இலக்கை நிர்ணயித்து விட்டோம். அதை அடைய...
குறிக்கோளை நோக்கித் தொடர்ந்து இயங்குவது அவசியம்
மின் மோட்டார்களில் அதன் திறனைக் குறிக்க 1HP, 2 HP, எனக் குறிக்கப்பட்டிருக்கும்.
HP (horse power) என்பது குதிரைதிறன் என்பது உங்களுக்கு தெரிந்ததே.
குதிரையைவிட வேகமாக ஓடும் பல விலங்குகள் இருக்கின்றன.
புலி, சிறுத்தை போன்ற மற்ற மிருகங்கள் இரையைப் பிடிக்க குறிப்பிட்ட தூரத்திற்கு, மிக வேகமாக ஓடும். ஆனால் தொடர்ந்து ஓடாது. ஓட முடியாது.
ஆனால் குதிரை தொடர்ந்து பலமணி நேரம் ஓடும்.
இரைக்காக அன்றி இயல்பாகவே ஓடும்.
வேகமாக ஓடுவதை விட தொடர்ந்து ஓடுவது மிக முக்கியம்.
சமயத்தில் வேகமாக செயல்படும் ஆற்றலும் தேவைதான். அதைவிட தொடர்ந்து தாக்குப்பிடித்து, இயங்கும் ஆற்றலே மிகமுக்கிய தேவையாகும்.
இலக்கை நோக்கி ஓடும்போது,வழியில் தடைகள் வரலாம். பல்வேறு சூழ்நிலைகளால் இலக்கின் தூரம், காலம் தள்ளிப் போயிருக்கலாம். அதனால்.. தொடர்ந்து இயங்குங்கள். இல்லாவிடில் உங்களது இலக்கை அடைவது இன்னும் தள்ளிப் போகலாம். அல்லது தடைபட்டே போகலாம்.
அதனால் நண்பர்களே... குறிக்கோளை அடையும் வழிகளில் தொடர்ந்து இயங்குவது என்பது மிகவும் அவசியமானது.
நன்றி: கருத்து:அடுத்த ஆயிரம் நாட்கள் நூலில் இருந்து.
really nice, keep it up
ReplyDeletei updated my
new post here check out
//வேகமாக ஓடுவதை விட தொடர்ந்து ஓடுவது மிக முக்கியம்//
ReplyDeleteநிச்சயமா தொடர்ந்து இயங்கினால் தான் நினைச்ச இடத்த அடைய முடியம். இடையில சோர்வு அடையும் பொழுது உங்க எழுத்து ஒரு டானிக்.
Prasanna.S.Manian
ReplyDeletethanks
எனக்கும் பிடித்த எழுத்துக்கள்..
ReplyDeleteநண்றி விஷ்ணு..
//குறிக்கோளை அடையும் வழிகளில் தொடர்ந்து இயங்குவது என்பது மிகவும் அவசியமானது//
ReplyDeleteநல்ல முயற்சி...infact , என்னுடைய ஆராய்ச்சிப் பணியில் ஏற்பட்ட சுணக்கத்தினால் எனக்கிருந்த மனச் சோர்வு , உங்கள் பதிவைப் படித்த பிறகு நீங்கியது. Thanks a lot.
நல்ல டானிக் சார் உங்கள் பதிவு.
ReplyDeleteReally nice.
\\நல்ல முயற்சி...infact , என்னுடைய ஆராய்ச்சிப் பணியில் ஏற்பட்ட சுணக்கத்தினால் எனக்கிருந்த மனச் சோர்வு , உங்கள் பதிவைப் படித்த பிறகு நீங்கியது. Thanks a lot.\\
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி நண்பரே..
வாழ்த்துக்கள்.
vinoth gowtham
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே...
வாழ்த்துக்கள்..