"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, July 23, 2009

''சுவாரஸ்ய வலைப்பதிவு விருது''32 கேள்வி பதில் வந்தபோது பதிவுலக நண்பர்களைப்பற்றிய ஓர் அறிமுகமாக இருந்தது. நண்பர்களை அறிந்து கொள்ள முடிந்தது. கூடுதல் விவரங்கள் கிடைத்தன.

ஆனால் இப்போது சுவாரஸ்ய வலைப்பதிவு விருது நண்பர் கதிர் மூலமாக எனக்கு கிடைத்துள்ளது. இந்த விருது செந்தழல்ரவி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட போது,அப்போதிருந்த பதிவுலக சூழ்நிலைக்கு சரியான மாற்றாக இருந்தது.முதலில் கதிர்,செந்தழல் ரவி இருவருக்கும் நன்றிகள்.

இதில் உள்ள முக்கியத்துவம், நமது பதிவு சுவாரஸ்யமாக இருப்பதாக, விருது வழங்கிய நண்பர் நமக்கு தந்திருக்கிறார். இது பலபேருக்கு சென்று சேரவேண்டும் என எண்ணி வழங்குகிறார்.


காரணம் இதுவாக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இந்த விருது வழங்கக் காரணம் அன்பு, அன்பு,அன்பு இதைத் தவிர வேறொன்றும் இல்லை.

பிறருக்கு விருது வழங்குவதும் கொண்டாட்டம், அவர்களை மகிழ்ச்சியடைய செய்வதால் அவர்களோடும் கொண்டாட்டம். இதை நான் பெரிதும் விரும்புகிறேன்

திருப்பி, நாம் விருது வழங்க வேண்டியது ஆறு பேருக்கு என்பதால் விரைவில் வலையுலகம் முழுதும் பரவும். அதாவது அன்பு பரவும்.

எனக்கு பிடித்த சுவாரஸ்யமான பதிவர்களில் சிலர் நான் தினமும் படிப்பவர்கள் என்கிற தலைப்பில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இதற்கு தகுதியானவர்களே. இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்.

ஆகவே நானும் அன்பை வாரி வழங்க விரும்புகிறேன். பிடித்தவர், பிடிக்காதவர்,.. வேண்டியவர், வேண்டாதவர்.., என அனைவரிடத்திலும் என் அன்பை பகிர்ந்து கொள்கிறேன்.

வேண்டியவரிடத்தில் அன்பு காட்டுவது என்பதை நாயும் செய்யும்., மனிதன் நீ, அன்பு மயமாய் அ
னைவரிடமும் இரு என்கிற சாது அப்பாதுரையின் வாக்குக்கேற்ப, அனைவரிடமும், குறிப்பாக வலையுலகத்தில் அனைவரிடத்திலும் நாம் அனைவரும் நட்பு பாராட்டுவோம்., என்கிற செய்தியை அனைவருக்கும் சொல்லி அடுத்த கட்டமாக, விருது வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைப்படி


பாலகுமாரன் பேசுகிறார் தனக்குள்ளே பேசும்,பார்க்கும் வகையில் அமையும் இவரது எழுத்துக்களை படியுங்கள். இவரது ஆன்மீக கதைகள் எனக்கு விருப்பமான ஒன்று.

பூ வனம் தத்துவ கருத்துகள் நிறைய உண்டு எளிமையான உரையாடலாய்.

வெயிலான் திருப்பூர் பதிவர்கள் சங்க தலைவர். பிரபலபதிவர்களால் அறியப்பெற்றவர்.புதியவர்களுக்காக

சாஸ்திரம் பற்றிய திரட்டு ஸ்வாமி ஓம்கார், ஞானமார்க்கம் குறித்து தெளிவான கருத்துக்களோடு செயல்படுபவர்

தமிழில் டாக்டர் ஷாலினி ,உளநல மருத்துவர்,

நெஞ்சின் அலைகள் பிரபஞ்ச அறிவியலை அற்புதமாக தருபவர்.

விருதினை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆறு பேருக்கு விருதினை வழங்க வேண்டும், மேலும்! இந்த விருதினை தங்கள் வலைதளத்தில் போட்டு வைக்கவேண்டும்

ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு மட்டும் இதிலிருந்து [விதியிலிருந்து:)] விதிவிலக்கு.
அவருக்கு அன்பை மட்டும் வழங்கி விருதை நானே வைத்துக் கொள்கிறேன்.


நிகழ்காலத்தில் இருப்போம், அன்பு மயமாய் இருப்போம்.

வாழ்த்துக்கள்

12 comments:

கதிர் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

கதிர் தங்களின் அன்புக்கும் வருகைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

Anonymous said...

சித்தர், அறிஞர், ஆன்மீகர், மருத்துவர், விஞ்ஞானி வரிசையில என் பேரையும் சேத்திருக்கீங்களே சிவாண்ணே!

என்ன கொடுமை இது!

விருதுக்கு நன்றி சிவாண்ணே!

நிகழ்காலத்தில்... said...

//சித்தர், அறிஞர், ஆன்மீகர், மருத்துவர், விஞ்ஞானி வரிசையில என் பேரையும் சேத்திருக்கீங்களே சிவாண்ணே!

என்ன கொடுமை இது//

வருங்காலத்தில் உயர்வடைவீர்கள் என கணித்து முன்னரே விருது கொடுத்திருக்கிறேன்.:))

ஜீவி said...
This comment has been removed by a blog administrator.
நிகழ்காலத்தில்... said...

ஜீவி said...

நண்பரே தனிப்பட்ட உரையாடலாக இருந்ததால்:)

☼ வெயிலான் said...

// வருங்காலத்தில் உயர்வடைவீர்கள் என கணித்து முன்னரே விருது கொடுத்திருக்கிறேன்.:)) //

அப்ப எனக்கு பின்னால ஒளி வட்டம் தெரியுதுனு சொல்றீங்க..... :)

நிகழ்காலத்தில்... said...

ஆமாம், பெரிசா..:)))))

Anonymous said...

சுவாரஸ்ய வலைப்பக்க விருதுக்கு வாழ்த்துக்கள். மென் மேலும் வளர வாழ்த்துகிறேன். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் என்று உங்கள் புரொபைல் இல படித்தேன். நல்ல விஷயங்கள் எழுதிகிற போதெல்லாம் சொல்லுங்கள், நம் வாசகர்களும் படிக்கட்டும்.

அந்த மொட்டை பாஸ் யார்? முறைக்கிரானே?

http://kgjawarlal.wordpress.com

நிகழ்காலத்தில்... said...

kgjawarlal said...

\\சுவாரஸ்ய வலைப்பக்க விருதுக்கு வாழ்த்துக்கள். மென் மேலும் வளர வாழ்த்துகிறேன். ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர் என்று உங்கள் புரொபைல் இல படித்தேன். நல்ல விஷயங்கள் எழுதிகிற போதெல்லாம் சொல்லுங்கள், நம் வாசகர்களும் படிக்கட்டும்.\\

அந்த நோக்கத்தோடுதான் இந்த ப்ளாக் ஆரம்பித்தேன்.ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி

\\அந்த மொட்டை பாஸ் யார்? முறைக்கிரானே?\\

........சின்னவள்:))

cheena (சீனா) said...

அன்பின் சிவா

வைர்து பெற்றமைக்கும் அன்பினை வாரி வழங்கியதற்கும் பாராட்டுகள்

முறைக்கும் சின்னவளுக்கு நல்வாழ்த்துகள்

வாழ்க வையகம் - வாழ்க வளமுடன்

நிகழ்காலத்தில்... said...

cheena (சீனா)

முறைக்கும் சின்னவளுக்கு நல்வாழ்த்துகள்\\

அன்பானவள்தான் :))

வாழ்த்தைச் சொல்லிகிறேன் :)