"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Friday, July 22, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 9

மானசரோவர் ஏரியில் குளிக்க சென்றோம். அருகில் சென்ற போது சிறுபுற்கள் நிறைய நீருக்குள் இருந்தன. சேறு மாதிரி தெரிந்ததே ஒழிய, காலில் ஏதும் ஒட்டவில்லை. நீருக்குள் இறங்கியபோது சுனைநீரில் இருக்கும் ஜில்லென்ற தன்மை இருந்தது. . இயல்பாக நீராட முடிந்தது. கரையிலிருந்து சுமார் 100 அடி தூரம் நடந்தும் முழங்காலைவிட சற்றே மேலாக நீர்மட்டம் இருந்தது.





மானசரோவர் ஏரி சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. சக்தியின் துணையின்றி சிவத்தை காணமுடியாது. அடைய முடியாது. ஆகவே மானசீகமாக ஏரியினை வணங்கி, சிவத்தை வணங்க வந்த எனக்கு அனுமதி கொடு தாயே, இதற்கு என்ன தகுதிகள் வேண்டுமோ அதனை எனக்கு கூட்டுவிப்பாயாக என மனதார வணங்கிவிட்டு கிட்டதட்ட கால்மணிநேரத்திற்கு மேல் நீராடிவிட்டு கூடாரத்திற்கு திரும்பினேன்.



சற்று ஓய்வெடுத்தேன். அப்போது உள்காய்ச்சல் ஏற்பட்டது போல் உணர்ந்தேன். நல்லவேளையாக இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் சரியாகிவிட்ட்து. அப்போதுதான் அதிகநேரம் மானசரோவரில் குளிக்க வேண்டாம் என்பதன் பொருள் புரிந்தது. மெல்ல இரவும் வர, தூங்கப்போனோம். அதற்குமுன்னதாக இரவு 1 மணிவாக்கில் மானசரோவரின் கரைக்குச் சென்று தேவகணங்கள், சித்தர்கள் ஏரியில் நீராடுவதை காண்போம் என முடிவுடன் தூங்கச்சென்றோம்.

நாங்கள் எழுந்தபோது மணி மூன்று , ஆனால் நாய்கள் முன்னதாக சப்தமெழுப்ப எழுந்து சென்று கரையில் காத்திருந்தோம். மனோசரோவரின் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்த மலைத்தொடரின் (மேலே படம் அல்லது வீடியோ 30 முதல் 45 விநாடிகள்)பின்னணியில் வெளிச்சம் வெட்டி வெட்டி தோன்றியது. அவைகள் மின்னல்கள் தாம். நம்ம ஊரில் மின்னல் கோடுகோடாக பிரிந்து வேடிக்கை காட்டும். அங்கோ சின்னசின்ன வெடிகள் வெடித்ததுபோல் குபீர்குபீர் என வெளிச்சங்கள் முக்கோண வடிவிலும் பல்வேறு வடிவிலும் காட்சியளித்தன. ஆனால் ஒரு சப்தம் இல்லை. அப்படி ஒரு நிசப்தம். மின்னல் வெட்டினால் அதன் ஒலி இடியாக நம் காதுகளை வந்தடைய வேண்டும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. வாணவேடிக்கை மட்டும் நடந்து கொண்டே இருந்தது.

இந்த ஒளிகள் சில சமயங்கள் மலைகள் அமைப்பின் காரணமாக பின்னணியில் இருந்து உருண்டு வந்து ஏரியில் விழுவதுபோலும் தென்பட்டது. மற்றபடி வானிலிருந்து எந்த நட்சத்திரமும் இறங்கிவரவில்லை. ஒருவேளை எனக்கு சித்தர்களைக்காணும் பாக்கியம் இல்லையோ:)

சித்தர்கள்  காட்டாற்று வெள்ளம் போல் நம்முள் பாய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த வல்லவர்கள். ஊனக்கண்களால் காண வேண்டுவது அவசியமில்லை. இறையின் விளையாட்டு, இயற்கையின் விளையாட்டை சுமார் ஒருமணிநேரத்திற்கு மேல் இருந்து கண்டு களித்துவிட்டு மீண்டும் கூடாரம் வந்து படுத்தோம்.

யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

4 comments:

  1. நல்ல கட்டுரை தொடர்...


    போகவேண்டியவா கூட போனா சித்தர் எல்லாம் தெரியராளாம் :))

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி.,

    போகவேண்டியவா கூட போனா தெரிஞ்சதெல்லாம் வேற சாமி...:))

    ReplyDelete
  3. கண்டேன் கயிலை நாதனை

    என்று சொல்லுமளவிற்கு கயிலை குறித்த தொடருக்கு வாழ்த்துக்கள்.

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  4. கைலையினுடைய வீடியோ மிக அருமை, நண்பரே! velli panimalaiyai நான் மிகவும் ரசித்தேன், நன்றி!

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)