ப்ரைவேட் சேவிங்...உண்டு, அது தனி சர்வீசாக அதற்கு கொடுக்கும் விலையும் மிக அதிகம். தலை முடி வெட்டிக் கொள்வது தன்னால் முடியாத ஒன்று அதனால் பிறர் உதவியை நாடுகிறோம். அக்குள் அப்படி இல்லையே ?

    அக்குள் சேவிங் ரூ 1000 என்று விலை வைத்தால் அப்போதும் செய்து கொள்பவர்கள் இருக்கிறார்களா ?

    நம்ம ஊரு நிறைய மாற வேண்டி இருக்கு, குறிப்பாக மனிதர்களை மதிப்பதில்.

    ReplyDelete
  10. @ அப்பாவி முரு
    @ RR
    @ Janani
    @ ச.செந்தில்வேலன்

    நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. கோவி.கண்ணன் //அக்குள் சேவிங் : இன்னும் முடித்திருத்துவோர் அதைப் சாதித் தொழிலாக செய்துவருவதும், அவர்களை இழிவாக நினைக்கிறோம் என்பதையே அக்குள் சேவிங் உணர்த்துகிறது.//


    அக்குள் பகுதியை சுத்தப்படுத்துவதில் என்ன இழிவு என்பது எனக்கு புரியவில்லை.

    //நம்மால் செய்ய முடியாத ஒன்று என்றால் பிறரின் உதவியை நாடலாம், பெண்களுக்கும் அக்குள் முடி வளர்வதுண்டு, அவர்களெல்லாம் பிறரின் உதவியை நாடுவது இல்லை//

    கோவியாரே :)))

    அவசியம் ஏற்பட்டால் நான் கூட அத்தொழிலை/ செயலை செய்ய தயாராகவே இருக்கிறேன்.

    1000 ரூபாய் கொடுத்தால் இழிவு சரியாகி விடுமா?

    மருத்துவர் முடி நீக்கினால் அது சுத்தம்.,
    நண்பர் முடி நீக்கினால் அது இழிவு., அவரே அப்படி இழிவாக நினைப்பதில்லை.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. //அக்குள் பகுதியை சுத்தப்படுத்துவதில் என்ன இழிவு என்பது எனக்கு புரியவில்லை.//

    கால் கழுவது கூட நாமலே கழுவிக் கொண்டால் 'உவ்வே' இல்லை. பிறருக்குச் செய்தால் தான் 'உவ்வே', அக்குளையோ, வேறெங்கிலும் உள்ள முடிகளை சுத்தப்படுத்துவதை நான் தவறுன்னு சொல்ல வரவில்லை, ஆனால் அதைப் பிறரைச் செய்யச் சொல்லக் கூடாது என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன்.

    //அவசியம் ஏற்பட்டால் நான் கூட அத்தொழிலை/ செயலை செய்ய தயாராகவே இருக்கிறேன். //

    நீங்கள் அதைச் செய்விங்களா என்றோ உங்களைச் செய்யச் சொல்லவோ இல்லை.

    //1000 ரூபாய் கொடுத்தால் இழிவு சரியாகி விடுமா?//

    1000 கொடுத்தால் இழிவு போய்டும் என்று சொல்ல வரவில்லை, ரூ 1000 என்று கட்டணம் நிர்ணயம் செய்திருந்தால் செய்து கொள்ள எத்தனை பேர் செல்வார்கள் என்று தான் கேட்டேன்.

    //மருத்துவர் முடி நீக்கினால் அது சுத்தம்.,
    நண்பர் முடி நீக்கினால் அது இழிவு., அவரே அப்படி இழிவாக நினைப்பதில்லை.//

    மருத்துவர் யாரும் நீக்குவது போல் தெரியவில்லை, அதற்கு பிறரை வைத்துதான் செய்கிறார்கள்.

    அவரே அப்படி இழிவாக நினைக்கவில்லை என்றால் அப்படி நினைக்க தோன்றாத நிலையில் தான் நாம வைத்திருக்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு கூடையில் மலம் அள்ளிச் செல்வார்கள், அப்போது அவர்களே அதை இழிவாக நினைக்கவில்லை என்று அரசு கருதி இருந்தால் மலத்தை மனிதன் சுமந்து எடுத்துச் செல்லும் அவலத்தை நீக்கி இருக்க முடியாது.

    ReplyDelete
  13. \\கால் கழுவது கூட நாமலே கழுவிக் கொண்டால் 'உவ்வே' இல்லை. பிறருக்குச் செய்தால் தான் 'உவ்வே',\\

    ’கால்’கழுவுவது சற்றே மனதிற்கு பிடிக்காத செயல்தான். ஆனால் இழிவானது அல்ல . கட்டாயப்படுத்துவதுதான் தவறு.

    வாழ்த்துக்கள் கோவியாரே

    பிறர் என்பவர் யார்? நெருங்கிய உறவு தவிர்த்தா?
    நம் குழந்தை அல்லது பெற்றோர்களுக்கு ஒருநாள் கழுவ வேண்டி வந்தால் மனதிற்கு வேண்டுமானால் உவ்வே ஆனால் அதில் இழிவு ஏதும் இல்லையே,

    பயனடைந்தவர்களின் மன நிறைவைப் பாருங்கள்.

    \\20 ஆண்டுகளுக்கு முன்பு கூடையில் மலம் அள்ளிச் செல்வார்கள், அப்போது அவர்களே அதை இழிவாக நினைக்கவில்லை என்று அரசு கருதி இருந்தால் மலத்தை மனிதன் சுமந்து எடுத்துச் செல்லும் அவலத்தை நீக்கி இருக்க முடியாது.\\

    நம் உடலில் இருந்து வெளியேறும் மலத்தை நம் மனமே அருவெறுப்பு உணர்வோடு பார்க்கும், அப்போது பிற்ர் மனம் என்ன பாடுபடும்? என்றும்,மன உடல் அளவில் துன்பத்தை நீக்கவும்,
    சுத்தம் கருதியும் அரசு செயல்பட்டதாக நான் நினைக்கிறேன். இழிவுக்காக என நினைக்கவில்லை

    ReplyDelete
  14. //பிறர் என்பவர் யார்? நெருங்கிய உறவு தவிர்த்தா?
    நம் குழந்தை அல்லது பெற்றோர்களுக்கு ஒருநாள் கழுவ வேண்டி வந்தால் மனதிற்கு வேண்டுமானால் உவ்வே ஆனால் அதில் இழிவு ஏதும் இல்லையே,
    //

    குழந்தைகளுக்கு பெற்றோர் செய்யாமல் வேறு யார் செய்ய முடியும்.

    மறுபடியும் புரியாதது மாதிரியே கேள்வி எழுப்புறிங்களே ஏன் ?

    காசு தருகிறேன் கால் கழுவி விடுறிங்களா ? காசு கொடுங்க கால் கழுவி விடுகிறேன் ? என்று காசுக்காகச் சொன்னால், அடிமையாக நடத்தினால், நடந்து கொண்டால் அது உவ்வே சமாச்சாரம்.

    ReplyDelete
  15. \\ காசு தருகிறேன் கால் கழுவி விடுறிங்களா ? காசு கொடுங்க கால் கழுவி விடுகிறேன் ? என்று காசுக்காகச் சொன்னால், அடிமையாக நடத்தினால், நடந்து கொண்டால் அது உவ்வே சமாச்சாரம்.\\


    காசோடு தொடர்புபடுத்தாமல், உணர்வோடு தொடர்புபடுத்திவிட்டேன். இப்போது சரிதான்.,

    ReplyDelete
  16. கண்டிப்பாக எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒன்று!
    பதிவிட்டமைக்கு நன்றி!!!

    ReplyDelete
  17. //கலையரசன் said...

    கண்டிப்பாக எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒன்று!
    பதிவிட்டமைக்கு நன்றி!!!//

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ச‌ரியா சொன்னீங்க‌.
    நல்லாருக்கு.

    நன்றி.

    ReplyDelete
  19. \\அக்பர் said...

    ச‌ரியா சொன்னீங்க‌.
    நல்லாருக்கு.\\

    ஆதரவுக்கு நன்றி.நண்பரே

    ReplyDelete
  20. நான் சரியா சொன்னீங்கன்னு சொன்னது. நீங்கள் உடல் தூய்மை பேணுவதைபற்றி சொன்னதற்காக.

    நான் கோவி.கண்ணன் கருத்தை எதிர்க்கவில்லை முற்றிலும் உடன்படுகிறேன் அவர் கருத்துக்கு.

    இன்று வரை என் அக்குளை நானேதான் சேவ் செய்து கொள்வேன்.

    ReplyDelete
  21. \\அக்பர் said...

    நான் சரியா சொன்னீங்கன்னு சொன்னது. நீங்கள் உடல் தூய்மை பேணுவதைபற்றி சொன்னதற்காக.\\

    தாங்கள் பதிவின் உள்ளடக்கத்தை புரிந்து கொண்டதை, நானும் உணர்ந்து கொண்டேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. சில பயனுள்ள தகவல்கள்... ஆனால், இதில் கோ.வி. கண்ணன் கருத்துடன் முற்றிலும் உடன்படுகின்றேன்.

    ReplyDelete
  23. அக்பர், பதி

    நண்பர்களே, கோவியாரின் கருத்துக்களோடு நான் நடுநிலை வகிக்கிறேன். இதற்கு மேல் விளக்கம் வேண்டாம். இந்த அக்குள் விசயம் பதிவின் உள்ளடக்கம் அல்ல என்பதே காரணம்.

    நான் இப்பதிவில் முக்கியப்படுத்தி உள்ளது உணவுப்பாதை சுத்தம்தான்

    ReplyDelete
  24. //என்ன நண்பர்களே, இனி நீங்களும் உங்கள் கழிவுகளின் வாசனையை கவனிப்பீர்கள்தானே, உங்கள் நன்மைக்காக முயற்சித்துப் பாருங்களேன்//

    கருத்து நல்லா இருக்கு... கருத்துக்கலம் எனக்கு பிடிக்கவில்லை (கோவி கண்ணன் கூறியது என் எண்ணங்கள்)

    ReplyDelete

  25. நான் இடுகையோடு முழுதும் ஒத்துப் போகிறேன்...

    சில பின்னூட்டங்கள் திசை திரும்பியதற்கான காரணம், நாட்டின் பின்னணி! அதைத் தவிர்த்து இருக்கலாம். காரணம், இடுகையின் கரு அதுவல்ல. அது ஒரு கிளை....

    ஒரு பெண்ணை மேலைநாட்டில் நீதிமன்றம் கேள்வி கேட்கிறது.. உனக்கு யார் வேண்டும்? சகோதரனா, கணவனா?

    அவள் கூறினாள், எனக்கு சகோதரன் வேண்டும், ஏனென்றால் சகோதரனை விட்டால் இனி ஒரு சகோதரன் கிடையாது எனக்கு. ஆனால், யார் வேண்டுமானாலும் மீண்டும் எனக்கு கணவனாக அமைய நேரிடலாம்.

    இதுவே நம் நாட்டில் பதி பக்தி என்பார்கள். அது போல இடத்துக்கு இடம் மாறுபடும். பற்கள் சுத்தம் செய்கிறார்கள். கையுறை போட்டுக் கொண்டு மலம் கூட அள்ளுகிறார்கள் அமெரிக்காவிலே. ஏனென்றால் அது அவர்களுடைய தொழில்.

    நம் ஊரிலே, திணிக்கப்படுகிறது. எனவே அது பிரச்சினைக்குரிய விசயம் ஆகிறது. இந்த இடுகையைப் பொறுத்த மட்டில் அவர் அதை மழிப்பதில் ஏதும் தயங்கியதாகத் தெரியவில்லை. எனவே அதன் தாக்கம் விவாதப் பொருள் ஆகா என்பதே என் புரிதல்!

    ReplyDelete
  26. \\பழமைபேசி said...


    நான் இடுகையோடு முழுதும் ஒத்துப் போகிறேன்...\\


    நான் எழுதிய கோணத்திலேயே புரிந்து கொண்டமைக்கு மனநிறைவு அடைகிறேன்.

    \\ஊரிலே, திணிக்கப்படுகிறது. எனவே அது பிரச்சினைக்குரிய விசயம் ஆகிறது \\

    சரியாகச் சொன்னீர்கள், சாதி உணர்வோடு, அதிகாரத்தோடு இல்லாமல் எந்தவேலையையும் நாமோ அல்லது பிறரோ செய்வதில் எந்த இழிவும் இல்லை.

    இவ் இடுகையின் பின்னூட்டங்கள் அக்குள் வாசமடிக்காமல் வைத்துக்கொள்வதை பற்றி எழுதியதை முன்னிலைப்படுத்தி கருத்து கூறாமல்
    திசை திரும்பியதில் சற்று வருத்தமே, அதை தாங்கள் போக்கிவிட்டீர்கள்

    அதற்கு நன்றியும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  27. உங்கள் நோக்கம் எனக்கு புரிகிறது.

    நல்ல பயனுள்ள தகவல்.

    இன்னும் நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  28. //திசை திரும்பியதில் சற்று வருத்தமே, அதை தாங்கள் போக்கிவிட்டீர்கள்//

    அய்ய...இது காலங்காலமா நடந்துட்டு வர்றதுதானே... இரு கதை சொல்றங் கேட்டுகுங்க... உண்மைக்கதை...

    தங்கமணி: இந்த வருசம் நான் ஊருக்கு போயே ஆகணும்....

    நான்: சரி போயிட்டு வாங்க...

    தங்கமணி: நான் மட்டும் எப்பிடி குழைந்தைகளக் கூட்டிட்டு...நீங்களும்...

    நான்: அது சரி, போன வருசந்தான் ஒன்றரை மாசம் சுத்திட்டு வந்தேன்...மறுபடியும் விடுப்பெல்லாம் தரமாட்டாங்க....

    தங்கமணி: எனக்கு ஊருக்கு போகலைன்னா மண்டையே வெடிச்சிடும்...செத்தே போயிருவேன்...

    நான்: அது உன்னோட முடிவு...

    தங்கமணி: அலோ, ஆமாங்க அப்பா, உங்க மகன் என்னையச் சாகச் சொல்றாரு... ஊருக்கு கூப்ட்டாலும் வர மாட்டேங்றாரு...

    நான்: அடிப்பாவி, நான் எப்படி உன்னைய சாகச் சொன்னேன்?

    ReplyDelete
    Replies
    1. நல்ல எ;கா கதை.....அருமை

      Delete
  29. உண்மைதான், மனித மன இயல்பை அருமையாக நிகழ்ச்சியின் மூலம் வெளிக்காட்டி விட்டீர்கள்

    இதிலிருந்து கொஞ்சமாவது நாம் வெளியே வரவேண்டும் என்பதே என் எண்ண ஓட்டம்

    ReplyDelete
  30. அன்பின் சிவா

    உடல் தூய்மையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அழகாக எடுத்துக்கூறும் இடுகை - நன்று நன்று

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  31. cheena (சீனா) said...

    //அன்பின் சிவா

    உடல் தூய்மையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அழகாக எடுத்துக்கூறும் இடுகை - நன்று நன்று

    நல்வாழ்த்துகள்//


    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே
    ஒரே சமயத்தில் என் பல இடுகைகளையும் படித்து, பின்னூட்டமும் இட்டு என்னை ஊக்கப்படுத்தியமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  32. //Information said...

    மிகவும் அருமை//

    வாழ்த்துக்களும் நன்றியும் நண்பரே

    ReplyDelete
  33. சிவா உங்கள் தனிப்பட்ட அக்கறைக்கு வணங்குகிறேன். இது பின் ஊட்டம் அல்ல. இந்த மாலை வேளையில் நிறைய வேலை வாங்கி வீட்டீர்கள்.

    1. நீங்கள் சொன்ன செய்தி இது வரையிலும் யோசித்தது கூட இல்லை. ஆனால் தண்ணீர் அதிகம் குடிப்பதால் துர்நாற்றம் குறைவு தான். இதையே இப்போது தான் யோசித்துப் பார்க்கின்றேன்.

    2. இது போன்ற இடுகைக்கு கூட கோவி கண்ணன் கொடுத்த கருத்துரைக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருக்கிறது.

    3. எழிலாய் பழமைபேசி. இந்த பெயரே என்னை பலமுறை அவர் இடுகைக்கு போக வைத்தது. கதிர் மூலம் தான் இப்படி ஒரு இடுகை இருப்பதே தெரிந்தது. உள்ளே நுழைந்தால் அவருடைய கம்பீரம் வரவேற்பது அவருடைய கருத்துக்கள் போன்ற அத்தனை அழகு. அவர் மெனக்கெட்டு முதல் கருத்தும் இரண்டாவது கருத்தும் ( வாய்விட்டு சிரித்த போது படிக்கும் தேவியர்கள் பரிதாபமாய் பார்த்தார்கள்) மிக மிக அற்புதம்.

    4. உங்களும் தெரிந்து ஒரு மிகப் பெரிய திருப்பூர் நிறுவனத்திற்கு திடீர் என்று உள்ளே வந்த அமெரிக்க இறக்குமதியாளர் விமான தளத்தில் இறங்கி நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த மகிழ்வுந்தில் பயணிக்காமல் அவர்களுக்கே தெரியாமல் திருப்பூரில் அவர்கள் நிறுவனம் கண்டுபிடித்து உள்ளே போன முதல் இடம் மொத்த நிறுவனத்தின் கழிப்பறை. பார்த்து விட்டு வெளியே வந்தவர் அந்த ஒரு வருடம் ஒப்பந்தம் 50 கோடியை (ஜட்ட) நிறுத்தச் சொல்லி விட்டு வேறு நிறுவனம் போய்விட்டார். கக்கூஸ் கழுவாமல் இருந்த தினத்தில் தொடங்கியது இன்று பாதி சொத்தும் காணாமல் போய் விட்டது.

    இந்த ஒரு இடுகை, கோவி கண்ணன் கருத்து, பழமைபேசி எண்ணங்கள் ஐந்து வருடங்களை உள்வாங்க வைத்து விட்டது.

    தவறவிட்டது கூட என் உரையாடல் மூலம் வந்து சேர்ந்து விட்டது பார்த்தீர்களா.

    கிடைக்கனும் என்றால் கிடைத்தே ஆகனும். சரிதானே?

    ReplyDelete
  34. \\கிடைக்கனும் என்றால் கிடைத்தே ஆகனும். சரிதானே? \\

    that is nature law இதற்கு என்னோடு பேசியது முயற்சி என்ற வகையில் அடங்கும், முயற்சித்தால் வரவேண்டியது வரும், வேண்டியது நம்பிக்கையும் செயலும் மட்டுமே

    ReplyDelete
  35. குட் போஸ்ட் கபிலன்

    வெற்றிக்கு வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  36. அருமையான , பயனுள்ள பதிவு..
    ஆரோக்கியமான விவாதங்கள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)