"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, September 26, 2013

மோடி பிரதமர் ஆவதை ஏன் வரவேற்க வேண்டும்?.

மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதில் இணையம் ரொம்பவுமே சூடாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேஸ்புக்கில் நான் பார்த்தவரை முஸ்லீம் அன்பர்கள் அதிகம் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். அவர்கள் தவிர்த்து மற்றவர்கள் அரசியல் நிலைப்பாடு காரணமாக எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருந்தனர். அது அவர்கள் உரிமை. அதைத் தடை செய்ய இயலாது...ஆனால் அதில் அவர்கள் காட்டும் தீவீரம், மோடியை ஆதரிக்கும் இந்துமதம் சார்ந்த நண்பர்களின் கருத்துகளில் இருப்பதாகத் தெரிவதில்லை :)



தீவிரம் காட்டத்தான் வேண்டும். அப்படியானால் அது மத மோதலுக்கு வழிவகுக்காதா? மதத்தீவிரவாதத்தை தூண்டுவது ஆகாதா ? அதையும் நிகழ்காலத்தில் வலைதளம் பரிந்துரைக்கிறதா? என்ற ஆச்சரியமும் வரும்.

மதம் சார்ந்து மனிதன் இயங்கக்கூடாது என்பது என் விருப்பம். ஆனால் எதிரே இருப்பவன் மதம் சார்ந்து இயங்கும்போது அதனால் எனக்கு துன்பம் எனில் நானும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை:(. இது இரு மதத்தினருக்கும் பொதுவானதுதான்.

ஜீலையில் இறுதிவாக்கில் நாங்கள் அமர்நாத் யாத்திரையில் இருந்தோம். முந்தய நாள் இரவு தங்க, ஸ்ரீநகரில் இருந்து சுமார் 30 கிமீ உள்ள சிஆர்பிஎப் போலீஸ் முகாமுக்குச் செல்ல வேண்டும். அங்கேயே இலவச உணவு கட்டணத் தங்குமிடம் எல்லாம் உண்டு. அங்கு செல்ல ஒரே பாதைதான். ரம்ஜான் மாதம் எல்லோரும் தொழுகைக்குச் சென்றிருப்பார்கள். ரம்ஜான் மாதத்தில் வன்முறைக்கு வாய்ப்புகள் அதிகம் இல்லை.. இருப்பினும் இரவு செல்வோம் என்று பஸ்ஸில் பயணித்தோம்.

கந்தர்வால் என்ற பகுதியைத் தாண்டும் போது தொடர்ச்சியாக குட்டி குட்டி ஊர்கள். மதராசாக்கள், சுமார் இரண்டு அல்லது மூன்று கீமி அந்த இடத்தை கடந்தாக வேண்டும். சட்டென பஸ்ஸின் சைடில் உள்ள கண்ணாடி நொறுங்கியது.. சரி ஏதேனும் மரக்கிளை பட்டிருக்கும் என நினைத்தேன்.. அடுத்த சில நொடிகளுக்குள் பொட் என்ற சப்தத்துடன் இன்னொரு கண்ணாடி ..பஸ்ஸுக்குள் வந்து விழுந்தது ஒரு கல்.. கைடு அனைவரையும் சீட்டில் முடிந்தவரை கீழே படுத்துக்கொள்ளுங்கள்.. என்று சொல்ல அனைவரும் முடிந்தவரை பஸ்ஸின் நடுவில் உள்ள நடைமேடையிலும், சீட்டுக்கடியிலும் தலையை நுழைத்துக்கொண்டோம். கிட்டத்தட்ட இரண்டு கிலோ எடையிள்ள பெரியகல் பறந்து வந்து சென்னையைச் சேர்ந்த நண்பர் கணபதி என்பவரின் மண்டையில் விழுந்தது. அவரோ ஏற்கனவே மொட்டை. இருட்டில் இரத்தம் பிசுபிசுத்தபடி வருவதை உணர்ந்தாலும், ஒன்றும் செய்ய இயலவில்லை... தாய்க்குலங்கள் கதற... கதறாதீர்கள் அதுவே நம்மை யாத்ரீகர்கள் என்றும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்றும் அடையாளம் காட்டும் என்று கைடு சொல்ல

நடப்பதெல்லாம் இறைவிருப்பம் என்றாலும் சிந்துத்து செயல்பட புத்தி இருக்கிறதே. நானும் சீட்டிக்கடியில் தலையை நுழைத்துக்கொண்டுதான் வந்தேன். ஒரே வித்தியாசம். மற்றவர்கள் பதற்றமாகவும், பயமாகவும் இருந்த/உணர்ந்த சூழலை பதற்றமின்றி நடப்பது நடக்கட்டும். செய்வதற்கு ஒன்றுமில்லை என அமைதியான மனதோடு அமர்ந்து வந்தேன், ..வழிநெடுக கல்வீச்சு தொடர்ந்தது. உணவு உண்ண டிராவல்சால் கொடுக்கப்பட்ட எவர்சில்வர் தட்டுகளை எடுத்து எனக்கு மேலே இருப்பவரின் தலைக்கு கேடயமாக்கி பிடித்துக்கொள்ளவும் செய்தேன்,

கொடுமையான பலநிமிடங்கள் கடந்தது. முகாம் சென்றபின் பார்த்தால் நண்பர் கணபதிக்கு முன் மண்டையில் கிழிசல்.. தலையில் ஆறு தையல் போட வேண்டி வந்தது.. என் பின்னே இருந்த கணினித்துறை சார்ந்த இன்னொரு நடுத்தர வயது நண்பருக்கு காதுக்கு மேலாக கல் விழுந்ததில் கண் நரம்பு பாதிக்கப்பட்டு கடுமையாக சிவந்தது, மூக்கிலும் லேசான காயம்.. இருவருக்கும் முகாமில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.



சரி எங்களுக்கும் அந்த ஊர்காரர்களுக்கும் என்ன பகை? மதம்தான் பகை...... நாங்கள் இந்து என்பது ஒன்று மட்டும்தான் காரணம்..... எதற்காக அமர்நாத் வருகிறாய், வராதே என்பது அங்குள்ள சில அமைப்புகளின் தீர்க்கமான கொள்கை முடிவு.. இந்துக்களை அச்சுறுத்தி இங்கு வராமல் இருக்கச் செய்வதே அவர்கள் நோக்கம். சிறுவர்கள்தான் இந்த கல்வீச்சில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு ஊக்கத்தொகையும் உண்டு. ஒரு கண்ணாடிக்கு 500 முதல் வழங்கப்படுகிறது

போனவருடம் வரை சிஆர்பிஎப் போலீஸ் துறையினரால் முழுமையாக கொடுக்கப்பட்ட அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள்......... இந்த வருடம் முதல் மாநில காவல்துறையால் செய்யப்பட்டிருந்தது..நாங்கள் புகார் கொடுக்க விரும்பினோம். அங்குள்ள காவல்துறை அதிகாரியோ தமிழ்நாட்டில் போய்க் கொடு என்கிறார்..எதிர்த்துப் பேசவும், தகராறு பண்ணவும் உணர்வுகள் துடித்தாலும் இன்னும் பாதிதூரம் போகவேண்டும். திரும்ப அதே வழியில் வந்தாகவேண்டும் என்ற பாதுகாப்பு/பய உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடங்கிக்கொண்டோம். இணைய இணைப்பு செல்பேசி வேலை செய்யாத இடம். கூட வந்த பயண ஏற்பாட்டாளர்களும் எதிர்வினை வேண்டாம். அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று சமாதானம் செய்தனர்.

எங்களுடன் வந்த குவாலிஸ் கார் சைடு கண்ணாடி உடைக்கப்பட்டதில் அதில் வந்த அம்மாவிற்கு மூக்கில் கல்லடிபட்டது.. முதலுதவி செய்தும் மிகுந்த சிரமத்தில் இருந்த அவர் ஸ்ரீநகர் மருத்துவமனை கொண்டு சேர்த்தனர், ஸ்ரீநகரில் மூக்கு ஆபரேசன் பண்ண வேண்டியதாகிவிட்டது.



காலையில் வாகனங்களைப் பார்வையிட்டபோது சுமார் 15க்கும் அதிகமான வண்டிகள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன. பஸ் மேல்டாப்பில் கிடந்த கற்கள் நிறைய..வாகனங்கள் இன்சூரன்ஸ் மூலம் இழப்பினை ஈடுகட்டிக்கொள்வதாலும், வடமாநில டூரிஸ்ட், கைடுகளுக்கு இது பழகிவிட்டதால் பெரிய பிரச்சினை ஏதும் இல்லை.. அதே சமயம் அடுத்தநாள் பகலில் பேருந்தின் முன்பகுதியில் வெளியில் இருந்து பார்த்தவுடன் தெரியும் வண்ணம் டிராவல்சின் ஸ்ரீநகர் முஸ்லீம் கைடு தாடியுடன் முன் அமர்ந்து வந்தார்.. அப்படி இருந்தால் கல் விழாதாம்...விழவில்லை என்பதும் உண்மை:)

இந்தியா மதச்சார்பற்ற நாடு..சொல்ல நல்லா இருந்தாலும் யதார்த்தம் அப்படி இல்லை.. பிறப்பால் இந்துவாகிய எனக்கும், என்னைச் சார்ந்தவருக்கும் விரும்பிய பொது இடத்திற்குச் செல்ல உரிமை இல்லை.. ஏன் இங்க வர்ற என்று கேள்வியை கேட்காமலேயே/ உணர்த்துகிற தாக்குதல்.. இனி நான் என்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில், விருப்பம் இருக்கிறதோ இல்லையோ என் மதத்தை/குழுவை நாடித்தானே ஆகவேண்டும்..?

முஸ்லீம் சமூகத்தை இந்துவாகிய நானும், என்னைச் சார்ந்தவர்களும் தாக்கினால் அது தப்பு, இந்தியா மதச்சார்பற்ற நாடு. சிறுபான்மை மதத்தினரை பெரும்பான்மை தாக்குவது என்ன நியாயம் என்று அனைவரும் பொங்கலாம். ஆனால் சிறுபான்மை மதத்தினர் கூச்சப்படாமல் பெரும்பான்மையினரைத் தாக்குகின்றனர்.. காரணம் இந்து என்றால் இளிச்சவாயன். சகிப்புத்தன்மை உள்ளவன், அடிச்சா திருப்பி அடிக்கனுமான்னு பலமா யோசிப்பான்னு தெரிஞ்சு வச்சிருக்காங்க...

இந்த நிகழ்வுக்குப் பின் நாங்கள் சுற்றுப்பயணம் செய்த ஜம்மு, ஸ்ரீ நகர் முழுக்க 600 கிமீ பயணத்தில் வேறு வேறு இடங்களில் சில சிஆர்பிஎப் போலீசார் தமிழர்கள், மலையாளிகளை அடையாளம் கண்டு பேசினோம். அனைவரும் ஒரேமாதிரியாகச் சொன்னது.. ஸ்ரீநகரில் யார் யார் இந்த பிரச்சினைகளுக்குக் காரணம் என்று எங்களுக்குத் தெரியாமல் இல்லை. இவர்களை அடக்க குறைந்த பட்சம் மூன்று மணிநேரமும் வேரோடு அறுக்க மூன்று நாளும் போதும்..

முஸ்லீம்களில் தவறானவர்களை எளிதில் அடக்கமுடியும்..ஆனால் இந்த ஏகே47 துப்பாக்கி எங்களைப் பாதுகாத்துக்கொள்ளத்தான்... முஸ்லீம்கள் மீது துரும்பு கூட படக்கூடாது... முஸ்லீம் அடித்தால் அடியை வாங்கிக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள். திருப்பித் தாக்காதே என்பது அமைச்சகத்தின் வாய்மொழி உத்தரவு... இது யாரோ ஒருவரின் கருத்து அல்ல.. நாங்கள் உரையாடிய 20க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் போலிசாரின் ஒரே மாதிரியான கருத்து.:( தீவிரவாதம் எந்த வடிவிலும் நீடிப்பது நல்லதல்ல.. அதுவும் மதம் என்ற போர்வையில் அனுமதிப்பது மகாதவறு.

பாதுகாப்பான சூழல் என்பது முஸ்லீம்களுக்கு தமிழகத்தில் நிச்சயமாக இருக்கிறது.. அது கலைஞராக இருந்தாலும் சரி, ஜெ வாக இருந்தாலும் சரி..எந்த கலவரம், மோதல் எதிலும் ஜாதி, கட்சி, அரசியல், காரணம் இருக்குமே அன்றி எனக்குத் தெரிந்த வரை மதம் ஒரு காரணியாக இருந்ததில்லை. அப்படி இருக்கையில் தமிழகத்தில் வாழும் முஸ்லீம்களில் மிகச்சில சதவீதத்தினர் மோடியை வெளிப்படையாக எதிர்க்கின்றனர். காரணம் எதுவுமில்லை. மதம் மட்டுமே. மோடி இந்து மதத்தை முன்னிலைப்படுத்துவது மட்டுமே காரணம்..

பதவி, பொறுப்பில் இல்லாத ஒரு இயல்பான சாதரண முஸ்லீம்கூட தன் மதத்தை இஸ்லாத்தை விட்டுக்கொடுப்பதும் இல்லை. பழிப்பதும் இல்லை. ஆனால் சொந்த மதத்தை எப்படி வேண்டுமானால் கிழித்து துவைத்து தொங்கவிடுவது இந்துவாய் பிறந்த எவருக்கும் சாத்தியம். மதமும் அதை அனுமதிக்கிறது. சாதரணனுக்கும் சாத்தியம். மிகப் பிரபலங்களுக்கும் சாத்தியம்.

நான் மட்டும் ஏன் இந்து மதத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்?. இங்கே இஸ்லாத்திற்கு எதிராக எதுவும் சொல்லப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் தவறானவர்கள் அடக்கப்பட வேண்டும் என்பதே நமது விருப்பம். சொத்தை காங்கிரஸ் இருக்கும்வரை அது சாத்தியமில்லை. இந்நிலை மாற அல்லது மோடி வந்தால் இந்த கேடுகெட்ட காங்கிரசை விட நிச்சயம் ஒரு படியாவது நன்றாக இருக்கும்.

 ஆக மதம் சார்ந்த ஆதரவை மோடிக்கு உரக்கத் தெரிவிக்க வேண்டும். 

பிரதமர் பதவி மதம் சார்ந்ததல்ல.,.. இந்திய மக்களுக்கானது, பொதுவானது என்று சொல்கிறீர்களா?

அப்படி எனில் மோடி எதிர்ப்பாளர்களில் ஒரு முஸ்லீம் நண்பராவது எனது இந்தியா என்று சுதந்திர தின வாழ்த்தினை பொதுவில் தெரிவித்து இருந்தால் அவரே மோடியை எதிர்த்துப் பேச தகுதியானவர்... பிற இணைய முஸ்லீம் நண்பர்களுக்கு இந்தியாவின் சுதந்திரதினம் ஒரு விடுமுறை நாள் அவ்வளவே,,,ஆனால் அவர்கள் தாம் இப்போது வந்து மோடி ஆகாது என பரப்புரை செய்து கொண்டு இருக்கின்றனர். எனது நாடு என சொல்ல விருப்பமில்லாதவர்களுக்கு, நாட்டின் தலைமைக்கு மோடி வரக்கூடாது எனச் சொல்ல என்ன உரிமை..? அடையாளம் காண்போம் அவர்களை...உரிய கருத்துகளை பதிவு செய்வோம்.

நம்முடைய அரசியல் அமைப்பில் 51 சதவீத ஓட்டு யாருக்கோ அந்த அரசியல் கட்சிதான் நாட்டை ஆளும் தகுதி.. மற்ற 49 சதவீத ஓட்டு போட்ட எதிரணியினருக்கும் சேர்த்துதான்.. அதே போல இந்த நாடு இந்தியா என்பது இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. ஆக தன் மதத்தை / மதிப்பை /தன் மக்களை காக்கும் ஒருவன் தலைவனாக வேண்டும் என்பது பொது விருப்பமாயின் எதற்கு இந்த சலசலப்பு ?,

யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரட்டும். எங்களுக்கு தொந்தரவில்லாமல் இருக்கட்டும் என்றால் இருமதத்தினரும் நெருங்கிவரும் வாய்ப்பு உண்டு. இல்லையெனில் எதிர்ப்பு தொடரத்தான் செய்யும் . பொதுவில் 100 மார்க் மோடிக்கு கொடுக்க முடியாவிட்டாலும் நிர்வாகத்தில் இப்போது இருக்கிற பிரதமரைவிட பல மடங்கு சிறப்பானவர்தாம். இந்து என்பதிலும் பெருமை கொள்வோம். மோடியை ஆதரிப்போம்

நிகழ்காலத்தில் சிவா



89 comments:

  1. உங்கள் தைரியத்திற்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சிஆர்பிஎஃப் போலீஸ் மட்டும் ஏகே 47 உடன் இல்லையென்றால் அங்கே இருந்து உயிருடன் மீள முடியாது...

      சிஆர்பிஎஃப் போலீஸ் கேம்ப் இலவச உணவளிக்கிறது.... அதில் உள்ள மறைமுகத் தகவல் ”வழியில் தங்காதே இங்கே வந்துவிடு. அதுதான் பாதுகாப்பு” என்பதுதான். நன்கொடை வாங்குவதில்லை

      வழியில் உணவு சமைக்க எங்கும் நிறுத்தக்கூடாது..பாதுகாப்பு காரணம்தான்

      அமர்நாத் யாத்திரை குதிரை மற்றும் நடந்து செல்லும் மலைப்பாதையில் 14 கிமீக்கும் அரை பர்லாங்குக்கு ஒவ்வொரு இடத்திலும் இரண்டுக்கும் அதிகமான சிஆர்பிஎஃப், ஏகே 47 உடன், தனித்த சிஆர்பிஎஃப்
      போலீஸ் கிடையாது.. ...

      ஏன் குதிரை ஓட்டிகள் அனைவரும், கடைகள் அனைத்தும் முஸ்லீம்தான்..... அவர்கள் மூலம் எந்த விதத்திலும் யாத்திரீகர்களுக்கு ஆபத்து நேரக்கூடாது என்பதற்காக்த்தான்..

      பாகிஸ்தான் பார்டரில் கூட ஒற்றை இராணுவ வீரன் ரோந்து போக முடிகிறது..பார்த்தேன். ஆனால் சிஆர்பிஎஃப் பொலீஸ் தனியாக அமர்நாத் உட்பட ஸ்ரீநகர் சார்ந்த இடங்களில் நிற்க முடிவதில்லை :(

      Delete

    2. என்ன ஜோதிஜி சிவாவின் தைரியத்தை பாராட்டியது சரி பதிவு பற்றி கருத்து சொல்லாமல் போய்விட்டீர்களே

      Delete
  2. இப்படி பல விசயங்களை யாத்திரையின் போது நடந்ததை கேள்விப் பட்டிருக்கின்றேன். கோவையில் இந்துகளை தாக்கிய ரௌடிகளை கைது செய்ய அப்போதைய திமுக அரசு தயங்கிய காரணத்தால் காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டார். அதன் பின் நடந்த கலவரங்களை நாடே அறியும் அப்பொழுதும் காவலர்கள் கைகள் கட்டப்பட்டன வெகுண்டெழுந்து காவலர்களே தர்ணாவில் குதித்தார்கள் இங்கு நம்மை ஆள்பவர்களால் நமக்கு பாதுகாப்பு இல்லையெனும் போது நாம் ஏன் நம் பாதுகாப்புக்காக RSS, பிஜேபியை ஆதரிக்க் கூடாது

    நாத்திக கொள்கையில் தீவிரமாக இருந்த நான் இந்துவாக மாறியதற்குக் காரணம் இதைப் போன்ற ஒரு சம்பவமே காரணம்.

    ReplyDelete
    Replies
    1. எந்தஅடையாளம் இல்லாமல் வாழ முயற்சித்தாலும் அது என்னளவில்தான்.. சமுதாயத்தோடு புழங்கும்போது, தற்காலிகமாகவேனும் இப்படி மாற நிர்பந்திக்கப் படுகிறோம் :(

      Delete
  3. காங்கிரசை ஆதரித்தால், அதன் கை சுத்தமாக இல்லை. அது முடியாது. மோடியை ஆதரித்தால் இந்தியாவின் பழைமை வாய்ந்த மூடப்பழக்கங்களை ஆதரிப்பதுபோலாகும். மதத்தை முன்வைத்து இந்துத்துவா கொள்கைகளை நிறைவேற்றவே அவர் செயல்படுவார். 1999-2004 வரை இதைத்தான் பிஜேபி செய்தது. நாட்டின் பல பிரச்னைகளுக்கு எந்த வழியும் அவரிடமில்லை. இந்துத்துவா கொள்கைகளை நிறைவேற்றவே பாடுபடுவேன் என்கிறார். அவரால் குஜராத்தில் நடந்த வகுப்பு கலவரத்தை தடுக்க முடியவில்லை. எப்படி இந்தியாவை காப்பாற்ற முடியும்? வகுப்பு கலவரமே ஓங்கி நிற்கும். அப்போதும், இதில் எனக்கு பங்கில்லை என்றே தப்பித்துக்கொள்வார்.

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவைக் காப்பாற்ற மோடி அவசியமில்லை... சிஆர்பிஎஃப் போலீசினரின் கைகளை கட்டிப்போட்டதை அவிழ்த்தால் போதும். இதை கட்டாயம் மோடி செய்வார். அப்போது கலவரம் செய்யும் துணிச்சல் எவருக்கும் வராது. இப்போதைக்கு இது முக்கியம்தான்...

      Delete
    2. மோடி குஜராத் கலவரத்தை தடுக்கவில்லை... மோடி முஸ்லீம்களுக்கு எதிரானவர்... மோடி முஸ்லீம்களின் ரத்தம் குடிப்பவர்... என்று விதவிதமாக பரப்புரை செய்பவர்களுக்கும், மோடியை மதவாதியாக எதிர்ப்பவர்களுக்கும் ஒரே கேள்விதான்...
      பதினைந்து வருடமாக மோடி ஆளும் குஜராத்தில் இப்போது ஒரு முஸ்லீம்கூட இல்லாமல் முற்றிலும் கொன்றொழிக்கப்பட்டு அது சுத்தமான இந்துத்வா மாநிலமாக மாற்றப்பட்டுவிட்டதா என்ன?...

      Delete
    3. Good article Siva.
      Excellent question Sairose...
      But unfortunately, our corrupted, PSUEDO SECULARIST MASS MEDIA, SLOW POISON CONgress, STUPID Intellectuals of India, other ottup porukki selfish regional parties like SP JD etc. have succeeded in creating a FEAR PSYCHOSIS among our minority fellow citizens... That is the root cause...
      Our CONSTITUTION is strong and clear enough, so that nobody, even MODI can harm MINORITIES...
      2002 riots are one of the many maore riots happenned before and after that in many parts of India... Our STUPID intellectuals are conveniently forgetting all other riots & SIKH MASSACRE OF 1984 and only CRYING FOUL about the 2002 riots... no one of them are even talking about the BURNT GODRA RAIL PILGRIMS..... This is the sad state of affairs in our PSUEDO SECULAR COMMUNITY.
      We need a real leader, who cares about the country... At the moment MODI is the only available option for us....
      Like in the last TN Assembly elections, we all supported JAYA & AIADMK just to THROW OUT the more corrupted / traitor KARUNANIDHI... We all knew about JAYA, AIADMK and their attitude and track record... even then we supported them ...
      In the same way, to THROW OUT THE CONgress and to save INDIA, we all must support the only other, definitely far better than the bunch of JOKER MAFIA CONGRESS, option available... which is MODI & BJP
      எங்கே... MODI யை ஆதரித்தால் நமக்கு மத வாதி முத்திரை குத்திவிடுவார்களோ என்ற பயம் இல்லாமல் உண்மையை உரைத்ததற்கு உங்களுக்கு நன்றி...

      முஸ்லிம் லீக் , MIM எல்லாம் மதசார்பற்ற கூட்டணியில் இருக்குமாம்...
      BJP மட்டும் மதவாத கூட்டணியாம்.... இந்தியாவில் இந்த logic எனக்கு புரியவே மாட்டேங்குது....

      நான் நாத்திகன்.... எனக்கும் மதவாத முத்திரை குத்துவார்கள் நம் இந்திய intellectuals....
      Regards
      Sankar

      Delete
  4. //இன்னொரு நடுத்தர வயது நண்பருக்கு காதுக்கு மேலாக கல் விழுந்ததில் கண் நரம்பு பாதிக்கப்பட்டு கடுமையாக சிவந்தது, // ;-(

    ReplyDelete
  5. மிகச்சரியான பதிவு........

    வன்முறை என்பது உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கு தெரியும் என்று அவர்களுக்கு புரியவைத்தவர் மோடி மட்டும்தான்...... அதனால் தான் இந்த எதிர்ப்பு.

    ReplyDelete
  6. சரியான வாதம்.. அருமை சிவா அண்ணா.

    ReplyDelete
  7. காங்கிரஸும் வேண்டாம் ,பிஜேபியின் மோடியும் வேண்டாம். பரவாயில்ல எனக்கு ஓட்டு போடுங்க.

    ReplyDelete
    Replies
    1. லிங்க் கொடுங்க....ஓட்டுப்போட்டுடுவோம் :)

      Delete
  8. ஓட்டுப் பொறுக்கிங்க இருக்கும் வரைக்கும் உருப்படாது. எம்மதமும் நமக்கு சம்மதமே, ஆனால் மதத்தின் பெயரில் ஒளிந்துகொண்டு தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதை நாம் ஏற்க முடியாது.

    ReplyDelete
  9. //அப்படி எனில் மோடி எதிர்ப்பாளர்களில் ஒரு முஸ்லீம் நண்பராவது எனது இந்தியா என்று சுதந்திர தின வாழ்த்தினை பொதுவில் தெரிவித்து இருந்தால் அவரே மோடியை எதிர்த்துப் பேச தகுதியானவர்... பிற இணைய முஸ்லீம் நண்பர்களுக்கு இந்தியாவின் சுதந்திரதினம் ஒரு விடுமுறை நாள் அவ்வளவே..//

    ஓஹோ, தேச பக்தியை மொத்தமா குத்தகைக்கு எடுத்தவங்க எல்லாம் கர்நாடகா தாசில்தார் அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றி கொண்டாடலாமா? அப்புடி கொண்டாடுனாலும் குறிப்பா தொப்பி போட்டு இருக்கணும், இல்லே? அப்ப தான் தேச பக்தி இல்லாம முஸ்லிம் பாகிஸ்தான் கொடி ஏத்துனான்னு சொல்லி ஊர்ல கலவரத்த உண்டு பண்ணி ரெண்டு தரப்பையும் அடுச்சுகிட்டு சாவடிக்க முடியும்.

    அந்த கொடி ஏத்துன தரப்ப கூப்பிட்டு சுதந்திர தினத்த பத்தி பேச சொல்லி கேளுங்க, ஒங்க காது குளிரும்.

    ReplyDelete
    Replies
    1. பாகிஸ்தான் கொடி ஏத்தினவங்களுக்கு, அந்த நாட்டோட சுதந்திர தினத்தை பத்தியும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். தாராளமா கேட்கலாமே சாகா.....

      Delete
  10. மிகச்சரியான வாதம்தான்... கமலின் ஹேராம் படத்தில் ஒரு காட்சி இருக்கும்... சகோதரர்களாக அவர் பழகிய முஸ்லீம்களே அவரது மனைவியை சீரழித்ததும் ஒரு சாமான்ய மனிதன் இந்துத்வா கொள்கைவாதியாக மாறி ஆயுதத்தை கையில் எடுப்பார்...
    ஜிகாத் என்ற பெயரில் பல ஆயுத அக்கிரமங்கள் அப்பாவிகளுக்கு எதிராக நடத்தும்போது எழாத எதிர்ப்பு மோடியை எதிர்ப்பதில் மட்டும் பொங்கியெழக்காரணமாக உங்கள் கட்டுரையில் இருக்கும் கருத்துக்கள் சரியானதாகவே தோன்றுகிறது...
    யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் கூட்டமில்லை எதிர்வாதக்கூட்டம் என்பதால் இந்தக்கட்டுரைக்கும் பலத்த எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும் என எதிர்பார்க்கிறேன்...

    சகோதரத்துவம் கொல்லப்படுவது எந்தவொரு தரப்பினர் தொடங்கினாலும்... எதிர்தரப்பினர் எதிர்க்கத்தயாராகத்தான் ஆவார்கள்...

    உங்களைப்போலவே பல்வேறு மதச்சார்பற்ற நாத்திகவாதிகளும்கூட நாளடைவில் தங்களைத்தாங்களே காத்துக்கொள்ள இந்துத்வா முகமூடியை அணியும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சர்யமில்லைதான்...

    ReplyDelete
    Replies
    1. எந்த முகமூடியானலும் சரி நிரந்தரமாக அணிவது தவறு.. தற்காலிகமாக அணிவதற்கும் பலமான யோசனை வேண்டும். நன்றி சாய்ரோஸ்

      Delete

  11. மிகத்தெளிவான கட்டுரை...

    ஆனால்

    //அப்படி எனில் மோடி எதிர்ப்பாளர்களில் ஒரு முஸ்லீம் நண்பராவது எனது இந்தியா என்று சுதந்திர தின வாழ்த்தினை பொதுவில் தெரிவித்து இருந்தால் அவரே மோடியை எதிர்த்துப் பேச தகுதியானவர்... பிற இணைய முஸ்லீம் நண்பர்களுக்கு இந்தியாவின் சுதந்திரதினம் ஒரு விடுமுறை நாள் அவ்வளவே//

    இது மட்டும் ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. ஒரு முஸ்லீம் என்ன .. எவ்வளவு பேர் இந்தியா மீது பற்று கொண்டவராக இருக்கிறார்கள்.

    ஒருவிதத்தில் பார்த்தால் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் மோடியை எதிர்க்கிறார்கள். இலங்கையில் தமிழ் சொந்தங்களை இனஅழிப்பு செய்தபோது ராஜபக்சேவின் மீது நமக்கு எவ்வளவு கோபம் வந்ததோ அதேபோலத்தான் மோடி மீதும் அவர்களுக்கு கோபம்..

    கொஞ்சம் பொதுவாகப் பார்த்தால் வேறு ஒரு சிந்தனை ஓடுகிறது.. இஸ்லாமியர்கள் எல்லோருமே மோடியை வெறுப்பதற்கு காரணம் குஜராத் கலவரம் மட்டுமே. மாறாக அவர் நிர்வாகத்திறமை அற்றவர்கள் என்றோ பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் என்றோ அவர்கள் சொல்லவில்லை. அப்படி சொல்லவும் முடியாது. ஆனால் மோடி பிரதமரானால் இந்துத்வாவை தூக்கிப் பிடிப்பார் என்றெலாம் தோணவில்லை. போனமுறை வாஜ்பாய் அரசு அமைந்தபோது தன் இந்துத்வா கொள்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகித்தான் போனது. காரணம் கூட்டணி ஆட்சி. இந்தமுறையும் கூட்டணி ஆட்சிதான் என்கிறபோது இவர்கள் கொடுக்கும் பில்டப் அளவுக்கெல்லாம் மோடி ஆடமாட்டார். தவமாய் தவமிருந்து கிடைத்த இந்த வாய்ப்பை அவர் ஐந்து வருடம் பூர்த்தி செய்யத்தான் பார்ப்பார்.

    ReplyDelete
    Replies
    1. இலங்கையில் நடந்த இன அழிப்பு, இந்தியாவில் நடக்கும் இந்து முஸ்லீம் மோதலும் ஒன்றல்ல... அங்கே உயிரிழப்பு பல்லாயிரம்... இங்கே மதத்துக்காக உயிரிழப்பு சில நூறுகள்.

      மோடி மெஜாரிட்டியாகச் ஜெயிக்க வாய்ப்பில்லை.. ஆனால் ஜெயிக்கலாம். அப்போது ஆட்சியை தக்கவைக்க முயல்வாரெ தவிர பெரிதாக எதிர்பார்க்கமுடியாது என்பது சரிதான்

      Delete
  12. நிச்சயமாக உங்கள் கட்டுரையை ஆதரிக்க முடியாது.கடந்த முறை பிஜேபி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்றே ஆட்சிக்கு வந்தனர். அவர்களின் கொள்கையே இந்துத்துவ தான்.இந்துவுக்கும்,முஸ்லிமுக்கும் பகைமை இருக்கும் வரைதான் பிஜேபியின் செல்வாக்கு இருக்கும். அவர்களும் அதை உணர்ந்து தான் செயல்படுகிறார்கள்.நான் பிறப்பால் ஒரு இந்து ஆனால் பிஜேபின் செயல்கள் மிக எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.விநாயகர் ஊர்வலங்கள் வன்முறை ஊர்வலன்களாக தமிழ் நாட்டில் மாற்றபட்டத்ர்க்கு மிக்கிய காரணமே பிஜேபியும்,RSSம் தான்.RSS தன இவர்களை இயக்கம் சக்தி எனும்போது நிச்சயம் அவர்களை ஆதரிக்க இயலாது. உங்களை சில முஸ்லிம்கள் தாக்கியது தகாத செயல் எனினும்,அதை காத்துக்கொள்ள மதத்துக்குள் நுழைந்தால் எவ்வாறு தீர்வு கிடைக்கும் என நம்புகீருர்கள் என்பது வியப்பாக உள்ளது.

    ராஜா

    ReplyDelete
    Replies
    1. இந்த இயக்கங்கள் வன்முறை கட்சிகள்தாம்... அவர்கள் செய்வது தவறு என்ற என்னுடைய தீவிரமான நிலைப்பாடு, இந்த சம்பவத்திற்குப்பின் அவர்கள் செய்வதிலும் ஞாயம் உள்ளதோ என்று தோன்றச் செய்துவிட்டது... இதற்கு விசிறி அடிப்பதுபோல் மோடி எதிர்ப்பு நிலைப்பாட்டில் முஸ்லீம்களின் பங்கு இருந்ததால், இந்த நடையில் சொல்ல வேண்டி இருந்தது. மற்றபடி எல்லாவற்றையும் துறப்பதுதான் என் விருப்பம்..

      Delete
  13. இந்துத்துவாவை ஏற்பது அல்லது ஆதரிப்பது, வர்ணஷமத்தை ஆதரிப்பதாக மாறிவிடும்.கொசுவுக்கு பயந்து வீட்டைகொழுத்த நினைப்பது எந்தவிதத்தில் அறிவுடைமை என்பது தெரியவில்லை.

    ReplyDelete
  14. அமர்நாத் யாத்திராவில் இதை விட பலமான தாக்குதலை இஸ்லாமியர்கள் நினைத்தால் நடத்த முடியும்.....சிஆர்பிஎப் மட்டுமில்லை பிஎஸ்எப் ம் பணி செய்கிறது..இந்த வருடமும் என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் அங்கு சென்று வந்தனர் காவலுக்கு.வருடாவருடம் சென்று வருகின்றனர்..இது மிகவும் அரிதாக நடந்த ஒன்றாக இருக்கலாம் இல்லை கட்டு கதையாக கூட இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன்.
    எந்த முஸ்லிமையும் அடிக்க கூடாது என்று வாய்மொழி உத்தரவு.....###இது முஸ்லீம்க்கு மட்டுமில்லை பஞ்சாப்பில் ஜம்முவில் பெங்காலில் என்று அனைத்து இடங்களிலும் மனித உரிமை குறித்த மக்களின் விழிப்புக்கு பயந்து மேலதிகாரிகள் கொடுக்கும் உத்தரவே .....மறுபக்கம்
    கஸ்டடிக்கு எடுத்து வந்து சித்திரவதை செய்வது எந்த ரகமோ?
    மோடிக்கும் இஸ்லாமியர்களின் தேச பக்திக்கும் முடிச்சி போடும் இந்த கட்டுரையிலேயே தெரிகிறது ஒன்றாய் இருப்பவர்களை பிரித்து ஓட்டு பொறுக்கும் குருர புத்தி மட்டுமே இதில் தெரிகிறது.
    இஸ்லாமியர்கள் மோடியை மட்டுமே அவரின் கட்சியை மட்டுமே எதிர்க்கிறார்கள்.இந்து என்ற பெயரில் மற்றொரு சமூகத்தையே ஒழித்து கட்டும் வெறுப்பை கிளப்புவதுதான் இந்து எழுச்சி என்றால் அதனுள் என்னை போன்ற தாழ்த்தப்பட்டவனுக்கு என்ன செய்திர்கள என்பதை தெளிவு செய்யவும்....

    ReplyDelete
    Replies
    1. கரண்டு போயி கம்யூட்டர் ஆப் ஆயிட்ட இந்த கட்டுரையும் கூட கட்டுக்கதைதான்.. உடைக்கப்பட்ட கார், அந்த அம்மா அந்த சூழலில் தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட போட்டோ ஆதாரங்கள் நிறைய இருக்கு....ஒன்னா இருக்கிறவன பிரிக்க் வேண்டிய அவசியம் எனக்கு இல்லை....பிரிஞ்சு இருக்கிறீங்க,, ஒண்ணாயிடுங்க அப்படிங்கிற செய்தியைத்தான் சொல்லி இருக்கிறேன்...

      Delete
  15. சிவா நல்ல கட்டுரை. ஆனால் முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போட முயன்றுஉள்ளீர்கள்.
    ஒரு இந்திய குடிமகனுக்கு பாதுகாப்பு தறாத மாநில/மத்திய அரசு இருந்து என்ன பயன்? வெட்கக்கேடு!
    எம்ஜார் செத்தா திமுககாரனையும் பொது சொத்துக்களையும் நஷ்டப்படுத்தும் கலாச்சாரம் கொண்டுள்ள இந்நாட்டில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
    எனக்கும் உங்களுக்கும் பிழைக்க வழி தடுக்கப்படும்போது, 500 ரூபாய் கொடுத்தால் பஸ் கண்ணாடி என்ன, வேறு எதையும் செய்ய தயாராகவே இருப்போம். குதிரை ஓட்டிகளும் கடைகாரர்களும் செய்யும் சேவையை (பணம் பெற்றே என்றாலும்) பாராட்டமுடியவில்லையே உங்களால். அது என்ன பொதுவெளியில் சுதந்திர தினம் ....
    இது ரொம்ப ஓவர் சிவா.
    அப்புறம். குஜராத்திலும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் பீஜேபீக்கு ஓட்டு போடுகின்றார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்களும் இந்த நாட்டில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழத்தான் ஆசைப்படுகிறோம்.
    ஆனால். விடமாட்டேன் என்றல்லவா சொல்லப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. மத்திய அரசையும் சாடித்தான் எழுதி இருக்கிறேன். அப்புறம் சேவை என்ற வார்த்தையின் பொருள் பணம் பெற்றுக்கொள்ளாமல் செயலாற்றுவது.. அல்லது விருப்பப்ப்ட்டதை கொடுத்தால் ஏற்றுக்கொண்டு செயல்படுவது....இதில் பாராட்ட ஒன்றுமில்லை.. பேசியதை விட அதிகம் கேட்டு வாங்குகிறார்கள்... நமது இந்திக்கும் பாகிஸ்தான் இந்திக்கு நிறைய வித்தியாசம் இருக்கு. புரியலைன்னு நண்பர் சொன்னார்.. சரியான்னு சொல்லுங்க.

      Delete
    2. அங்கிருப்பவர்களுக்கான வருமானத்திற்கு வழி.. யாத்திரை காலத்தில் குதிரை ஓட்டுதல் வருமானம்., மற்ற நாட்களில் அரசு சார்ந்த கட்டுமான/பாதை சார்ந்த வேலைகள் வருமானம்... அப்படி இருக்கையில் டூரிஸ்ட்களை நல்லவிதமாக வரவேற்று அனுப்பி வைத்தால் இன்னும் வருமானத்திற்கு வழி கிடைக்கும் அல்லவா?

      Delete
    3. பதிவு பொத்தாம்பொதுவா, காஷ்மீரில் பஸ் மீது கல்லடிக்கிறான். அவேனெல்லாம் இஸ்லாமியன். எனவே மோடி பிரதமரானால் எவனும் கல்லெறியமாட்டான்
      நல்ல லாஜிக்!
      வாழ்த்துக்கள் உங்களுக்கும் மோடிக்கும்.
      அப்புறம் ஹிந்தி வேறு உறுதுணையாக வேறு. அதுபோக கஷ்மீரியர்களில் பலருக்கு ஹிந்தி/உறுது புரியாது. பாகிஸ்தானிலும் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. உறுது தெரியாதவர்கள் பலர் உள்ளனர்.
      எனக்கு தெறிந்து சேவைக்கு வரிகூட கட்டுகிறோம். அப்புறம் எப்படி இலவசமாக கிடைக்கும்.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  16. நன்றி நண்பரே..நான் என்ன நினைத்தேனோ ,அதை நீங்கள் எழுதி விட்டீர்கள்..தள்ளாடி கொண்டிருக்கும் நமது நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமெனில் , மோடி பிரதமர் ஆனால் மட்டுமே முடியும்..ஆதரிப்போம் மோடியை..

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆண்டின் மிக சிறந்த ஜோக் இதுதான்.. இதைப்போலதான் கலைஞர் ஆண்ட போது ஜெயலலிதா வந்தால் தமிழகம் முன்னேரும் என்று பலர் சொன்னார்கள் இப்போது அது எப்படி முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்று யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை

      Delete
    2. ஜோக் இல்லைங்க.. நம்பிக்கைதான்.. ஆனா எல்லா நம்பிக்கையும் நடந்திரும்னு நினைப்பதும் இல்லை :)

      Delete
  17. modi vanathaalathaan itharku ellam theervu...muthalavathu...antha mathathukarargalidam ulla ottrumai nammidam illai...
    vote for bjp

    ReplyDelete
  18. நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்தான். இருப்பினும், பதிவில் வெளிப்படும் தங்களின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

    விவாதிக்க விரும்பவில்லை. ஆனாலும் சொல்ல விரும்புவது இது..........

    தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்களை, “நான் இந்து” என்று சொல்லாமல், “நான் இந்தியன்” என்று சொல்லித் திருத்த முற்படலாமே?

    ReplyDelete
    Replies
    1. //தீவிரவாதத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்களை, “நான் இந்து” என்று சொல்லாமல், “நான் இந்தியன்” என்று சொல்லித் திருத்த முற்படலாமே?///

      மிக சரியாக சொல்லப்பட்ட பதிலாக எனக்கு தோன்றுகிறது

      Delete
    2. யாரும் யாரையும் திருத்தமுடியாது... ஏன் வர்றேன்னு கேட்கிறாங்க...அவங்களை இந்தியனாத்தான் நினைக்கிறோம்.. அங்கே மத்திய அரசு செலவு செய்கிற தொகை அளவே கிடையாது.. பலனும் அடைந்துகொண்டு இப்படி நடந்து கொள்றாங்களே என்ற ஆதங்கம்.. அத்த்னை முஸ்லீமும் அப்படி இல்லை...சில சதவீதத்தினர் மட்டும்

      Delete
    3. Madurai Tamil - I accept yours, but when that particular Muslim says that he is not an Indian, what will be your answer to them?? I m not saying this just like that. I have observed this silently from many Muslims, that they are in India and going by the rules only because they are all born here and they want to make their living. No such element called National Spirit. I do not mean everyone. During my college days my roommate was a Muslim guy. Whenever Muslim friends of him used to come to room, whatever they used to speak, finally they used to land at opposing Hindus. Almost whoever the guy I knew as a Muslim was having an enmity feeling towards Hindus. I have not observed such behavior from any of the Hindu guys during my college days. They were not caring about such religious things and all. How to deal with these guys?

      Delete
  19. Siva,
    Very nice and thoughtful review of the current scenario.I agree with your view on Modi.

    ReplyDelete
  20. very very corect. 100 percent I agree with you

    ReplyDelete
  21. சிவா நீங்கள் இரண்டு வெவ்வேறு சம்பந்தமில்லா விஷயங்களை இங்கு நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுதி குழப்பி இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது. ஒரு மதத்தை சார்ந்த ஒரு சிலர் செய்யும் தவறுக்கு நீங்கள் ஒட்டுமொத்த மதத்தை குற்றம் சாட்டுவது முதலில் தவறு

    இரண்டாவது மத்திய அரசில் அதிகாரப்பதவிகளில் இருப்பவர்கள் மூஸ்லிம்கள் அல்ல அவர்கள் இந்துக்களே. ஆனால் அவர்கள் தங்களின் சுயநலத்திற்காக மட்டுமே தவறுகள் செய்யும் நபர்கள் மீது முழுமையான நடவடிக்கை அனுமதி கொடுக்கவில்லை அதனால் நீங்கள் குறைகள் சொல்வதனால் அந்த அதிகாரப் பதவிகளில் "மாமாக்கள்" போல இருக்கும் தலைவர்களைதான் குறை சொல்ல வேண்டும்.


    உங்கள் வாதம் சரி என்று சொன்னால் இதற்கு பதில் சொல்லுங்கள் இந்தியாவில் இப்போது பெண்கள் வயது வித்தியாம் இல்லாமல் ஆண்களால் கற்பழிக்கபடுகிறார்கள். அதை செய்வது சில கயவர்கள் மட்டுமே ஆனால் அதற்காக அனைத்து ஆண்களையும் ஒட்டுமொத்தமாக உங்களையும் சேர்த்து கயவர்கள் என்று குற்றம் சாட்டினால் உங்கள் மனது ஏற்றுக் கொள்ளுமா அல்லது அனைத்து ஆண்களும் ஏற்றுக் கொள்வார்களா என்ன?

    பெண்கள் அதிகம் பாதிக்கபடுவதால் ஜெயலலிதா அவர்களை பிரதமாராக்கினால் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லவது போல மோடி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்


    மூஸ்லிம்கள் மோடியை எதிர்க்ககாரணம் அவர் குஜராத்தில் முஸ்லீகளுக்கு எதிராக கட்டுஅவிழ்த்த வன்முறைதான் ஆனால் மோடிக்கு பதிலகாக அத்வானி இருந்தால் முஸ்லீம்கள் எதிர்ப்பு காட்டி இருக்கமாட்டார்கள் என்பது நிச்சயம் காங்கிரஸுக்கு மாற்றாக அவரை தேர்ந்தெடுக்க உதவுவார்கள் என்பதும் நிச்சயம்


    சிவா மோடியும் மற்ற அரசியல் தலைவர்களை போல உள்ள ஒரு தலைவரே எல்லோரும் சுயநலக்காரர்களே அதனால் அவர் வந்தாலும் எந்த வித மாற்றமும் ஏற்பட போவதில்லை

    மதத்தை அல்ல மனிதநேயத்தை விரும்பும் ஒருத்தனின் கருத்துதான் இது


    ReplyDelete
    Replies
    1. மத்திய அரசில் உள்ள மாமாக்கள் கொடுக்கிற இடம்தான் இப்படி..அதையும் சொல்லி இருக்கிறேன்..

      மதம் மனிதன் கற்பித்தது, ஆண், பெண் பரிணாமத்தின் விதி.. அதில் கவர்ச்சி என்பது உயிரினப்பெருக்கத்திற்கான ஆதாரம்... அதில் எங்கோ திசைகெட்டு பயணித்து ஆண்களில் சிலர் கற்பழிப்பு.. இதற்கு வேராக இயற்கை இருக்கிறது..

      மதத்தில் எங்கே இயற்கை விதி ? மோடி வந்தால் முஸ்லீம்களில் மிகச்சிறு சதவீதம் உள்ள அடிப்படைவாதிகளின் ஆட்டம் அடக்கப்படும் என்று மட்டுமே சொல்கிறேன். இதுவும் நம்பிக்கைதான்.

      Delete
  22. மதத்தை நாம் விடாதவரை மதம் நம்மளை விடாது; கட்டாயம் மதங்கள் வளரும்; மனித நேயம் அழியும். இது யார் ஆண்டாலும் இந்தியா வல்லரசு, என்ன, ஒரு ஜனநாயக அரசாகவே ஆக முடியாது.

    பின்குறிப்பு:
    ஒட்டு போடுவது மட்டும் ஜனநாயகம் அல்ல.

    ReplyDelete
  23. நன்றி நண்பரே..நான் என்ன நினைத்தேனோ ,அதை நீங்கள் எழுதி விட்டீர்கள்..தள்ளாடி கொண்டிருக்கும் நமது நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமெனில் , மோடி பிரதமர் ஆனால் மட்டுமே முடியும்..ஆதரிப்போம் மோடியை.

    ReplyDelete
  24. என்ன ஜோதிஜி சிவாவின் தைரியத்தை பாராட்டியது சரி பதிவு பற்றி கருத்து சொல்லாமல் போய்விட்டீர்களே

    நண்பா...........

    சிவா பொதுவாக இது போன்று பெரிய பதிவுகள் எழுவதில்லை. தேவையற்ற கருத்துக்கள் என்று நிறைய விசயங்களைப் பற்றி எழுத வாய்ப்பிருந்தும் கூட எழுதுவதில்லை. இந்த சுற்றுப்பயணத்தை சென்று வந்ததும் அது குறித்த அனுபவங்களை என்னிடம் கூறிய போது சரியோ தவறோ எழுதலாமே என்ற போது அமைதி காத்தவர் இப்போது எழுதியிருந்ததை வைத்து அவரின் தைரியத்தை பாராட்டி இருந்தேன்.

    என் கருத்து.

    http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5171108.ece

    இந்த கட்டுரை இஸ்லாம் பற்றி இஸ்லாமியரைப் பற்றி ஒரு இஸ்லாமியர் எழுதியது.

    பத்து பேரில் இரண்டு பேர்கள் இப்படி உலகம் மழுக்க இருப்பதால் எட்டு பேருக்கு கிடைக்கும் விமர்சனம் இது தான்.

    ReplyDelete
    Replies
    1. ///தேவையற்ற கருத்துக்கள் என்று நிறைய விசயங்களைப் பற்றி எழுத வாய்ப்பிருந்தும் கூட எழுதுவதில்லை///
      கருத்துக்கள் தேவை தேவையற்றது என்று நினைக்க கூடாது நாம் என்ன நினைக்கிறோம் என்று சொல்லி விவாதிக்க வேண்டும் அப்போதுதான் தெரியாத பல விஷயங்கள் நமக்கு புரிய ஆரம்பிக்கும் நான் சொல்லும் அனைத்தும் சரியென்று சொல்லவரவில்லை ஆனால் என் புத்தியில் தோன்றியதை சொல்லி விவாதிக்கும் போது புரியாத பலவிஷ்யங்கள் புரிய ஆரம்பிக்கும் நீங்கள் ஆழ்ந்து சிந்திப்பவர் என்பதால்தான் உங்களை பதிவு பற்றி கருத்து சொல்ல வேண்டுகோள் விடுவித்தேன் அது சரிதானே அல்லது தவறா?

      Delete
    2. விவாதங்கள் தேவையில்லாத அளவிற்கு ஒரு பிரச்சினையை தெளிவாக பார்க்கமுடியுமானல் அதைப்பற்றி பேச வேண்டியதே இல்லை... அப்படித்தான் பல விசயங்களை நான் கடந்து சென்று விடுகிறேன். மோடி வருகை குறித்து இணையத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் எதிர்ப்பு இருந்ததால்.. நொந்து போய் எழுதக்கூடாது என நினைத்தை எழுத வேண்டியதாகிவிட்டது :)

      Delete
  25. அண்ணன் மணிமாறனின் கருத்துக்களே எனது கருத்தும்\\

    மதுரை தமிழன் அண்ணனும் மிக சரியாக கூறி உள்ளார்

    ReplyDelete
  26. For all, There are many Muslim countries our neighbors just have a trip to their country with kumkum or red in your forehead and see and write the happenings as comment. Go with protection. But in India any one can come without fear.

    ReplyDelete
  27. சிவா,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

    சதீஷ் செல்லதுரையும், மதுரை தமிழனும் அழகான முறையில் தங்கள் எதிர்கருத்தை வெளிபடுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.

    காஷ்மீரில் நடந்ததை வைத்து ஒரு சமூகத்தையே நீங்கள் எடைபோடுவீர்கள் என்றால், ஒரு பாபர் மசூதியையோ அல்லது குஜராத்தையோ அல்லது முசாபூர்நகரையோ வைத்து நாங்கள் எடைபோடவும் நேரம் ஆகாது. ஆனால் இதுநாள் வரை இந்திய முஸ்லிம்கள் அப்படி நடந்துக்கொண்டதில்லை இனி நடக்க போவதும் இல்லை.

    முசாபூர்நகரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை காப்பாற்றினாரே அந்த ஹிந்துவும், மத்திய பிரதேசத்தில் விஷ வாய்வு தாக்குதலுக்கு உள்ளான மக்களுக்காக இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றாரே அந்த முஸ்லிமும், இன்னும் இது போன்ற லட்சகணக்கான மக்கள் இருக்கும் வரை இது போன்ற கட்டுரைகளும் சரி, சங்பரிவாரத்தின் சூழ்ச்சிகளும் சரி பலனளிக்க போவதில்லை.

    தீவிரவாதத்திற்கு மத முகவரி இல்லை என்பதெல்லாம் இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள விஷயம். தீவிரவாதத்தில் ஈடுபடும் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் இந்தியன் என்று திருத்த முயலாமே ஒழிய இதுபோன்ற அறியாமையின் எண்ணங்களால் அல்ல.

    மோடி என்பது ஒரு மாயை. அந்த பலூனை முஸ்லிம் அல்லாதவர்கள் பலரும் பஞ்சராக்கி வருகின்றனர். ரத யாத்திரை என்ற பெயரில் மத பிரிவினையை தூண்டிய அத்வானியின் பிரதமர் கனவுக்கு நேர்ந்த கதிதான் மோடிக்கும் ஏற்பட போகின்றது. நானும் பார்க்க தான் போகின்றோம்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
    Replies
    1. சதீஷ் செல்லத்துரை இது கட்டுக்கதையாக இருக்கலாம் என்கிறார்.. சிரிப்புதான் வருகிறது :) கீழே கமெண்ட் பண்ணி உள்ள நடராசன் கணபதி தான் தலையில் காயம் அடைந்தவர். விசாரித்துக்கொள்ளலாம். உடைக்கப்பட்ட வண்டி, அந்த அம்மா, சுற்றிலும் இயல்பான அந்த பிராந்திய முகங்களுடன் புகைப்படங்கள் இருக்கின்றன்.. எல்லாவற்றையும் பகிர்ந்து இன்னும் சூடாக்குவது என் விருப்பமல்ல.... மோடியை பஞ்சராக்க நிறைய ஆளுங்க இருக்கும்போது... உங்க பக்கத்துல இருந்து ஏன் இவ்வளவு சிரமப்படனும்ங்கிறதுதான் என்னுடைய கேள்வி ? இந்த கட்டுரையின் சாராம்சமும் :)

      Delete
  28. //இங்கு நம்மை ஆள்பவர்களால் நமக்கு பாதுகாப்பு இல்லையெனும் போது நாம் ஏன் நம் பாதுகாப்புக்காக RSS, பிஜேபியை ஆதரிக்க் கூடாது.

    நாத்திக கொள்கையில் தீவிரமாக இருந்த நான் இந்துவாக மாறியதற்குக் காரணம் இதைப் போன்ற ஒரு சம்பவமே காரணம்.//

    சீரியசான கட்டுரைகளை படிக்கும் போது இப்படியான நகைச்சுவைகள் இருப்பது மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்ற ஆய்வின் அடிப்படையிலும், தன் மத்தில் உள்ள குளறுபடிகளின் தாக்கத்தினாலும் தான் ஒருவன் நாத்திகன் ஆகின்றான். அவன் திரும்ப கடவுள் நம்பிக்கைக்கு/தன் மதத்திற்கு போகின்றான் என்றால் தன் மதத்தில் உள்ள குளறுபடிகளுக்கு விடை விடைத்து விட்டது என்ற ஆய்வின் அடிப்படையில் மட்டுமே சாத்தியம். அடுத்த சமூகத்தின் மீது வெறுப்புணர்வு வந்ததின் மூலம் நாத்திகனுக்கு கடவுள் நம்பிக்கையோ அல்லது மத நம்பிக்கையோ வந்துவிடுமா?

    உண்மை என்னவென்றால், தான் நாத்திகன் என்று போய் சொல்லிருக்க வேண்டும் அல்லது நாத்திகம் என்று நாவு சொல்ல உள்ளுக்குள் இந்துத்துவா மீது பற்று இருந்திருக்க வேண்டும். தன் பற்றை நியாயப்படுத்த ஒரு காரணம் கிடைத்தவுடன் 'நான் இப்படி இருந்தேன், இதனால் தான் இப்படி ஆகிவிட்டேன்' என்று புரளியை கிளப்ப வேண்டும். மக்கள் இது போன்றவர்களிடம் இருந்து ஜாக்கிரதையாகவே இருக்கின்றனர்.

    நன்றி.

    ReplyDelete
  29. ட்ஹேவரவததை அடியொடு வெரருப்பொம்.

    ReplyDelete
  30. ட்ஹேவரவததை அடியொடு வெரருப்பொம்.

    ReplyDelete
  31. இவ்வளவு நாளா நீங்க ஞானத்தைத் தேடி போயிட்டு வர்றீங்கன்னுல நினைச்சேன்! மதத்தைத் தேடித்தான் திரியிறீங்களா? :)

    ReplyDelete
    Replies
    1. ஞானத்தைத் தேடிதான் புனித பயணம் சென்றார்கள் அங்கு மதத்தை தேட வைத்தது கல் வீசியவர்களும்,கல்வீசச்செயதவர்களும்தானே.
      வாழ்க வளமுடன்
      கொச்சின் தெவதாஸ்

      Delete
    2. சார், ஞானத்தைத் தேடிச் சென்ற நபிகளாருக்கு மெக்காவில் கல்லடி விழுந்தது. ஏசு நாதருக்கும் விழுந்தது. சாக்ரடீஸூக்கு விசமே தரப்பட்டது, இந்திய துணை கண்டத்து ஞானிகள் கல்லடிபட்ட வரலாற்றை சொல்ல ஆரமித்தால் இந்தப் பக்கம் போதாது. மதங்களில் வித்யாசம் இருக்கலாம்! ஆனால் மத அடிப்படைவாதிகளிடத்தில் ஒருபோதும் வித்யாசம் இருப்பதே இல்லை!

      Delete
    3. ஞானத்தை தேடிப்போறதில்லை... இது உங்களுக்குத் தெரியாததும் இல்லை :)

      தொழில் சூழ்நிலைகள், இருக்கிற அழுத்தங்களில் ஞானம் பற்றி சிந்திக்ககூட/நடைமுறைப்படுத்த நேரமிருப்பத்ல்லை.. இப்படி எங்கிட்டாவது கிளம்பினாத்தான் உண்டு...ஆனா என்ன போன இடத்தில் கூட மதம் என் மீது திணிக்கப்பட்டு விட்டதுன்னு தான் சொல்லி இருக்கிறேன்....

      சரி மதம் வேண்டாம், அரசியல் வேண்டாம், பாசம் பற்று வேண்டாம்னு போனாலும் ‘ அண்ணே’ ந்னு கூப்பிட்டா ஓடியாந்திடரமே என்ன செய்ய :))

      கட்டுரைய படிச்சிருப்பீங்க... உயிர்பயம் வர்றப்ப கூட மனசு எப்படி பக்குவமா இருந்துன்னு எழுதி இருக்கேனே :) இந்த வாய்ப்பு அங்க போனதினாலதானே எனக்கு கிடைச்சுது

      Delete
    4. இந்தச் செயல் மிகக் கேவலமான அறுவெருக்கத்தக்க மனிதத் தன்மையற்ற செயல் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. இதே காஷ்மீரம் தவிர்த்து வேறு எங்கேனும் இது நடந்து இருந்தால் 100% மத ரீதியானது. ஆனால் காஷ்மீரின் நிலை வேறு, அவர்கள் சுதந்திரத்திற்கு முன்னர் தனி தேசமாக வாழ்ந்தவர்கள். இந்தியாவிற்குத்தான் அடிமைத் தளையில் இருந்து சுதந்திரம் கிடைத்தது.காஷ்மீருக்கு அல்ல, காரணம் அவர்கள் இந்திய தேசத்தவர்கள் அல்ல.காஷ்மீரிகள். தனி நாட்டவர்கள். நமக்குச் சுதந்திரம் கிடைத்த பின்னர் அருகில் இருந்த அவர்களை வலுக்கட்டாயமாக நமது தேசத்துடன் இணைத்து அவர்களை நாம் அடிமைப்படுத்திவிட்டோம் என்ற எண்ணத்தில் உடையவர்கள். அவர்கள் மனங்களை வெல்லும் எந்தச் செயலையும் நமது அரசுகள் செய்யவில்லை என்பதும் உண்மை. அங்கே அவர்களது நடவடிக்கை இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. என்னை அடிமைப்படுத்திய இந்தியனைக் காயப்படுத்துகிறேன் என்ற மனநிலை. நேரில் சென்று வந்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன்..ஹஜ்ரத்பால் மசூதிக்குச் செல்லும் இந்திய முஸ்லீம்களையும் இதே போல் அவர்கள் துளியும் மதிப்பதில்லை. இதற்காக நீங்கள் பிஜேபியில் சேர்ந்ததுபோல நான் என்ன இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிலா சேர முடியும்? இன்னொரு விசயம் தெரியுமா?காஷ்மிரிகள் இந்தியர்களை எந்த அளவிற்கு வெறுக்கின்றனரோ அதற்கு சற்றும் குறையாத அளவிற்கு பாக்கிஸ்தானியர்களையும் வெறுக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் அவர்களால்தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணமாகி தாங்கள் இந்தியாவிடம் அடிமைப்பட்டோம் எங்கின்றனர். இது பெரும் அரசியல் அண்ணே. திரு.பா.ராகவன் அவர்கள் எழுதிய "காஷ்மீர்" புத்தகம் கிடைத்தால் வாங்கிப்படியுங்கள். காஷ்மீர் பிரச்சனையையும் அவர்கள் நடவடிக்கையும் புரிந்துகொள்ள தமிழில் எனக்குத் தெரிந்து இதைவிட எளிய புத்தகம் இல்லை. நாம் செய்ய வேண்டியது "நம்மை அவர்கள் வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்துக்கொண்டார்கள். இருப்பினும் நாம் தனியாக காஷ்மீரிகளாக இருப்பதைவிட இந்தியாவுடன் இந்தியர்களாக இருப்பதே சிறந்தது" என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே! சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளாக நாம் அதைச் செய்யத் தவறிக்கொண்டு இருக்கிறோம். நான் எழுதிய இந்த பத்து வரிகளில் எதுவும் புரிந்துவிடாது. பக்கம் பக்கமாக விளக்க எவ்வளவோ உண்டு. சிம்பிளாக ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஈழ விடுதலையில் இந்து மதம் சார்தவர்கள் இருந்தபோதும் அது மதரீதியாக அடையாளம் காணப்படவில்லை. ஆனால் காஷ்மீர விடுதலை பிரச்சனையில் அவர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் மதத்தோடு சம்மந்தப்படுத்துகின்றீர்கள். தட்ஸ் ஆல்.

      Delete
    5. அப்துல்லாண்ணே,

      // ஆனால் காஷ்மீரின் நிலை வேறு, அவர்கள் சுதந்திரத்திற்கு முன்னர் தனி தேசமாக வாழ்ந்தவர்கள். இந்தியாவிற்குத்தான் அடிமைத் தளையில் இருந்து சுதந்திரம் கிடைத்தது.காஷ்மீருக்கு அல்ல, காரணம் அவர்கள் இந்திய தேசத்தவர்கள் அல்ல.காஷ்மீரிகள். தனி நாட்டவர்கள். நமக்குச் சுதந்திரம் கிடைத்த பின்னர் அருகில் இருந்த அவர்களை வலுக்கட்டாயமாக நமது தேசத்துடன் இணைத்து அவர்களை நாம் அடிமைப்படுத்திவிட்டோம் என்ற எண்ணத்தில் உடையவர்கள்.//

      அரசியலில் இருந்துக்கிட்டே இப்படி கெக்கேபிக்கேனு பேசினால் எப்படி?

      காஷ்மீர் மட்டுமா அப்போ தனி நாடா இருந்துச்சு, சுமார் 270 சமஸ்தானங்கள் தனியா இருந்துச்சு, 1947 ,ஆகஸ்ட்-15க்கு அப்புறம் தான் அவை எல்லாம் இந்தியாவோட இணைஞ்சுச்சு,இன்னும் சொல்லப்போனால் ரொம்ப சீக்கிரமா காஷ்மீர் சேர்ந்துடுச்சு, கடைசியா கோவா 1973ல தான் சேர்க்கப்பட்டது. பாண்டி கூட 1969ல தான்.

      எனவே எல்லா சமஸ்தானமும் இப்போ தனிநாடுனு பொங்கினா சரியாகுமா?

      ஹி...ஹி புதுக்கோட்டை சமஸ்தானம் கூட அப்போ தனி சமஸ்தானம் தான், எனவே இப்போ தனிநாடு ,பிரிஞ்சிப்போறோம்னு சொன்னா ஒத்துப்பீங்களா?

      இவ்வளவு ஏன் பாகிஸ்தானிலும் பல் சமஸ்தானங்கள் 1947க்கு பின்னர் இணைக்கப்பட்டுள்ளது, அதில் சுமார் 12 இந்து ராஜாக்கள் வசம் இருந்தவை,அவங்களும் இதே போல நினைச்சு சண்டைப்பிடிச்சா ஏத்துப்பீங்களா?

      என்னத்த பா.ராகவன் புக்கு படிச்சீங்களே ?

      #//"நம்மை அவர்கள் வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்துக்கொண்டார்கள். இருப்பினும் நாம் தனியாக காஷ்மீரிகளாக இருப்பதைவிட இந்தியாவுடன் இந்தியர்களாக இருப்பதே சிறந்தது" என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே! சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளாக நாம் அதைச் செய்யத் தவறிக்கொண்டு இருக்கிறோம்.//

      என்னத்த ஏற்படுத்த தவறிட்டோம்?

      காஷ்மீரிகளை எல்லாம் மடில தூக்கி வச்சு,சோறூட்டி விட்டிருக்கனுமா?

      மற்ற மாநிலங்களை விட சிறப்பாகவே கவனிக்கப்படுது,ஆனால் பாகிஸ்தான் தூண்டலில் தான் பிரச்சினை நடக்குது,ஆளுக்கு ஒரு கிலோ தங்கம் கொடுத்தாலும் ஒன்னும் செய்யலைனு தான் சொல்வாங்க,இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் அடிப்படை வசதிகள் குறைவாகத்தான் இருக்கு, எல்லாத்தையும் சரி செய்யனும், அது எப்போனு கொஞ்சமாவது கவலைப்படலாமே?

      # ஈழப்பிரச்சினையை காஷ்மீருடன் சரிக்கு சமமாக ஒப்பிடும் அளவுக்கு தான் உங்கள் அரசியல் அறிவு இருக்கு என்பது பெரிய அதிர்ச்சி!

      காஷ்மீரில் தன்னாச்சி பெற்ற மாநில அரசு இருக்கு,அதனை அம்மக்களே தேர்வு செய்கிறார்கள்,ஒரு மாநில அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துவிடும்,எனவே மக்களுக்கு குறை எனில் முதலில் மாநில அரசு தான் பொறுப்பு.

      இலங்கையில் அத்தகைய தனி நிர்வாகம் கூட தமிழர்களுக்கு கொடுக்கப்படவில்லை.ஜனநாயகமும் இல்லை. எனவே தங்கள் உரிமைப்பாதிக்கப்படுவதால் போராடினாங்க.

      ஈழப்பிரச்சினைக்கு காரணம் ,ஈழத்தவர்களே, இலங்கை சுதந்திரம் அடையும் போதே வெள்ளைக்காரனிடம் பேசி தனி மாநிலமாவது கேட்டிருக்கலாம். அப்போ சிங்களவனை சகோதரர்கள்னு சொல்லி அவங்க விருப்பம் போல சுதந்திர ஒப்பந்தம் போட விட்டுட்டாங்க,இதுல சில ஈழத்தலைவர்களின் சுய நலமும் இருந்துச்சு.

      Delete
    6. வவ்வால் அண்ணே,

      நான் எழுதிய இந்த பத்து வரிகளில் எதுவும் புரிந்துவிடாது. பக்கம் பக்கமாக விளக்க எவ்வளவோ உண்டு என்று சொல்லிவிட்டுத்தான் அந்த 10 வரிகளையே எழுதினேன். இதில் நான் இதைத்தான் முழுசா சொல்றேன்னு அரசியல் அறிவையெல்லாம் இழுத்து நீங்க அதிர்ச்சி அடைஞ்சா நான் என்ன செய்ய முடியும்?

      ஆனா ஒன்னு நீங்க எழுதுனது எல்லாம் பார்த்து நான் உங்களை நினைச்சு அதிர்ச்சி அடைஞ்சிட்டேன். சரி நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் நம்முடைய விவாதங்களை இங்கேயே தொடருவோமா அல்லது தனி மெயிலிலா?

      Delete
    7. அசின் பேரவை தலைவரோட தனி மெயில் தொடர்பா? அய்யோ அய்யோ....... கொடுத்து வச்ச ஆளாச்சே.

      Delete
  32. இத்துனை நபர்கள் தங்களது பதிவை விமர்சித்துதான் எழுதி உள்ளனரே தவிர தங்களது புனித பயணத்தில் கல் வீசிய அக்கிரமங்களுக்கு யாரும் வருத்தப்பட்டதாகக் கூடத் தெரிவிக்கவில்லை.
    இந்துக்கள் பெரும்பாலும் அமைதியான வாழ்வைத்தான் விரும்பகிறார்கள்.
    ஆனால் நடைபெரும் சூழ்நிலைகள பார்த்தால் நம்மையும் கலலெடுக்க வைத்துவிடுவார்களோ எனக் கவலையாக உள்ளது.
    நாம் இந்தியர்கள் என்ற முஸ்லீம்கள் போன தலைமுறையோடு முடிந்துவிட்டது்.
    இப்போது 5 வயதிலேயே இந்திய, ஹிந்து எதிர்ப்பு எண்ணங்களை மனதில் மதரசாக்கள் மூலமாக விதைத்து விடுகிறார்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
    Replies
    1. வருத்தம் தெரிவிக்க மாட்டார்கள் என்பது தெரிந்த விசயம்தான். :) எந்த மதமா இருந்தாலும் மெஜாரிட்டி பொழப்பை பார்க்கிறவங்கதான்,,, கொஞ்சம்பேர்தான் ஏதேனும் ஆதாயம் கருதி இப்படி செயல்படறாங்க.. அவர்களை அடையாளம் காணவேண்டும்.. மதம் பொதுதான் :)

      Delete
    2. எந்த மதமா இருந்தாலும் மெஜாரிட்டி பொழப்பை பார்க்கிறவங்கதான்,,, கொஞ்சம்பேர்தான் ஏதேனும் ஆதாயம் கருதி இப்படி செயல்படறாங்க.//

      இந்தத் தெளிவு இருந்தாச் சரி :)

      Delete
  33. மோடியை ஏன் ஆதரிக்க முடியாது ?

    http://savukku.net/index.php?option=com_content&view=article&id=1878:2013-09-26-02-05-51&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

    ReplyDelete
    Replies
    1. திரு.தமிழ்வேந்தன்...
      நீங்களும், சாவுக்கும், வேறு யாரை ஆதரிப்பது என்று சொல்லுங்கள்...
      கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் இதே சவுக்கும் மொத்த தமிழகமும் ஜெயலலிதாவை ஆதரித்தது... எதற்காக... ஜெயலலிதா மிகச்சிறந்த, தூய்மையான, ஊழலே அற்ற, பொற்கால ஆட்சி தருவார் என்றா?
      இல்லவே இல்லை....
      கருணாநிதியும், தி.மு.க அரசும் செய்த அட்டூழியங்கலால், அவர்களை ஒழித்துக்கட்ட ஜெயலலிதாவை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதால்தான்...

      அதே நிலைமைதான் இப்போது இந்தியாவுக்கும்...
      காங்கிரஸ் கட்சியும், அதன் முதுகெலும்பில்லாத ஜால்ரா ஜோக்கர் ஊழல் தலைவர்களும், சோனியா குடும்பமும் கடந்த 10 வருட ஆட்சியில் செய்த ஆடூழியங்கள் எல்லையற்றது... இனி ஒரு முறை தொடர்ந்து அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினால் "அந்த கடவுளாலும் இந்தியாவ காப்பாத்த முடியாது"
      அதனால்தான், இப்போது உள்ளதில் ஊழல் குறைந்த, கொஞ்சம் தெளிவான, தைரியமான தலைவர் மோடி யை ஆதரிக்க வேண்டும்...
      இந்திய அரசியலமைப்பு சட்டம் மிகவும் உறுதியானது, தெளிவானது... மோடி வந்தால் எல்லாவற்றையும் மாற்றி சிறுபான்மையினரை கொன்று குவிப்பார் என்பதெல்லாம் நமது பெருமைக்குரிய ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள், மற்றும் ஓட்டுப் பொருக்கி, சுயநல பிராந்திய கட்சிகளான SP, JD போன்றவைகளாலும், அப்புறம் நம்ம CONgress கட்சியும், அப்புறம் நம்ம இந்திய அறிவுஜீவிகளும் செய்த பொய்ப் பிரச்சாரங்களால் ஏற்பட்ட பொய்யான பயம் மட்டுமே...
      Regards
      Sankar

      Delete
  34. // நாம் இந்தியர்கள் என்ற முஸ்லீம்கள் போன தலைமுறையோடு முடிந்துவிட்டது்.
    இப்போது 5 வயதிலேயே இந்திய, ஹிந்து எதிர்ப்பு எண்ணங்களை மனதில் மதரசாக்கள் மூலமாக விதைத்து விடுகிறார்கள். //

    சிறிதும் அடிப்படை ஆதாரம் அற்ற கேவலமான குற்றச்சாட்டும். இந்துக்களில் மாவோயிஸ்ட், தமிழ் தேசியவாதிகள் துவங்கி இன்னும் எத்தனையோ கோடிபேர் நாங்கள் இந்தியர்களே அல்ல என்று கூறித் திரிபவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் இந்துப் பெயரைத் தாங்கி இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்! ஆனால் சுத்தமான தேசப்பற்றுடைய நான் அப்துல்லா என்ற பெயரை வைத்து இருப்பதால் ஒவ்வொரு நொடியும் எனது தேசப்பற்றை நான் உங்களுக்கு நிரூபித்துக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டும்?? கொடுமை.

    ReplyDelete
    Replies
    1. ஹனுமானையே நெஞ்சை கிழித்தும், சீதையை நெருப்பிலேற்றியும் நிரூபித்துக்கொண்டவர்கள்!
      புரிந்த்வர்க்கு நிரூபணம். தேவையில்லை
      மமற்றவர்களுக்கு நிரூபிப்பதால்பபயனில்லை

      Delete
  35. சிவா,

    //தீவிரம் காட்டத்தான் வேண்டும். அப்படியானால் அது மத மோதலுக்கு வழிவகுக்காதா? மதத்தீவிரவாதத்தை தூண்டுவது ஆகாதா ? அதையும் நிகழ்காலத்தில் வலைதளம் பரிந்துரைக்கிறதா? என்ற ஆச்சரியமும் வரும்.//

    மோடிக்கு ஆதரவாக இந்துத்வாக்கள் பேசலைனாத்தான் ஆச்சர்யம் வரும் :-))

    # அமர்நாத் யாத்திரிகர்கள் மீதான கல்வீச்சு ,மத அடிப்படைவாதிகளின் மோசமான செயலே,அதனை தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும், ஆனால் அதுக்கு மோடி பிரதமரா வந்தால் தான் சாத்தியம் என்பதில் என்ன நியாயம் இருக்குனே தெரியலை.

    ஒரு ரவுடி தொல்லை கொடுக்கிறான்னு இன்னொரு ரவுடிக்கிட்டே உதவிக்கு போவது போல இருக்கு :-))

    # மோடி இந்துக்களின் பிரதிநிதியா? இல்லை அவர்தான் இந்துவா? மோடியின் மதநம்பிக்கைக்கு பெயர் "வைதீக சனாதனம்" அதுவும் வைணவப்பிரிவு என்பதே சரியானது.

    எனவே பொதுவாக நாட்டில் இருக்கும் "so called hindus's"க்கு அவரால் பிரயோசனமில்லை. அவர்கள் பிரச்சினையை கண்டுக்கவும் மாட்டார்.

    மேட்டுக்குடி, உயர்வகுப்பு இந்துக்களுக்கு வேண்டுமானால் "கவனிப்பு" கிட்டும்,எனவே இந்துக்களே மோடிக்கு ஆதரவாக திரளுங்கள் என நீங்கள் கூப்பாடு போடுவது உங்கள் அறியாமையின் வெளிப்பாடே.

    # நீங்க இந்து தானே சிரி ரெங்கம் கோயிலில் போயி மணி ஆட்டி சூடம் கொளுத்திப்பாருங்களேன்? அங்கே இருக்க உச்சிக்குடுமிக்கூட்டமே அடிச்சு தொறத்தும் :-))

    # ஆண்டவனைத்தேடி அமர்நாத்துக்கும்,அய்யப்ப மலைக்கும் போவதெல்லாம் பக்தியின் வெளிப்பாடா? உள்ளூரில் ஆயிரம் கோயில் ஒரு வேளை விளக்கு எரிக்க எண்ணைக்கூட இல்லாமல் பாழடைஞ்சுக்கிடக்கு ,உண்மையில் பக்தி இருக்கு, இறை நம்பிக்கை இருக்குனா அந்த கோயிலுக்கு போய் விளக்கு போடுங்க, ஏன் அங்கேலாம் போனால் சாமி வரம் கொடுக்க மாட்டேங்குதா :-))

    # மோடி வந்து என்ன கிழிக்க போறார்னு தெரியலை,ஆனால் நீங்க ஏன் இப்படிலாம் தாக்குதல் நடக்குது தடுக்க நடவடிக்கை எடுக்கனும்னு மத்திய உள்த்துறை அமைச்சகத்துல புகார் செய்யக்கூடாது?

    உங்களைப்போல பலரும் போயிட்டு அடிவாங்கிட்டு வந்து சும்மா இருப்பதால் அடிவாங்கினவங்களே அமைதியா போயிடுறாங்க,நாம எதுக்கு நடவடிக்கை எடுக்கனும்னு நினைச்சுக்கூட அரசாங்கம் சும்மா இருக்கலாம், எனவே பலரும் புகார் கொடுக்கனும் ,பத்திரிக்கைகளில் செய்தி வரவைக்கனும் ,ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படலாம், அதை விட்டுட்டு மோடி ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாப்போயிடும்னு சொல்வது எந்த வகையில் சேர்த்தி?

    ReplyDelete
  36. காஷ்மீர் மட்டுமா அப்போ தனி நாடா இருந்துச்சு, சுமார் 270 சமஸ்தானங்கள் தனியா இருந்துச்சு, 1947 ,ஆகஸ்ட்-15க்கு அப்புறம் தான் அவை எல்லாம் இந்தியாவோட இணைஞ்சுச்சு,இன்னும் சொல்லப்போனால் ரொம்ப சீக்கிரமா காஷ்மீர் சேர்ந்துடுச்சு, கடைசியா கோவா 1973ல தான் சேர்க்கப்பட்டது. பாண்டி கூட 1969ல தான்.

    வவ்வால் நீங்களா எழுதியது?


    1947 இல் இந்தியா விடுதலை அடையும் போது மொத்தம் 565 சமஸ்தானங்கள் இருந்தன.

    ReplyDelete
  37. தொழிலதிபரே,

    நான் சொன்ன எண்ணிக்கை கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம், நான் சொன்னது 47க்கு அப்புறம் இந்தியானு பேரு உருவானப்புறம் சேர்க்கப்பட்ட எண்ணிக்கை, நிறைய சமஸ்தானங்கள் ,இந்தியா உருவான அன்னிக்கே (முன்னரேவும்)இணைந்து கொள்வதாக Instruments of Accession ஒப்பந்தம் கை எழுத்துப்போட்டுட்டாங்க .

    இந்தியானு ஒரு நாட்டுடன் அப்போ இல்லாதப்ப்குதினு சொல்லிடுவாருன்னு தான் தனிச்சு 47- ஆகஸ்ட் ,15க்கு அப்புறம் இருந்த எண்ணிக்கையை குறிப்பிட்டு வச்சேன்.

    இது எப்பவோ படிச்சது, இந்தியா (நேரு)அப்போ மெதுவாக செயல்ப்பட்டதால் தான் பல சமஸ்தானங்களை உடனே சேர்க்காமல் இழுத்துக்கிட்டு போய் பிரச்சினை எல்லாம்னு.

    நான் சொன்னதுக்கு இப்படி சொல்லுறிங்களே, 47ல காஷ்மீர் சுதந்திரமே ஆகலைனு அப்துல்லா சொன்னதுக்கு ஒன்னும் சொல்லக்கானோம், அப்போ காச்மீரும் பிரிட்டீஷிடம் இருந்து சுதந்திரம் ஆகிடுச்சு, தனி நாடாகவோ இல்லை விரும்பிய நாட்டுடன் சேரலாம்னு நிலை. பாக்கிஸ்தான் ஆக்ரமிக்க பார்க்கவே ,ஹரிசிங்க் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுட்டார். இதுக்கு ஹரிசிங்க் அனுப்பிய ஒப்பந்தத்தில கை எழுத்து போடாமல் நேரு ஒருவாரம் போல இழுத்தும் இருக்கார்,பாக்கிஸ்தான் ராணுவமே உள்ள நுழைஞ்சிடுச்சுனு தெரிஞ்சு அப்புறம் வல்லபாய் படேல் எல்லாம் அழுத்தம் கொடுத்து ,கை எழுத்தானது,முன்னர் ஃபிரண்ட் லைன் பத்திரிக்கையில் ,அப்போ சண்டையிட்ட ராணுவ மேஜர் ,நேருவின் மெத்தனத்த கிழிச்சு கொடுத்த பேட்டி வந்துச்சு,அத வச்சு தான் சொன்னேன்.

    ReplyDelete
  38. அசின் பேரவைத் தலைவரே

    எனக்கு கணக்கீடு குறித்து கற்றுத் தந்ததே நீங்க தானே. நீங்களே கொஞ்சம் முன்னே பின்னே சைடு என்று எழுதலாமா? வரலாறு மன்னிக்குமா?

    அப்துல்லா எழுதிய வார்த்தையில் நான் ஆஃப் ஆயிட்டேன்.

    நீங்க அங்கே நடக்கிற வைத்து மோடியை ஆதரித்தால் நான் என்ன முஸ்லீம் லீக் ல் சேரனும்னு நினைக்கனுமா? இதை விட புரிதல் வேற என்ன வேனும்?

    பாக்கிஸ்தான் ஆக்ரமிக்க பார்க்கவே ,ஹரிசிங்க் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுட்டார்

    இதுவும் தப்பு.

    அய்யா ஹரிசிங் குதிரை மைதானத்தில் ரொம்ப பிசியா இருந்தார். அவரவது சேருவதாவது? பாகிஸ்தான் ஆதிவாசி கூட்டத்தை படைதிரட்டி உள்ளே வந்து பாகிஸ்தான் அலும்பு பண்ற வரைக்கும் அவர் மசிய காணோம். இனி வாய்ப்பே இல்லை என்றவுடன் தான் பட்டேலிடம் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். அதன் பிறகே நேரு அரசாங்கம் ராணுவத்தை அனுப்பியது. அதன் பிறகே காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இது எப்பவோ படிச்சது, இந்தியா (நேரு)அப்போ மெதுவாக செயல்ப்பட்டதால் தான் பல சமஸ்தானங்களை உடனே சேர்க்காமல் இழுத்துக்கிட்டு போய் பிரச்சினை எல்லாம்னு.

    நம்ம நாட்டில் இன்னமும் திட்டுவதற்கென்றே இருக்கும் இரண்டு ஆத்மாக்கள்.

    ஒன்று காந்தி மற்றொன்று நேரு.

    இன்னும் நூறு வருடம் ஆனாலும் நாம் இவர்களை திட்டிக் கொண்டே தான் இருப்போம். காரணம் இவர்களின் அர்பணிப்பும் தியாகமும் வந்த வரப்போகின்ற எவரிடமும் எதிர்பார்க்க முடியாத சுயபச்சாதாபத்தால் மட்டுமே.

    ReplyDelete
  39. அதிபரே,

    // பாக்கிஸ்தான் ஆக்ரமிக்க பார்க்கவே ,ஹரிசிங்க் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுட்டார்

    இதுவும் தப்பு.\\


    னான் சொன்னதுக்கும்,னீங்க சொன்னதுக்கும் என்ன வித்யாசம்?

    Any mabbu? Drink some lemon soda !

    ReplyDelete
  40. ஆத்தாடி இந்த விளையாட்டு நான்வரல. கூகுள் ப்ளஸ் ல் இது போன்ற விவாதங்களை தவிர்த்ததற்கு முக்கிய காரணமே இது போல ஓடிபிடித்து விளையாடும் நேரத்தில் உருப்படியாக அழகாக ஒரு 600 வார்த்தைகளில் ஒரு பதிவு எழுதி விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. தொழிலதிபரே,

      நாமலாம் கூகிள் பிளசையே தவிர்த்தவங்க, நம்மக்கிட்டே போயி கத சொல்லிக்கிட்டு :-))

      #// உருப்படியாக அழகாக ஒரு 600 வார்த்தைகளில் ஒரு பதிவு எழுதி விடலாம்.//

      சீக்கிரமாக அப்படி எதாவது எழுத முயற்சி செய்யுங்க , I'm waiting!

      Delete
  41. நாம் இருப்பது இந்தியாவா அல்லது எதாவது முஷ்லீம் நாடா?

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. Siva,

    I strongly condemn what had happened to you. My very close friends circle has Muslims, Christians and 2 hindus. We have been very close friends for more than 13 years. So I am not against any religion. I am against people and I would take the same weapon they take.

    Coming to Modi, many oppose him for only one reason-RELIGION. From that are these people agreeing to the fact that Congress keeps things in a secular way?? I am supporting Modi not as a Hindu but as a business man from trading/shipping/port community. I am supporting Modi as an Indian, because I feel like I am being ruled by a foreigner and who is allowing many people to come and sit in my living room without my permission. He has a vision towards developed India and to attain that he has missions. He has done that in Gujarat. One example is two third of India's Solar energy comes from Guajarat.
    Savukku website spoke about Modi's support to Tata. Modi is very much a supporter to India INC. Modi asking a private person to invest in Port sector giving him tax benefits and allotting 1000s of acres of land as SEZ(pls remember there are no big fights in Gujarat for such SEZs.) Then he calls industrialists asking them to invest in that SEZ. Gov is providing other infrastructure like road connectivity etc. Now what will happen in that place. Port has to run, industries has to run- this increases employment. Because of this employment other services gets developed there. Slowly a good economic cycle takes place and the region gets developed.

    Modi has become very much a NARCISSIST like MK. He likes publicity and power. Also with all media yearning for TRP, they will not allow Modi to raise his Hindutva head, very much. He always want POWER. Modi's elevation to PM will definitely help India more than hindus.

    ReplyDelete
  44. மிக நல்ல கட்டுரை. இந்தியாவின் தலைமை மாறினால் நல்லது நடக்கும் என நம்பும் படி இருக்கிறது.

    ReplyDelete
  45. தில்லான போஸ்ட், உங்கள் தில்லுக்கு நான் தலைவணங்குகிறேன், நிதர்சனமான உண்மை

    ReplyDelete
  46. மிக நன்றாக இருந்தது. குஜராத்தில் மோடி ஆட்சிக்கு முன்பும் பல மத கலவரங்கள் நடந்துள்ளன. என்ன ஒன்று அவை நடந்த போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆகவே அவை பெரிதாக எடுத்துக் கொள்ளப் படவில்லை. ஆயினும் மோடி பிரதமர் ஆனால் அவர் மற்றொரு வாஜ்பாய் அரசு போல் நடத்துவார் என்பது உறுதி, ஏனெனில் இந்தியாவின் நிலைப்பாடு அவ்வாறு ஆகும். ந.பரமசிவம்

    ReplyDelete
  47. ஒஷோவை பார்த்து உங்கள் ப்ளாக் உள்ளே வந்தேன்.பிறகு தெரிந்து கொண்டேன்.நீங்கள் அந்த ஹிந்து மத கூட்டம்தான்.குட்பை!
    -குமரன்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)