"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, February 8, 2011

சதுரகிரி மலைப் பயணம். பகுதி 3

ஒருமுறை சதுரகிரிமலை ஏற சாதாரணமாக நமக்கு 5 மணி நேரம்  ஆகும். இந்த சுமைதூக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதரணமாக ஏறிஇறங்குகின்றனர்.  சீசன் சமயங்களில் மூன்று முறை கூட ஏறுவார்களாம். முதல் மலை அதிக ஏற்றஇறக்கம் இன்றி சிரமம் இன்றி இருந்தது.  இன்னும் செல்லச் செல்ல  வழியில் தென்பட்டது குதிரை ஊத்து....கூர்ந்து கவனித்தால் இரண்டு பாறைகளுக்கு இடையே கனமான வேர் ஒன்றை கட்டி வைத்து இருக்கிறார்கள். அதைப் பிடித்துக்கொண்டே போகலாம்...நாங்கள் சென்ற காலம் டிசம்பர் 25 என்பதையும் தமிழகத்தில் பெரு மழைக்காலம் முடிவுற்ற சமயம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். பளிங்கு போன்ற நீர் ஓடிக்கொண்டு இருந்தது.

அதைக்கடந்து இன்னும் மேலே செல்லச் செல்ல வழுக்குப்பாறை என அழைக்கப்படும் படிவெட்டிப்பாறை இருந்தது. படி வெட்டாததற்கு முன் வழுக்கியதால் இந்தப்பெயர் வந்திருக்கலாம். படிகள் மிகச் சிறியதாக இருந்தாலும் பயமின்றி நடக்கலாம். இதே போன்ற இன்னும் அதிகம் படிகொண்ட பாறை ஒன்று மேலே செல்லம்போது இருந்தது:))


அந்தப் பாறையிலிருந்து மறுபுறம் கீழே தேங்கி இருக்கும் நீர்....நன்றாக ஓடி ஆடி  குளிக்கலாம். ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டுதான் இறங்க வேண்டும். ஆழம் அதிகம் இல்லை.

 அதே பாறை மேலிருந்து கீழ் நோக்கிய பார்வையில்................

பயணம் தொடரும்..
நிகழ்காலத்தில் சிவா
Post a Comment