"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, September 25, 2008

கை கூப்புவது யார்?

வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருளுரை-1
அன்பொளி பிப்ரவரி-1983 இதழில் இருந்து



கை கூப்புவது யார்?

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்” (அதிகாரம் 26: புலால் மறுத்தல்)

ஒரு மனிதன் ஒரு உயிரினிடத்து அன்பு காட்டினால், அவ்வுயிருக்கும்
அம்மனிதனிடத்து அன்பு மலர்வது இயல்பு.
மற்ற உயிர்களை விட மனிதனிடம் அமைந்துள்ள சிறப்பு என்ன என்றால்
அது ஆறாவது அறிவு ஆகும்.
மனம், உயிர், மெய் எனும் மூன்று மறை பொருட்களையும் அறியும்
திறமே ஆறாம் அறிவின் சிறப்பாகும்.
இந்த நுண்ணறிவால் பிற உயிர் உணர்தலாக பெறும் இன்பத்தின் அல்லது
துன்பத்தின் அளவை யூகித்து உணர்ந்து கொள்கிறான்.
இரக்கம் கொண்டு தக்க உதவி செய்து, பிற உயிரின் துன்பத்தைப் போக்குகிறான்.
இது ஆறாம் அறிவானது சிந்தனைத்திறன் பெறும்போது அதில் விளையும்
நற்பண்பு ஆகும்.

ஆயினும் மனிதன் உருவப் பரிணாமத் தொடரில் ஐயறிவு உயிர்கள் மூலமே
வந்துள்ளதால்,புலால் உணவு உண்ணும் பழக்கம் கருவமைப்புப் பதிவாக உள்ளது.
எனவே உலக சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் புலால் உண்பதை வழக்கமாகக்
கொண்டுள்ளனர்.
மனிதனது சிந்தனையாற்றல் உயரும்போது, பிற உயிர்கள் பெறும் இன்ப துன்ப
அளவினை யூகித்து உணரும் உயர்வு பெற்றபின் அவனுக்கு ஒரு விழிப்பு
ஏற்படுகிறது.

புலால் உண்பதால் உயிர்க்கொலை எனும் கொடுஞ்செயல் விளைவதை உணர்கிறான்.
புலால் உணவைத் தவிர்க்கிறான்
பல பிறவிகளாகத் தொடர்ந்து வந்த பழக்கத்திற்க்கும், ஆறாவது அறிவு சிந்தனை
நிலையில் உயர்ந்ததால் விளைந்த விளக்கத்திற்க்கும் இருந்த முரண்பாடு நீங்கிவிடுகிறது.
மகிழ்ச்சியடைகிறான்; மன அமைதி ஏற்படுகிறது.---(தொடரும்)


அருள்நிதி சிவசுப்பிரமணியன். sivasubramanian.d@in.com
---------------------------------------------------------------------------------
மேலும் விவரங்களுக்கு

http://vethathiri.org/Home/

உலக சமுதாய சேவா சங்கம்
26, 11.வது கடல் நோக்குச் சாலை,
வால்மீகி நகர்,
திருவான்மையூர்,
சென்னை - 600 041.
போன் 044 - 24411692
e-mail : chennai@wcsc.info
website : www.vethathiri.org

3 comments:

  1. பரிசோதனைப் பின்னூட்டம்..

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. புலால் மறுப்பு தேவைதானா - இன்றைய நிலையில் - உண்ண இயற்கை உணவுகள் இல்லாத நிலையில் புலால் உணவு உண்னலாமே - குறள் எழுதப்பட்ட காலத்தில் இயற்கை உணவுகள் அதிகம் இருந்த போது புலால் மறுப்பு தேவைப்பட்டது. அவ்வளவுதான்

    நல்வாழ்த்துகள் சிவசு

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)