"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, January 8, 2013

ஆண்கள் சந்தர்ப்பவாதிகளே....

பனியன் தொழில் நிறுவனத்தில் அன்றாடம் தொழிலாளர்கள் மாறுவது மிகச் சாதாரணம். சுமார் ஒரு வாரம் இரண்டு வாரத்திற்குள் அலைவரிசை ஒத்துவரக்கூடியவர்கள்  மனம் ஒத்து தங்களுக்குள் (பால்) உறவை ஏற்படுத்திக்கொள்வது சாதரண விசயம்தான். இதனால். யாருக்கும் நட்டமில்லை.  இங்கே கற்பு என்பதெல்லாம் கக்கூஸ் என்ற் அகராதியில் இல்லாத வார்த்தை போலத்தான் :)

சரி இப்படி இணையக்கூடியவர்களில்  ஒரு கட்டத்தில் சலித்து, இன்னபிற காரணங்களினால் அப் பெண்விலகும்போது இவனும்  புரிதல் உள்ளவனானால் விலகிவிடுவான். அல்லது தவறானவன் எனில் இவனது மிரட்டல் ஆரம்பமாகும். இன்னும் சிக்கலாகும்போது நண்பர்களுக்கு விருந்தாக வேண்டிய அவசியமும் ஏற்படும். இந்த சூழ்நிலைகளும் தனித்தனியாக நடந்தால் பிரச்சினை இல்லை. இங்கே கூட்டணி குழப்பம் வரும்போது பெண்மீதான தாக்குதல் நடைபெறும்.

இது ஓரளவு நடுத்தர வயதுபெண்களாக இருக்கும் பட்சத்தில் ஊடகங்களில் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை . இப்படித்தான் திருப்பூரில் நடுத்தர வயதுப்பெண் மதியவேளையில் , நகரத்தில் முக்கிய இடத்தில், சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் ஆடைகளின்றி தாக்கப்பட்டு மயங்கிக்கிடக்க அது பெட்டிச் செய்தியானது. அத்தோடு மறக்கப்பட்டது.

இதை இங்கே குறிப்பிடவேண்டிய அவசியம் ஆணின் தவறுகளை நியாயப்படுத்துவது அல்ல.. ஆண் தவறு செய்ய பெண் எந்த அளவு இடம் கொடுக்கிறாள் என்பதை கவனத்தில் வைக்கத்தான் ...

ஆண் எப்போதுமே சந்தர்ப்பவாதிதான்....அவனுள் இருக்கும் பரம்பரை மிருககுணம்தான்.. இது ஆண்கள் எல்லோருக்கும் ஜீனின் வழிவந்த குணம்.  ஆண் பெண்ணோடு உறவுக்கு விரும்புவது என்பது உயிரினம் அழியாமல் இருக்க இயற்கை செய்திருக்கிற ஏற்பாடு.. இதில் குடும்ப அமைப்பு என்பதுவும் சந்ததி பெருக்க நடவடிக்கைதான். ஆனால் சந்ததி பெருக்கத்திற்கு மட்டுமின்றி சுகத்துக்கென பாலுறவை ஏற்படுத்திக்கொள்வதில் முதலிடம் மனிதனுக்கு மட்டும்தான்.

டெல்லி விசயத்தில் உடை ஒரு காரணமாக இல்லாதபோதும், எவனோட சுற்றுகிறாள் என்ற் அம்சமே முன்னிலையில்....இங்கே சரி எது தவறு எது நான் ஆராயவில்லை. சூழ்நிலைகளை உருவாக்கியதில் அப்பெண்ணின் பங்கு என்ன என்பதை மட்டுமே பார்க்கிறேன். இத்தாக்குதலில் சம்பந்தபடட் ஆண்களுக்கு தண்டனை அவர்களின் உறுப்பு சார்ந்ததாகவே இருக்க வேண்டும். இது அவர்களுக்கான் தண்டனை. சில வருடங்கள் கழித்தேனும் தூக்கில் இடலாம். இது மற்றவர்களுக்கு எச்சரிக்கைக்காக....இரவு நேர ஊர்சுற்றல் எங்கே கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது . அதனால்  உடை கட்டுபாடு இரவு நேரச் சுற்றல்களை தவிர்த்தால் நன்மை பெண்குலத்துக்குத்தான்..

 பெண்ணைக்கண்டால் ஆண் ஈர்க்கப்படுவது இயல்புதான். இதுதான் பிள்ளையார் சுழி.. மேலும் ஈர்க்கப்படுகிற வாய்ப்பை ஆணுக்கு ஏற்படுத்தித் தரவேண்டாம் என்பதே வேண்டுகோளாய் பெண்களிடத்தில் வைப்பது.

அதைவிட்டுவிட்டு பெண் சுதந்திரத்தில் குறுக்கிடாதே.. ஆடை உடுப்பது அவர்கள் விருப்பம். நீ திருந்து என்றால் என்ன லாஜிக்னு தெரியல.. அடுத்தவரை திருந்து என்று சொல்வதை எளிது. ஆனால் ஒரு பைசா பிரயோசனம் இல்லை. நடக்காத விசயம். ஆனால் தான் திருந்துவது எளிது.
என் வீடு நான் என் விருப்பப்படி (முதுகுல) தான் கதவு ஜன்னல் வைப்பேன். திறந்தும்கூட இருக்கும். நீ என்ன ......க்கு திரும்பிப்பார்க்கிற திருந்து.. திறந்து வச்சிருந்தா உள்ள வந்திருவையா .. இப்படி பெண் பேசினால் அடிபட்டாத்தான் திருந்துவீங்க என்றும் ஒதுங்க வேண்டியதுதான்..

ஒருவேளை பெண்களுக்காக ஆண் பரிந்து பேசினால் கொஞ்சம் நஞ்சம் சைட்டு அடிச்சிட்டு இருக்கிறோம். அது பொறுக்கலையா என்றும் கேட்பதாகவும் எடுத்துக்கொள்கிறேன். :)))))))))))

மற்ற நாடுகளின் சூழல் எனக்குத் தெரியாது. அதனால் இந்தியச் சூழலில். குற்றம் செய்தவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கும் தன்மையான பார்வை அல்ல இது. பாதிக்கப்படுபவர் யாரோ அவருக்கு இந்த எச்சரிக்கை.

திருடனுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்காதே என்றால் அதைச் செய்யாமல் திருடன் திருந்தவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு என்னைப் பொருத்தவரை அநியாயம்தான் :)

 பாலியல் சம்பவங்களில் உடல்ரீதியாக பாதிக்கப்படுபவர்கள் பெண்களே..
படித்தால் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் சற்று பொறுமையாக யோசித்தால் பெண் இடம் கொடுக்காமல் இது நடந்திருக்காது என்பது புரியும் :(

எனவே பெண்கள் பொது இடங்களில் நடத்தையிலும், உடை ஒழுக்கம் காப்பதுவும் மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். தன் உடலை காட்சிப்பொருளாக சற்று நாகரீகமாக காட்டுவது என்பது தான் தற்போதய நவீன உடைக் கலாச்சாரம்.  பெண்கள் இவற்றிலெல்லாம்  தெளிவாக இருந்துவிட்டு, அதன் பின் ஆண்களைத் திருந்தச் சொல்வது பொருத்தமானதாக இருக்கும்.

கோவியாரின் இடுகையைப் படித்தவுடன் ஜிந்திச்சது :)

11 comments:

 1. \\என் வீடு நான் என் விருப்பப்படி (முதுகுல) தான் கதவு ஜன்னல் வைப்பேன். திறந்தும்கூட இருக்கும். நீ என்ன ......க்கு திரும்பிப்பார்க்கிற திருந்து.. திறந்து வச்சிருந்தா உள்ள வந்திருவையா .. இப்படி பெண் பேசினால் அடிபட்டாத்தான் திருந்துவீங்க என்றும் ஒதுங்க வேண்டியதுதான்..\\ இதைச் சொன்னாள் பலர் ஏற்க மறுக்கிறார்கள். ஆணின் மனது இதனால் கெட அவன் கிடைப்பவர்களை டேமேஜ் செய்து விடுகிறான்.

  டெல்லி சம்பவத்தில் எதற்காக அவளை கொலை செய்யம் வரை போனார்கள் என்று விளங்கவில்லை. பஸ்ஸில் அவன் நண்பன் முன்னிலையில் வன்புணர்வு செய்வதில் என்ன சுகம் வரந்து விடும்? அதற்க்கு உடந்தையான பேருந்து ஊழியர்கள் தங்கள் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்காமல் செயல் பட்டது ஏன்? அந்தப் பெண்ணின் உறுப்புக்குள் கையை விட்டு கர்ப்பையை பிடுங்கி......... ஐயோ முடியலை, இதில் என்னத்தடா பாவிங்களா சுகம் கண்டீங்க?

  ReplyDelete
 2. தன்னைக் காத்துக்கொள்ள எதிர்ப்பை காட்டியதுதான் இவனுகளை இப்படி அக்கிரமம் பண்ணத் தூண்டி இருக்கிறது :(

  நான் கேள்விப்பட்ட வரை சிந்திக்க மறுக்கிறவனுக நிறைய இருக்காங்க.. சட்டம் சமுதாயம் பற்றிய அக்கறை எதுவும் கிடையாது. தோணியதைச் செய்கிறவர்களே அதிகம்..:(

  வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயதேவ் ..

  ReplyDelete
 3. வீட்டைத் திறந்து போட்டால் திருடன் வருவான் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் பெண் நேரம் காலம் தெரியாமல் நடந்து கொண்டாள் என்பது என் கருத்து. ஆனால் இந்தக் கருத்தை சொன்னால் ஆணாதிக்கவாதி என்று பெயர் சூட்டுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வீட்டை பூட்டிவிட்டு சென்றாலும் திருடன் வருவான் என்பது என்னுடைய கருத்து.

   Delete
  2. உண்மைதான் விஜய்.. பெரிய கில்லாடி திருடனாக இருப்பான். இந்தக்குற்றங்கள் பத்துக்கு இரண்டு என வைத்துக்கொண்டால்.. வெய்யிற்காலம் வந்தால் பாருங்கள். இரவு தூங்கும்போது திறந்துவைத்துவிட்டு தூங்கினார் காலையில் களவு என்று 10 க்கு 5 செய்தி வரும். இந்த 5ஐ தவிர்க்க பாதுகாப்புதான் தீர்வு.

   Delete
 4. தூத்துக்குடியில் பள்ளி சீருடை சுடிதார் அணிந்து சென்ற பெண் கற்பழித்து கொல்லப்பட்டாள். நான்கு வயது ஐந்து வயது குழந்தைகளை கற்பழிக்கின்றனர். இந்த குழந்தைகளை என்ன மாதிரி உடை அணிய சொல்வது?

  ReplyDelete
 5. @ விஜய்... பள்ளிக்குழந்தைகள் பாதிப்பு அடையும்போது, சம்பந்தபட்ட ஆணின் மனநிலை வக்கிரத்தைக் காட்டுகிறது. இங்கே அவனின் மனநிலை குறித்த தீவிர பரிசீலனை தேவை. குறிப்பாக அவன் வளர்ந்த விதம்,

  இது குறித்த மனம் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்படவேண்டும்.

  குழந்தைகள் பாதுகாப்பிற்கு பெற்றோர் பொறுப்பேற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை :(

  ஆனாலும் பெரும்பான்மையான பாலியல் வன்முறைகள், சுமார் 13 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே நடைபெறுகிறது. அது பற்றியே இங்கே பேசுகிறோம். இருந்தாலும் உங்க்ளின் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்ததே....வாய்ப்பு அமையும் போது இன்னொரு இடுகை எழுதிவிடலாம்.

  ReplyDelete
 6. இது மனித மனம் சார்ந்த பிரச்சனை, ஒரு சமூகத்தின் மனம், அறிவு எப்படி கட்டமைக்கப்பட்டூள்ளது என்பதை ஒட்டியே அந்த மனிதனின், சமூகத்தின் பார்வை, மதிப்புகள் அமையும்.

  கட்டுப்பாடுகளூம் திணிப்புகளும் தற்காலிக தடைச் சுவர்களே அன்றி இந்த பெருநோய் முழுமையாக மாறாது! ஆக இளைஞர்களீன் மனதில் காம எண்ணங்களை எப்படி வக்கிரமாக்காமல் பேரன்பாக்கவேண்டும் என்ற அறிவுதான் அவசியம் இன்றி சாதாரணமான உடையினை ஒழுங்காக உடு, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை முன்னிலைப்படுத்திய‌ பாதுகாப்பாக எடுப்பது முழுமையான பலனை தராது.

  ReplyDelete
  Replies
  1. இளைஞர்களின் மனதில் காம எண்ணங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதுதான் சரியான தீர்வு..இதற்கு ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். வளர்ப்பிலிருந்தே அவர்களை உணரச் செய்ய வேண்டும். இது உடனடிச் சாத்தியமில்லை. தொடர் முயற்சியால் சாத்தியமாகும். இதுதான் அத்தியாவசியமும் கூட..

   உடை ஒழுக்கம் என்பது தற்காலிகத் தீர்வே...முழுமையான தீர்வு அல்ல.. குற்றச் சதவீதத்தை குறைக்கலாம். ஆனால் உடனடியாகச் செய்யக்கூடியதுதான்..

   நன்றி சுமனன். வரவுக்கும் கருத்துக்கும். :)

   Delete
 7. உடல் அமைப்பில் பெண்கள் கவர்ச்சியானவர்கள் அது இயற்கை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலும் இதுதான் உண்மை. ஆண்களுக்கு பெண்களின் சில முக்கிய உருப்புகளை பார்க்கும் போது உள்ளத்தில் சபலம் ஏற்படுவதும் இயற்கையே! எனவே ஆண்களுக்கு சபலத்தை ஏற்படுத்தும்படியான உடைகளை தவிர்த்து டைட்டாக உடையணியாமல் கொஞ்சம் உடலமைப்புகள் வெளியே தெரியாத உடைகளை அணிந்தால் இரண்டு சாராருக்குமே நல்லது. வீட்டை திறந்து போட்டுவிட்டு வெளியே போனால் நல்லவனுக்கு கூட தவறான எண்ணம் வர நாம் காரணமாகிவிடுவோம். வீட்டு பூட்டியிருந்தாலும் தானே திருடு போகுது என்கிறீர்கள். வீடு பூட்டியிருந்தால் கைதேர்ந்த திருடன்தான் உள்ளே நுழைவான். திறந்து கிடந்தா நல்லவனுக்கு சபலம் தட்டுமே! கொஞ்சம் முழுமையாக உடையணிந்தால் தான் என்ன? உங்கள் பாதுகாப்புக்குத்தானே சொல்கிறோம் தாய்மார்களே! நம்மால் மற்றவர்கள் ஏன் சபலபட வேண்டும். தவறான எண்ணம் வர காரணமாக இருக்கணுமா? எங்களுடைய சுதந்திரத்தில் தலையிட நீங்கள் யாரு என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்.?

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)