"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, July 9, 2013

பொதிகை மலை பயணத்தொடர் 3

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வனத்துறை கேம்ப் தாண்டினோம். யானைகள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கவே தேவையில்லாமல் சுற்றிலும் அகழி...(காலை 9.20)சுற்றிலும் நிஜமாகவே யானையை உள்ளே இறக்கிவிட்டால் தெரியாது. அந்த அளவு ஆழம், அகலம், கோவைப்பகுதியில் யானைக்கான அகழி (?) தோண்டி இருப்பதைப் பார்த்தால் வெள்ளாடு கூட தாண்டிக்குதித்துவிடும். அப்படி இருக்கும். இந்த குழிக்குள் தப்பித் தவறி நாம் விழுந்தால் வேறொருவர் துணையின்றி மேலே ஏற முடியாது :)  தாண்டிச் செல்ல இரண்டு குச்சிகளை கட்டி வைத்திருக்கின்றனர்.. சில சமயங்களில் அங்கே தேநீர் கிடைக்கும்.

அதைத்தாண்டியவுடன் சட்டென பாதை ஏதுமின்றி காலடிப்பாதை மட்டும்தான். இப்படியேதான் போகனுமோன்னு குழப்பம் வர நடந்தோம். ஆனால் நல்ல வேளையாக இது ஒரு குறுக்குப்பாதை.. பழைய பாதையுடன் இணைந்து விட்டது :)


வழியில் கண்ட வண்ண மலர்கள். நேரம் காலை 9.30
தொடர்ந்து நாங்கள் நடந்தபோது காலை 9.45 கீழ் கண்டவாறுதான் பாதையின் பாதிப்பகுதி இருக்கும். காய்ந்த இலைதழை கீழே கிடக்க, அவ்வப்போது பெய்யும் மழை அதை ஈரமாக்கி, இற்றுப்போகச் செய்ய சுற்றிலும் நெருக்கமாக மரங்கள் மனதை எளிதில் தன் வசமாக்கிவிடுகின்றன :)படங்கள் எல்லாம் பொதிகை மலைப்பாதையில் எடுக்கப்பட்டவை என்பதற்கான சான்றும், வரலாறும் முக்கியமல்லவா :) அதற்காக ஒன்று......


காலை 9.50 பாதையில் இது வரை நான் பார்த்திராத  மரத்தின் அடிப்பாக அமைப்பு, மரத்தின் அகலம் சுமார் 15 அடி முக்கோண உயரம் சுமார் 10 அடி,  உயரம் அண்ணாந்து பார்த்தால் தெரியவில்லை :) கூட்டல் குறி நிலத்தில் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரம் வேர் விட்டிருக்க புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.10 மணிக்கு சிறிய நீரோடையை அடைந்தோம்.


நீளம் கருதி நாளை தொடர்வோம்.

நிகழ்காலத்தில் சிவா

10 comments:

 1. Replies
  1. பயணங்களில் ஆர்வமுடையவரல்லவா நீங்கள் :) நன்றி

   Delete
 2. படங்களின் மூலம் நாங்களும் பயணப்பட்டோம்...

  ReplyDelete
  Replies
  1. பலவரிகளில் எழுதுவதை, ஒரு படம் காட்சியாக்கி உணர்த்திவிடும்..

   அதனால் படங்களுக்கு முக்கியத்துவம் :)

   வரவுக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்...

   Delete
  2. can i have your contact details to clarify some doubt about the reservation for this trip & etc

   Delete
  3. தேவையான விசயங்களை இங்கே முடிந்தால் கேளுங்கள்.. இல்லையெனில் arivhedeivam@gmail.com க்கு உங்கள் சந்தேகங்களை அனுப்புங்கள். அல்லது தொலைபேசி எண்ணை எனக்கு அனுப்பி வையுங்கள் அழைக்கிறேன். வெங்கட்

   Delete
 3. சிவா...

  உடன் பயணிப்பதைப் போல உணர்கிறேன்...!

  உங்களோடு சேர்ந்த செல்ல வேண்டிய பயணங்கள் காத்துக்கிடக்கின்றன. காலம் சரியான நேரத்தில் நம்மை ஒருங்கிணைக்கும்.

  ReplyDelete
 4. நல்ல நல்ல இடங்களை தேர்வு செய்து பயணிக்கிறீர்கள், தொடரட்டும் உங்கள் ஆன்மீக பயணம்

  ReplyDelete
 5. நல்ல நல்ல இடங்களை தேர்வு செய்து பயணிக்கிறீங்க, தொடரட்டும் உங்கள் ஆன்மீக பயணம்

  ReplyDelete
 6. பசுமை கொட்டிக் கிடக்கின்றது.

  ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)