"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Wednesday, April 1, 2009

கிரிக்கெட்--ஒருநாள் போட்டியும்........,

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, 5 நாள் டெஸ்ட் போட்டி, இந்த இரண்டில், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஏன்?

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் என்பதால் முடிவு தெளிவாகத்
தெரிகிறது. வெற்றியை அடைய கண்முன்னே இலக்கு இருக்கிறது. அது ஆட்டத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது.

5 நாள் கிரிக்கெட் போட்டி, பொதுவாக தொய்வாகச் செல்லும்.ரன் இலக்கு இருக்காது. பெரும்பாலும் டிராவில் முடியும்.

இப்போது சொல்லுங்கள்!

உங்கள் வாழ்க்கை...

ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா?

5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா?

வாழ்க்கை சுவாரஸ்யமாக, அர்த்தமுள்ளதாக இருக்க ஒரு குறிக்கோள், இலக்கு அவசியம்.

அடுத்த மூன்று வருடங்களில் உடல்நலம், மனவளம், பொருளாதாரம், சமூகஉறவு, சேவை எனப்
பல துறைகளில் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயுங்கள்.

சொத்து சேர்ப்பேன், பணக்காரன் ஆவேன், பெரியமனிதன் ஆவேன், எப்படியாவது முன்னேறுவேன்,சமூகப்பணி செய்வேன் எனப் பொதுப்படையாக நாம் வைத்திருப்பது, குறிக்கோள்கள் அல்ல.ஆசைகள் மட்டுமே. வேண்டுமானால் இவற்றை இலக்கிற்கான முன்னோடி என்று சொல்லலாம்.

குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்...

சுயமானதாக................................................SELF
அளவிடக் கூடியதாக..................................MEASURABLE
அடைய முடிவதாக....................................ACHIVEABLE
யதார்த்தமுள்ளதாக...................................REASONABLE
காலவரையறைக்கு உட்பட்டதாக.........TIME BOUNDED

நம்மை செயல் திட்டத்திற்கு அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.

உதாரணமாக..

அடுத்த ஆயிரம் நாட்களில் எனது மாத மொத்த வருமானம் ரூபாய் 50,000 ஆக இருக்கும் என்பதாகவோ....

20 இலட்சம் மதிப்புள்ள வீடு வாங்குவேன் என்பதாகவோ...

என் தொழிலில் குறிப்பிட்ட உயர்நிலையை அடைவேன்... என்பதாகாவோ இருக்கலாம்.

குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.

நன்றி; அடுத்த ஆயிரம் நாட்கள் நூல்..(சிறு தொகுப்பு)

15 comments:

  1. //குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்.//

    தானாக வரும் என்பதில் எனக்கு உடன் பாடில்லை.

    //நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும் //

    என்பதில் எனக்கு உடன்பாடு. ஏனென்றால் சதா அதே நினைவுகளுடம் உள்ளபோது எந்த நிகழ்வை கண்டாலும் அல்லது எந்த மனிதரை கண்டாலோ நமக்கு வேண்டிய விஷயத்தை எடுக்கும் ஆற்றல் கிடைத்துவிடும் எப்பொழுது என்றால் நமது கொள்கையில் விடாபிடியாக இருக்கும்பொழுது.


    தங்களின் கிரிக்கெட் உதாரம் மிக பொருத்தம் தாங்கள் கூர வந்த கருத்துக்கு. இங்கு எனக்கு ஒரு வினா எழுகிறது 20-20 வகை போட்டிகள் பொறுத்தவரை நினைத்தது உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லவா தோண்டுகிறது? விளக்கம் தேவை.

    ReplyDelete
  2. ***
    குறிக்கோள் எப்படி இருக்கவேண்டும்...

    சுயமானதாக................................................SELF
    அளவிடக் கூடியதாக..................................MEASURABLE
    அடைய முடிவதாக....................................ACHIVEABLE
    யதார்த்தமுள்ளதாக...................................REASONABLE
    காலவரையறைக்கு உட்பட்டதாக.........TIME BOUNDED
    ****

    utter nonsense !

    இந்த கருமாந்திரதுக்காகவே என்னோட resume ல கூட objective ரிமூவ் பண்ணினேன்.

    ReplyDelete
  3. பையன் போட்டோ சூப்பர். (profile)

    ReplyDelete
  4. விஷ்ணு.. தானாக வராது.சரியே.....
    .குறிக்கோளின் எண்ண வலிமை, அது நிறைவேற தேவையானவற்றை கொண்டுவரும்.இதையே தானாக வரும் எனக் குறிப்பிட்டேன்.

    இது ஒரு உண்மை, வாய்ப்பு அமையும்போது
    பதிவாக வரும்.

    \\20-20 வகை போட்டிகள் பொறுத்தவரை நினைத்தது உடனே கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லவா தோண்டுகிறது? \\

    10 வது வகுப்பு படிக்கும் ஏழைமாணவன் வருட
    ஆரம்பித்திலிருந்தே, முதலிடத்தை குறி வைத்து
    விட்டான் என்றால் அவனைப் பொறுத்தவரை
    20-20 தான்.. கால நீட்டிப்புக்கு இடமே இல்லையே
    அதான்...(பெயில் கிடையாது, முதலிடம் மட்டுமே குறிக்கோள்... எண்ணிப்பாருங்கள்

    \\காலவரையறைக்கு உட்பட்டதாக.........TIME BOUNDED\\

    ReplyDelete
  5. மணிகண்டன்...profile உள்ளது என் இளைய மகள்..

    கோவியார் ”உங்கள் குழந்தையா” என விவரமாக கேட்டார்,

    நீங்க பார்த்தவுடன் சந்தோசமாயிட்டீங்க..

    வாழ்த்துக்கள்..

    வாழ்த்

    ReplyDelete
  6. \\utter nonsense !

    இந்த கருமாந்திரதுக்காகவே என்னோட resume ல கூட objective ரிமூவ் பண்ணினேன்.\\

    இந்த கருத்து உங்களைப் பொறுத்தவரை சரியே...

    ’’நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே’’--படித்து விட்டீர்களா???

    ReplyDelete
  7. பொண்ணு சூப்பரா இருக்கா. (sorry. குழந்தைன்னு சொல்லி இருக்கணும்)

    உங்க பதிவுல இதையும் சேர்த்துக்கலாம். ஒரு குறிக்கோள் அடைய முயற்சி பண்றது தப்பு இல்ல. ஆனா வாழ்க்கையே அந்த குறிக்கோளோட வெற்றி தோல்வில தான் இருக்குன்னு நினைத்து கொள்ளாம இருந்தா சரியே. அதே சமயம் குறிக்கோள் நோக்கி செயல்படும் ஒவ்வொரு செயலையும் ரசிக்க தெரிஞ்சி இருக்கணும். குறிக்கோளோட கடைசி புள்ளிய மட்டுமே நினைத்துகிட்டு இருந்தா நாம அரோகரா தான்.

    இப்ப நம்ப ஊருல நடக்கற படிப்பு எல்லாமே இந்த கடைசி புள்ளிய நோக்கியே இருக்கு. அது தான் பல மக்களுக்கு எரிச்சல தருது. உங்களோட பத்தாவது பள்ளி மாணவன் உதாரணம் இதுக்கு சான்றே.

    ReplyDelete
  8. ***
    இந்த கருத்து உங்களைப் பொறுத்தவரை சரியே...

    ’’நான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே’’--படித்து விட்டீர்களா???
    ***

    :)- உண்மைய இப்படி நேரடியா சொல்லிட்டீங்களே ! எனக்கு இந்த வகை சிந்தனை ரொம்பவே பொருந்துது. வசதியாவும் இருக்கு.

    ReplyDelete
  9. \\ஒரு குறிக்கோள் அடைய முயற்சி பண்றது தப்பு இல்ல.\\

    நாலுவரியில் நறுக்குன்னு சொல்லீட்டீங்க...

    நான் எழுதியது சாதரணமா குறிக்கோள் இல்லாம
    இருக்கிறவங்களுக்காகத்தான்.


    \\இப்ப நம்ப ஊருல நடக்கற படிப்பு எல்லாமே இந்த கடைசி புள்ளிய நோக்கியே இருக்கு. அது தான் பல மக்களுக்கு எரிச்சல தருது. உங்களோட பத்தாவது பள்ளி மாணவன் உதாரணம் இதுக்கு சான்றே.\\

    உண்மையே...
    நம் கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக அமைந்தது என்று முன்னர் படித்ததாக ஞாபகம்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. உலவு

    ஏற்கனவே பதிவு பண்ணிவிட்டேன்....
    Hello, arivhedeivam.

    Your account at �லவு www.ulavu.com has been successfully set up

    Email has been automatically generated on Mar 30, 2009 at 22:59:37.

    thanks

    ReplyDelete
  11. அருமையான யோசிக்க வைக்கும் பதிவு ....

    //ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா?

    5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா?//

    அருமை எங்கள மாதிரி மக்களுக்கு புரியும் படி செய்ததற்க்கு

    ReplyDelete
  12. //குறிக்கோளை நிர்ணயித்துவிட்டீர்கள் என்றால் அதற்குரிய வழிகள் தானாக வரும் அல்லது நமக்கு புலப்பட ஆரம்பித்துவிடும். அப்புறம் என்ன.. முன்னேற்றம்தான்//
    கரெக்ட்

    ReplyDelete
  13. Suresh வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    \\அருமை எங்கள மாதிரி மக்களுக்கு புரியும் படி செய்ததற்க்கு\\


    வாழ்த்துகள்...

    ReplyDelete
  14. //ஒருநாள் கிரிக்கெட் போட்டி போல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதா?

    5 நாள் கிரிக்கெட் போட்டி போல தன்போக்கில் செல்லும் பயணமா?
    //

    இந்த இடத்துக்கு இந்த உதாரணம் பொருந்தும், ஆனால் வாழும் நாளுக்கு பொருத்தினால் எல்லோரும் டெஸ்ட் மேட்ச்சை விருப்பம் என்பார்கள் :)

    ReplyDelete
  15. கால ஓட்டத்தில், நீளத்தில் எப்பொழுதுமே
    ஒரு நாள் போட்டி போலவே இருக்காது.

    உணர்ந்தவரை முன்னேற்றமே..

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)