"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, June 14, 2017

குருவை உணரும் வழி - ஓஷோ

அன்புக்குரிய போதிச் சத்துவர்களே.. என்று உங்களை நான் அழைக்கும்போது, என்னுடைய அறிவு நிலையில் நின்று பேசவில்லை. 

என் உயிரினை உங்களின் உயிருக்குள் கொட்டுகின்றேன்.

இது சக்திகளின் சங்கமம். ஆன்மாக்களின் சந்திப்பு. அதனால்தான் என்னோடு நீங்கள் இருக்கும்போது நான் பேசுவது சத்தியம் ஆகத் தெரிகின்றது. உங்களால் முழுமையாக நம்ப முடிகின்றது.

ஆனால் நான் இல்லாதபோது சந்தேகங்கள் பிறக்கின்றன. உன் பழைய மனம் வெஞ்சினத்தோடும், கூடுதல் வலிமையோடும்  உன்னிடம் வருகின்றது.. 

நீயா போதிச் சத்துவர்? உன்னிடத்தில் பொறாமை இன்னும் இருக்கின்றதே ? இப்போதும் கோபப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றாய்.? இன்னும் அவள் மீது ஒருகண் வைத்திருக்கின்றாயே ?குரு உன்னை வேடிக்கைக்காக அப்படி அழைத்தார். அதை உண்மை என நம்பாதே  என்று உன்னிடம் உரத்து ஒலிக்கின்றது. 

இதனால் சந்தேகங்கள் உன்னுள் எழுகின்றன. என்னிடம் இருக்கும்போது உன்னைச் சுற்றி வெளிச்சம் இருக்கின்றது. அந்த வெளிச்சத்தில் உனக்கு எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன. என்னோடு இல்லை எனும்போது இருட்டு வந்து விடுகின்றது. தெளிவாகத் தெரிந்தவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமாகிப் போகின்றது. நம்பிக் கொண்டிருந்ததின் மேல் அவநம்பிக்கை கொள்கிறாய். சில கணத்துக்கு முன்னர்கூட வெளிச்சத்தில் இருந்தோம் என்பதைக் கூட நம்ப முடிவதில்லை.

காரணம் நீ என்மீது வைத்திருக்கும் பக்தி முழுமையானதுஅல்ல.. ஆழமானது அல்ல. இன்னும் சில மூலை முடுக்குகளை உங்களுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு தனியாக, உங்களுக்கு மட்டுமே உரியதாக வைத்துக் கொண்டு இருக்கின்றீர்க்ள். உங்களுடைய நெஞ்சங்களை முழுக்கத் திறந்து வைத்திருக்கவில்லை. மனதளவில் முழுநிர்வாணமாகத் தயார் இல்லை.

உனக்கும் எனக்குமான இடைவெளியை இதுவே நிர்ணயிக்கின்றது. என்னிடமிருந்து விலகி இருக்கும்போதும், என்னைக் காணமுடியாத போதும் கூட, என்னோடு இருப்பதை உணர்ந்திருக்க முயற்சி செய். சரணாகதி அடை. குருவின் அணுக்கத்தை ஓர் நித்திய அனுபவமாக்கு.

ஓஷோ 
தம்மபதம்

No comments:

Post a Comment

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)