"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, June 20, 2012

மூச்சு விடுவது எப்படி ?

நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம்.  படிக்கலாம் அல்லது  ஓய்வில் இருக்க்லாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக்கவனித்து இருக்கிறோமா?

அதென்ன மூச்சைக் கவனித்தல்? மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.?


போதும் . மேலோட்டமாகவே பார்ப்போம். நாம் உட்கார்ந்து செய்யக்கூடிய வேலை எதுவாயினும் உடல் பொதுவாக நிமிர்ந்த நிலையில் இருக்காது என்பதைக் கவனியுங்கள். மூச்சு எண்ணிக்கை அல்லது மூச்சின் நீளம் குறையக் காரணம் பல இருந்தாலும் முக்கியமானது நேராக உட்காராமைதான் :)

மூச்சுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். செத்தா போய்விட்டுவோம்? உடல் அதற்குத் தேவையான அளவு மூச்சை எடுத்துக்கொள்ளத்தானே செய்யும் என்றால் ஆமாம். ஆனால் அந்த மூச்சு உயிரோடு இருக்கப் பயன்படுமே தவிர நம்மை உயிர்ப்போடு வைத்திருக்காது.

மூச்சு இழுத்துவிடுவதில் உடனடி பலனை இரத்தம் பெறுகிறது. இரத்தம் வளமானாலே நோய் என்பது உங்களை விட்டு தூர விலகிவிடும்.

மூச்ச இழுன்னு சொன்னா நமக்குத் தெரிஞ்சதெல்லாம் டாக்டர் நெஞ்சுல ஸ்டெதஸ்கோப்ப வச்சுக்கிட்டு மூச்ச இழுக்கச் சொன்னதும்,  வயித்த எக்கி நெஞ்சுக்கூட்ட உயர்த்தி தம் கட்டி மூச்ச்ச இழுக்கறதுதான் தெரியும் :). இப்படி இழுக்கும்போது  நுரையீரல் நிறைய காற்று நிரம்புவது போல் தெரிஞ்சாலும் உண்மையில் சற்றே அதிகம் இழுக்கிறோமே தவிர முழுமையாக காற்றை இழுப்பதில்லை.

சரி மூச்சை சரியான விதத்தில் இழுப்பது எவ்வாறு? தபால்ல நீச்சல் பழகுவதுபோல இந்த இடுகையில், எழுத்தில், எப்படி மூச்சு விட்டுப் பழகுவது?:)

முதலில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, நுரையீரலில் காற்றை இழுப்பது என்பதற்கு பதிலாக, மூக்கின் வழியே காற்றை ஊற்றுவதைப் போன்ற உணர்வுடன் காற்றை மிக மெதுவாக இழுத்துப் பாருங்கள்.

இதைச் சரியாகச் செய்கிறோமா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்தானே., எவ்வாறு?...

காற்று நுரையீரலின் கீழ்பகுதியில் நிறையும் போது அடிவயிற்றின் முன்புறங்கள் முன்னோக்கி வரும். அடுத்து இயல்பாக நெஞ்சுக்கூடு, விலா எலும்புகள் விரிவடையும். மேலும் காற்று நிறைய நிறைய உடல் இன்னும் நிமிர்ந்து அடிவயிற்றின் கீழ்பாகம் சற்றே உள்நோக்கி நகரும். இந்த நிலையில் காற்று இழுப்பது தானாக நின்றுவிடும். மிகச்சில நொடிகள் இயல்பாக தம் கட்டாமல் காற்றைப் பிடித்து வைத்துவிட்டு இயன்ற அளவு மெதுவாக மூச்சுக்காற்றினை வெளியேற்றவும். வெளியேற்றும்போது அடிவயிற்றினை சற்று இறுக்கி காற்றை வெளியேற்ற வேண்டும் காற்று வெளியே போனதும் நெஞ்சினையும் அடிவயிற்றினையும் நன்கு தளர்த்தி விட்டுக்கொண்டு மறுபடியும்  துவங்கவும்.

இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள். உணவு உண்டவுடன் மிதமாகச் செய்யுங்கள். கிடைக்கும் நன்மைகளை எனக்கு நீங்கள் பட்டியல் இடுவீர்கள்.:))

சாதி, மதம், இனம், அரசியல் தாண்டி உடல்நலம், மனநலம் என்பது எல்லோருக்கும் பொதுதான். அதுபோல் காற்று எல்லோருக்கும் பொதுதான். அதை முறையாக பயன்படுத்திப்பாருங்களேன் இலவசமாக :)

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

15 comments:

  1. Replies
    1. மகிழ்ச்சி தனபாலன். தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் :))

      Delete
  2. I was looking for this info Every where. In Toronto, Canada its hard to learn these things from yogi's. I am really happy to read this from you blog. God bless you my friend. Thanks

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி மாறன். :)


      உள்ளத்தில் தேடுதல் தீவிரமாக இருந்தால் தேவையானது கிடைக்கும் என்பதற்கு உங்களின் வார்த்தைகளே சாட்சி.,

      நன்றி வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்...

      Delete
  3. மாறன்,
    அவ்வப்போது மூச்சுப் பயிற்சி செய்யும் பழக்கம் உடையவன் நான்.

    உங்கள் பதிவைப் படித்த பிறகு, இனி நாள் தவறாமல் செய்வதென்று முடிவெடுத்திருக்கிறேன்.

    மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் பரமசிவம் அவர்களே..வருகைக்கும் கருத்துக்கும்...

      -- நிகழ்காலத்தில் சிவா

      Delete
  4. தங்கள் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன்.
    மன்னியுங்கள் சிவா.

    ReplyDelete
  5. Breathe is everything, if it is at its proper way, man will be in proper life.

    Nice post, keep rocking..!!

    ReplyDelete
  6. அறிந்து கொண்டேன் ...
    நன்றி......

    ReplyDelete
  7. நல்ல தகவல்கள் , கூகுல் பிளஸ்சில் பகிர்ந்துவிட்டேன்

    ReplyDelete
  8. அன்பின் சிவா - நல்லதொரு பதிவு. முயல்வோம். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. நிறைய பயனுள்ள விடயங்கள் ஆாரயப்படுவது,
    எனக்கு பிடிதுள்ளது..

    நன்றியுடன் ஜீவா.

    ReplyDelete
  11. மனுக்ஷ குஞ்சுகளுக்கு நீஞ்ச... மன்னிக்க, மூச்சு விட கற்றுக் கொடுத்தீர்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)