"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, May 7, 2012

மனிதருள் வேறுபாடு ஏன் ?



கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,
கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,
பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்ப
உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி
உடல்வலிவு, சுகம், செல்வம்,மனிதர்கட்கு
வரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்ப
வாழ்க்கைநிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்.




எத்தனை முறை  படித்தாலும், படித்ததை புரிந்து கொள்ள முடிந்தாலும் வட்டத்தின் மையப்புள்ளி போல் இந்தப் பாடலே திரும்பத் திரும்ப மனதில் வ்ந்து நிற்கிறது.

 இதை அப்படியே உள்வாங்கி குடும்பத்திலும், உறவுகளிடத்தும், தொழில் மற்றும் சக நட்புகளுடன் முரண்படாது இருக்கவே விரும்புகிறேன். நட்புகளை புரிந்து கொண்டு நெருங்கியோ அல்லது அளவுடனோ பழக முடிகிறது. அதே சமயம் எதிர்வினை ஆற்றுவது ஆக்கபூர்வமாக எனில் உடனேயும், மறுப்பெனில் எதிர்வினை ஆற்றாமலும் இருக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருப்பதுபோல் தோன்றுகிறது. பார்ப்போம்.

நமக்கு இணக்கமானதை, விருப்பமானதை சொல்லும் சிலர் நண்பர்களாகவும், எதிர் அல்லது மாற்றுக்கருத்துகளை பகிறும் நண்பர்கள் ஏறத்தாழ எதிரிகளாகவுமே நமக்கு பார்க்கத் தெரிகிறது. இந்த சூழ்நிலையில் மேற்கண்ட பாடலை வலிந்து நினைவுக்கு கொண்டுவந்து, அமைதியாக அந்த சூழ்நிலையை சமாளிக்க முடிகிறது. இது ஒன்றுதான் எனக்குத் தெரிந்த வழி.,

இது இயல்பாகவே ஒருவருக்கு வந்தால் அது ஞானம் :)
கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டப்பட்டு வந்தால், அது விதைபோல் நம்முள் கிடந்து காலமும் சூழ்நிலையும் கூடி வரும்போது ஞானமாக மலரும். இந்த புரிதலுடன் ஒருவரோடு இணங்கிப் போகமுடிந்தால் அந்த நட்பு நீடிக்கும். இல்லையெனில் வெட்டு குத்து விழாத குறைதான் :)

இந்தவிதமாய் ஒவ்வொருவரும் மற்றவரை புரிந்துகொண்டால் வாழ்க்கை நீரோடை போல் அமைதியாக ஓடிக்கொண்டு இருக்கும்.சுவாரஸ்யம் இருக்காது என்கிறீர்களா? அதுதான் மனம் என்பது :)))))

அப்படி அமைதி வந்தால் முன்னேற்றத்திற்கான வழி எது என மனம் நகர ஆரம்பித்துவிடும் என்பதை தெளிவாக மனதில் இருத்திக்கொள்ளுங்கள்.

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

பாடல் : ஞானக் களஞ்சியம் - 177  வேதாத்திரி மகான்




4 comments:

  1. //இந்தவிதமாய் ஒவ்வொருவரும் மற்றவரை புரிந்துகொண்டால் வாழ்க்கை நீரோடை போல் அமைதியாக ஓடிக்கொண்டு இருக்கும்.சுவாரஸ்யம் இருக்காது என்கிறீர்களா? அதுதான் மனம் என்பது :)))))//

    நீரோடை என்றாலெ சல சலப்பு இருக்கும், இதைத் தான் ஜலம் என்று சொல்லுவார்கள்.

    அமைதிக்கு குளம் தான் எடுத்துக்காட்டு :)

    ReplyDelete
  2. நல்ல பாடல் ! நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் சார் !

    ReplyDelete
  3. நண்பரே,
    ‘தினமும் படிப்பது’ பகுதியில், ‘கடவுளா, அணுக்களா?’ [கடவுளின் கடவுள்] என்னும் என் இடுகையையும் தாங்கள் இணைத்திருப்பதை இன்றுதான் கண்டேன்.

    தங்களின் பெருந்தன்மை என்னை மிகவும் மகிழ வைத்தது.

    மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. வாழ்க வளமுடன்!

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)