"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, September 22, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 23

திருக்கையிலாய யாத்திரைக்கு என நான் கொண்டு சென்ற ஒரே பூசைப்பொருள் நறுமணம் கமழும் ஊதுபத்திகள் மட்டுமே..டோல்மாலாபாஸ் உச்சியை அடைந்தபோது, அங்கே நிறைய காகிதத்தால் ஆன கொடிகள் கட்டி அவைகளை இறைவனின் அடையாளங்களாக கருதி அவற்றிற்கு ஊதுபத்தி காட்டி வழிபடுகின்றனர்.
சிவசக்தி ஸ்தலமாக கருதப்படும் இந்த இடத்தில் இருந்துதான் சிவன் மோக மாயை விடுத்து யோகீஸ்வராராக யோகத்தில் அமர கயிலை சென்றார் என்பதும், பார்வதி தேவியின் இருப்பிடமாகவும் நம்பபடுகிறது.அந்த குளிரிலும், சிறு சிறு பனிமழைத் தூரல் இருந்த போதும் யாத்திரீகர்களின் தொடர்ந்த வருகையால் நெருப்பு அணையாமல் இருக்க நானும் ஊதுபத்தியினை ஏற்றி வைத்து வழிபட்டேன்.


கூட வந்த நண்பர்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட எனக்கோ தனியே அமர்ந்து செய்ய வேண்டிய நிலை இல்லாததால் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். கொஞ்ச தூரம் சென்ற உடன் இறக்கம். அதுவும் செங்குத்தான இறக்கம். டோல்மாலாவில் இருந்து வலதுகைப்பக்கம் அதாவது கிழக்கு நோக்கி இறங்க கொஞ்ச நேரம் நடந்தபின் கெளரிகுந்த் எனப்படும் பார்வதி குளம் தென்பட்டது. பார்வதி தேவி டோல்மாலாவில் இருந்து இறங்கி இங்குதான் நீராடுவதாகவும் நம்பப்படுகிறது. தூரத்தில் இருந்து பார்க்க சிறிய குட்டை போல் தோன்றினாலும் இறங்க இறங்க சுமார் 40 அடி அளவில் வட்டமாக குளம் இருந்தது. இந்த குளத்தில் நீர் பெரும்பாலும் பனியாக உறைவதே இல்லை. பனிப்படலம் வேண்டுமானால் இருக்கிறது. குளத்தில் மரகதப்பச்சை நிறத்தில் தெளிவாக நீர் நிறைந்து இருக்கிறது. ஆழம் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன்.

நாங்கள் சென்ற பாதையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் முழுக்க முழுக்க பாறைகளின் மேல் நடந்து இறங்கினால் பார்வதி குளத்தை அடையலாம். பெரும்பாலும் யாரும் அங்கு செல்வதில்லை. தரிசனத்துடன் சரி. காரணம் டோல்மாலா பாஸ் இடத்தை அடைய எடுக்கும் கடும் பிரயத்தனம் ஒரு கர்ரணமாக இருக்கலாம். மளமள வென்று அந்த மலையைத் தாண்டிவிட்டோம்.

யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா
Post a Comment