"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, October 6, 2011

திருக்கைலாய யாத்திரை நிறைவு செய்தல்

திருக்கைலாய யாத்திரை ஆரம்பித்தபோது நாங்கள் நேபாளில் காட்மாண்டு சென்றபின் அன்றய தினமும் அதற்கு அடுத்த நாளும் தங்க வேண்டியதாயிற்று. அப்போது நேபாளத்தில் பசுபதி நாதர் கோயில் சென்று தரிசனம் செய்தோம்.இங்கு புகைப்படம் எடுக்கத் தடை இருப்பதால் எதுவும் எடுக்கவில்லை. இங்கு பசுபதிநாதர் சிவலிங்கத்தில் நான்குமுகங்களோடு காட்சி அளிக்கின்றார். தரிசனம் முடித்த பின் அன்றைய தினம் மதியம் தங்கி இருந்த ஓட்டலில் ஓய்வு. மாலை பயணம் குறித்த விளக்க மீட்டிங்.
அதற்கடுத்த நாள் 7ந்தேதி ஜீன் 2011, காலை
பக்தாபூர்
  இங்கு புகைப்படங்கள் நிறைய எடுத்தேன். இந்த நகரத்தை சுற்றி வர நேரம் போதவில்லை. எல்லா இடங்களிலும் மரங்களினால் ஆன சிற்பங்கள் வேலைப்பாடுகள் என பார்க்க பார்க்க சலிப்பே ஏற்படவில்லை. புகைப்படங்களில் சிறந்தவை என தேர்ந்தெடுப்பதில் மலைபே ஏற்பட்டது. அதனால் இந்த புகைப்படம் ஹிஹி...



இதன்பின் பெளத்தர் கோவில் சென்று வந்தோம்..எந்நேரமும் தனியறையில் தீபங்கள் எரிந்து கொண்டே இருந்தன. அதை இரு வெளிநாட்டவர் தொடர்ந்து பராமரித்துக்கொண்டே இருந்தனர். கோவிலைச் சுற்றி வந்தபின் வெளியே நிறைய புறாக்கள் இருந்தன. அவற்றையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.



மதிய உணவிற்குப்பின் சயனகோலத்தில்  விஷ்ணு இருந்த தலத்திற்கு சென்றோம்.




அடுத்ததாக சற்று உயரமான மலை ஒன்றில் இருந்த சுயம்பு புத்தா கோவில் தரிசனம் செய்தோம். இங்கு கற்களால் ஆன நிறைய வடிவங்கள் இருந்தன. இந்த கோவிலும் கண்டிப்பாக பார்த்து தரிசனம் செய்ய வேண்டியதே. இதன்பின் ஓட்டலுக்கு திரும்பி வந்தோம்.



மேற்கண்டவிதமாக திருக்கைலை யாத்திரையில் ஒருபகுதியாக நேபாள் திருத்தலங்களுக்கும் சென்று வரவேண்டி இருந்தது.

இதுவரை இந்தத் திருக்கைலையாத்திரை தொடரை எழுத வாய்ப்பு அளித்த கையிலைநாதரை வணங்கியும், நீண்ட தொடராக இருப்பினும் கூடவே வந்து படித்தும், பாராட்டியும், ஊக்க்ப்படுத்திய என் நெருங்கிய நட்புகளுக்கு நன்றியறிதலையும் அன்பையும் தெரிவித்து இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவசிவசிவ ஓம்

நிகழ்காலத்தில் சிவா

17 comments:

  1. சிறப்பாக உங்கள் அனுபவங்களை பகிர்ந்தீர்கள். நன்றிகள் ஆயிரம்

    ReplyDelete
  2. சிறப்பான விளக்கங்களுடன் திருக்கைலாய யாத்திரை கட்டுரையாக பதிவிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. திருக்கயிலாய யாத்திரையை இறைவன் அருளால் முடித்து வந்தமைக்கும், அதைச் சிறப்புற பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. சிறப்பான கட்டுரை!

    ReplyDelete
  5. மிக அருமையான இயற்கையை ரசிக்கும் ஆன்மீகப் பயணம். அத்துடன் உங்களின் தொகுப்பும், புகைப்படங்களும் அதை மேலும் சுவாரசியமாக்கியது.

    ReplyDelete
  6. தங்கள் கைலாய யாத்திரை அனுபவங்களை அருமையாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..

    ஓம் நம சிவாய...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  7. அருமையான பயணக் கட்டுரை. நாங்களும் உங்களோடு வந்தது போலவே உணர்ந்தோம்.

    ReplyDelete
  8. அருமையான தொடர் மிக நீண்ட பதிவென்று நீங்கள் சொன்னாலும், எங்களுக்கு கைலை தரிசனம் பெற ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது, பின்னெப்போதாவது நானோ எனது நண்பர்களோ செல்லும் வாய்ப்பு ஏற்ப்பட்டால், இந்த தொடரில் படித்தவை எல்லாம் எங்கள் பயன்க்குரிப்புகலாக ஆகும், தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் சகல ஐஸ்வர்யங்களும், உடல் மன வலிமையையும், வழங்கட்டும், ஓம் நமச்சிவாயன் வாழ்க , நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் மனதில் நீங்காதான் தாள் வாழ்க,,,,,,,,,,,,,

    ReplyDelete
  9. மன்னிக்கவும், நண்பரே!!! தங்கள் சென்று வந்தமை பற்றி சொன்னது நல்லது, தங்கள் இந்த பயணத்தை துவங்க யாரை தொடர்பு கொண்டீர்கள், அதற்க்கான செலவு இதைப்பற்றி கொஞ்சம் சொல்லி இருந்தால் , இந்த பதிவை படிக்கும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது, எனது சிறிய ஆசை,,,,
    இன்னொரு பதிவாக போட்டாலும் நல்லது, யோசித்து சொல்லவும்,

    ReplyDelete
  10. http://www.sooryayatra.blogspot.com/

    கேரளாவைச் சேர்ந்த இந்த யோக அமைப்பினருடன் சேர்ந்தே சென்றோம். பயண செலவு ரூ.120000

    ஆனால் பயண ஏற்பாடுகள் சிறப்பாக இல்லை பணத்துக்கேற்ப..:) சில அதிருப்திகளும் எனக்கு இருப்பதால் இதை சிபாரிசு செய்யவில்லை.

    அடுத்த முறை கவனகர் சார்பாக புதிய குரூப் செல்ல வாய்ப்பு உண்டு. குறைகள் களைந்து நிறைவாக இருக்க திட்டம் உண்டு.

    உறுதியானதும் எனது வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துவிடுகிறேன் ஸ்பார்க் கார்த்தி

    ReplyDelete
  11. வாழ்த்திய மற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்...

    ReplyDelete
  12. http://sooryayatra.blogspot.com/2011/08/blog-post_23.html

    மேலும் நிறைய புகைப்படங்கள் தொகுப்பிற்கு...

    ReplyDelete
  13. Dear All,
    I was reading the wonderful travelogue by Shiva, and I do read the comments for readers. Just to share the fotos I took when I went to Kailsh Manasarovar yatra last August.

    https://picasaweb.google.com/112898025575980237592/Kailash?authkey=Gv1sRgCNT_mvHSuKzw2AE
    https://picasaweb.google.com/112898025575980237592/TibeteanPlateau?authkey=Gv1sRgCJLqlbDCy-SHSQ
    https://picasaweb.google.com/112898025575980237592/Manasarovar?authkey=Gv1sRgCMWrsbG426fMmAE

    ReplyDelete
  14. பிரமாதம். கைலாய யாத்திரைக் குறிப்புக்களைத் தொகுத்து தனிப் புத்தகமாக வெளியிட வேண்டும்.
    மிகவும் நன்றி.

    ReplyDelete
  15. தொடர் அனுபவம் நன்றாக இருந்தது, மனவளக்கலை முகாமில் இருந்து கொண்டு கயிலாய யாத்திரை எண்ணம் ஏன் ஏற்பட்டது என்று தெரிவிக்கவும்:)

    ReplyDelete
  16. எனக்குள் இருந்த ஊர்சுற்றும் ஆர்வம்தான் காரணம்.,

    மனவளக்கலை இவற்றை ஒதுக்குவதோ அல்லது ஊக்கப்படுத்துவதோ இல்லை:)

    உடலையும் மனதையும் மேம்படுத்துவது குறித்தே இதன் மையப்புள்ளி இருக்கும்..!!

    நன்றி கோவியாரே...

    ReplyDelete
  17. அருமையான பயணக் கட்டுரை. நாங்களும் உங்களோடு வந்தது போலவே உணர்ந்தோம்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)