"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Thursday, April 30, 2009

ஞானக்களஞ்சியம் – பாடல்கள் 1

தெய்வத்தைப் பற்றிய கருத்து

தெய்வமென்ற கருத்தற்றோன் பாமரன் ஆம்

தெய்வமிலை என்போன் அச்சொல் விளங்கான்

தெய்வ மென்று கும்பிடுவோன் பக்தன், அந்தத்

தெய்வத்தையறிய முயல்வோனே யோகி,

தெய்வ நிலையுணர்ந்தவனே தேவனாம், அத்

தெய்வமே அனைத்துயிரும் எனும் கருத்தில்

தெய்வத்தின் துன்பங்கள் போக்கு தற்கே

தெய்வத் தொண்டாற்றுபவன் மனிதன் காணீர்


--வேதாத்திரி மகரிஷி


டிஸ்கி
: மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஞானக்களஞ்சியம் என்ற பாடல் தொகுப்பு நூலில் இருந்து அவ்வப்போது சில (தேர்ந்தெடுக்கப்பட்ட) பாடல்கள் இத்தலைப்பில் தொடர்ந்து வெளியிடப்படும்.

டிஸ்கி குன்னூர் போகலாம் வர்றீங்களா?

7 comments:

  1. வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சிகளையும்,காயகல்பம் பயிற்சியும்தான் நான் செய்கிறேன்.நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. முதலில் வாழ்த்துக்கள் ஷண்முகப்ரியன்

    எல்லாமே எளிமையாகவும், இலகுவாகவும் இருக்கும் என்பதுதான் மனவளக்கலையின் சிறப்பு. உணர்ந்து கொண்டு பயனடைவது நம் கையில்.

    ReplyDelete
  3. என்ன சார் குன்னூருக்கு கிளம்பியச்சா?

    ReplyDelete
  4. சிறப்பான பதிவு. இன்று என்னுடைய பதிவை அளித்து விட்டு google friends connect மூலமாக உங்கள் பதிவிற்கு வந்தேன்.நீங்களும் நானும் ஒரே நாளில் அருட்தந்தை அவர்களின் அருள் மொழிகளை பதித்திருந்தது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு.

    ReplyDelete
  5. நல்லா பதிவு மச்சான் வோட்டும் போட்டாச்சு

    ReplyDelete
  6. நல்லா பதிவு. வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சிகளையும்,காயகல்பம் பயிற்சியும்தான் நானும் செய்கிறேன். அவர்களின்
    அனைத்து பாடல்கள்ம் தொகுக்கவும்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)