"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, December 9, 2010

இனிய பயணம் - கேதர்நாத்க்கு..13

08.08.2010 அன்று காலையில் கிளம்பி கேதார்நாத் செல்ல ஆயத்தம் ஆனோம். உத்தர்காசியிலிருந்து ஸ்ரீநகர், குப்த காசி வழியாகச் சென்று கேதார்நாத் அடிவாரமான கெளரிகுந்த்-ல் தங்குவதாகத் திட்டம். பயண நேரம் சுமார் 10 மணி நேரம் ஆகலாம் எனத்தெரிந்ததால் காலை உணவை ஏழரை மணி அளவில் முடித்துக்கொண்டு 8 மணிக்குக்கு பேருந்தில் ஏறி கிளம்பினோம்.



செல்லும் வழியில் கங்கை சூரிய ஒளியில் குளித்த காட்சி


வழியில் பசுமை எங்கும் எங்கும்...


தெஹ்ரி அனையின் முன்புறம் மின் திட்டத்திற்கான நீர் வெளியே வரும் சுரங்க வழிகள்


தெஹ்ரி அணையின் தோற்றம் பரந்த நீர்ப்பரப்புடன்...

அவர்கள் உபயோகத்திற்கு மட்டுமான வின்ச்...


தெஹ்ரி அணை மற்றும் ஸ்ரீநகர் வழியாக வ்ந்தோம். வழியில் மதிய உணவை முடித்துவிட்டு பயணம் தொடர்ந்தோம். மாலை ஸ்ரீ நகர் தாண்டியபோது ஒரு பேருந்தின் ரேடியேட்டர் பழுதாகிவிட்டது. ஆகவே அந்த பேருந்து பயணம் செய்ய இயலவில்லை. இந்த விசயம் தெரியாமல் இரண்டு பேருந்துகள் முன்னர் சென்று விட்டது. பின்னர் அவர்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் திரும்ப வந்து இங்கிருந்து மற்ற பயணிகளையும் அழைத்துக்கொண்டு போக திட்டமிடுதலில், செயல்படுத்துதலில் இரண்டுமணி நேரம் தாமதமாகிவிட்டது,

மீண்டும் தொடர் பயணம். இந்த வழி முழுவதும் இயல்பான பாதையாக சிறு சிறு மலைகளின் ஊடாக பாதை சென்றது.

கங்கையின் பாதையில் நீர் ஓடி வரும்போது சிறு பாறைக் கற்கள் ஓடிஓடி உருண்டை வடிவமாக நிறைய காணாபடுகிறது. அவற்றை நாம் இங்கே பெரிய ஓட்டல்கள் மற்றும் வசதிபடைத்தோரின் அழகுத்தோட்டங்களிலும் அலங்காரப்பொருளாகவே காண முடியும். ஆனால் அங்கோ ரோடோரங்களில் பாதை செப்பனிட உடைத்துபோட ஜல்லிக்கற்களுக்குப் பதிலாக பயன்படுத்துகின்றனர்.:))

ருத்ரபிரயாகை, தில்வாரா ஊர்களைத் தாண்டியபின் பயணம் சற்று திகிலூட்டக்கூடியதாக இருந்தது.

கெளரிகுந்த் அதாவது கேதார்நாத் பயணத்தின் வாகனங்கள் செல்லக்கூடிய கடைசி இடத்தில் இரவு தங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஸ்ரீநகரில் இரண்டு மணி நேர காலதாமதம் குப்த காசியில் தங்க வேண்டியதாயிற்று.கெளரிகுந்த்ல் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட அறைகள் கேன்சல் செய்யப்பட்டது. இரவு பயணத்தில் உள்ள சிக்கல் வழியில் உள்ள செக்போஸ்ட் அனுமதி கிடைக்காது.

குப்தகாசியில் இரவு தங்கிவிட்டோம். இரவு நேரம் 11 :) குளிர் வாட்டி எடுத்தது. அங்கிருந்து 30 கீமியில் கெளரிகுந்த், மீண்டும் 9.08.10 அன்று அதிகாலை 5 மணிக்கு கிளம்பி கெளரிகுந்த் சென்று அடைந்தோம்.காலை 6.15க்கே கேதார்நாத் சென்று அடைந்துவிட்டோம். இங்கேயும் ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. ஆனால் சூடு மிகவும் குறைவாகவே இருந்தது. வெந்நீர் வரும் பாதையில் சிவனின் வாகனமான காளை முகத்தை வைத்து (உலோகத்தில்) அதிலிருந்து தண்ணீர் வருமாறு அமைந்த்திருந்தார்க்ள்.


அதைத் தாண்டி உள்ளே சென்ற போது வழியிலேயே டோங்கா எனப்படும் ஒருவர் உட்கார்ந்து செல்லும் வகையில் அமைந்த டோலியைக் கண்டோம்.
மலைமீது ஏறி தரிசனம் பார்க்க வேண்டும் என்ற நமது விருப்பத்தை, பணத்திற்காக என்றாலும் மிகுந்த சவாலாக இதை அவர்கள் செய்வது மனதை ஏனோ சஞ்சலப்படுத்தியது.


இந்த குறுகலான கடைப்பகுதியத் தாண்டி சென்றவுடன் அங்கே மலை மீது செல்ல குதிரைக்காரர்கள் 1400 ரூபாய் சொன்னதை 800 க்கு பேசிமுடித்தோம். வழியிலேயே சுமார் 10 கிமீக்கு முன்னதாக பேருந்தில் இருவர் ஏறிக்கொண்டு குதிரை ஏற்பாடு செய்ய பேரம் பேசினர். நடந்து வரும் வழியிலும் பலர் கேட்டனர். ஆனால் எதற்கும் பிடி கொடுக்காமல் இருந்தோம். அப்போதுதான் நாம் பணத்தில் ஏமாறாமல் இருப்போம்.

குதிரைக்காரர்களுடன் பணம் கீழே திரும்பி வந்தவுடன் தருவதாகப்பேச்சு. எங்களுடன் வந்த நண்பர் ஒருவர் இந்தி தெரிந்ததால் தெளிவாக பேசிவிட்டார். அவர்கள் அடையாள அட்டை எங்களிடத்தில் தரப்பட்டது. இதுதான் இருவருக்குமே பாதுகாப்பு குதிரைக்காரர்களின் லைசென்ஸ் அட்டை அது.எனவே நம்மிடம் ஏமாற்ற முடியாது.

நமது வலையுலக இளவல் கேதார்நாத் பயண அனுபவத்தை என்னை விட விரிவாக எழுதி உள்ளார். அதையும் ஒரு தடவை படித்துவிடுங்கள்:)


மலை மீது குதிரையில் ஏற ஆரம்பித்தோம். எனக்கு குதிரை குறித்தான அச்சம் ஏதும் இல்லை. மனதினும் இராஜாக்கள் போன்ற கம்பீர உணர்வு பெருக சுலபமாக குதிரையை ஒரு கையால் பிடித்து கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.

நிகழ்காலத்தில் சிவா

5 comments:

  1. அழகான படங்கள் - வித்தியாசமான படங்கள் - ம்ம்ம்.....

    ReplyDelete
  2. மிக அருமையான, கொஞ்சம் ஆபத்தான பயணமும் கூட..நான் எழுதிய கேதார்நாத் பயணம் http://amuthakrish.blogspot.com/2009/09/blog-post_15.htmlம்

    ReplyDelete
  3. படங்கள் அருமை. தொலை தூர சுற்றுலாக்களுக்கு செல்ல முடியாவிட்டாலும், இம்மாதிரியான பதிவுகள் நம்மை அழைத்து சென்ற நிறைவு.

    ReplyDelete
  4. என்னதான் யாத்ரீகர்களின் வசதிக்காக என்றாலும் மனிதனை மனிதனே சுமந்து செல்லும் டோங்கா பார்ப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு..

    படங்கள் அனைத்தும் அருமை..

    ReplyDelete
  5. நீங்கள் காட்டியுள்ள வனங்கள் ஆறுகளைப் பார்க்கும் போது சபரிமலைக்குச் சென்ற போது இரண்டு புறமும் பார்த்த காடுகள் நினைவுக்கு வந்து போகின்றது.

    இறையருள் என்பது இருக்கும் இடத்திலேயே மனதால் உணர முடியும். இது போன்ற ஏகாந்த எண்ணங்களை நமக்கு உணர வைப்பது இது போன்ற பயணங்களும் பார்க்கும் வேறுபட்ட காட்சிகளுமே.

    சாமி ஐயா போலவே சமீபத்தில் நான் பார்த்த மற்றொரு பெண்மணியும் இந்த பயணத் தொடரை எழுதிக் கொண்டுருக்கிறார். (வலைதளம் பெயர் சட்டென்று நினைவில் வரவில்லை)

    சொல்லும் வார்த்தைகளும் ஒரே மாதிரி கொண்ட சிவா என்றுமே சிவன் தான்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)