"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, June 6, 2010

நர்சிம் - முல்லைக்காக அனைவரிடமும் மன்றாடுகிறேன்.

போதும் போதும் என்கிற அளவுக்கு கட்சி பிரிந்து காறித் துப்பிக் கொண்டாகிவிட்டது. இந்த விசயத்தில் எந்தக் கருத்தும் அமைதியை, ஒற்றுமையை ஏற்படுத்தாது என்பதால் அமைதியாக இருந்தேன். அட நாம அந்த அளவுக்கு  பிரபலமும் இல்லையே என்ற சிந்தனையும் கூடத்தான் :))



சரி. வலையுலக நண்பர்களான நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன?

நம் குடும்ப உறுப்பினர்கள் நர்சிம், சந்தனமுல்லை இருவருமிடையே கருத்து வேறுபாடு. வீதிக்கு வந்து விட்டது. சரி அவர்கள் இருவரில் யார்மீது வேண்டுமானாலும் தவறு இருக்கட்டும். இதை இருதரப்பிலும் ஊதி ஊதி
பெரிதாக்குவதில் யாருக்கு என்ன இலாபம். ? மன அமைதி, நட்பு இவைகளை இழந்ததுதானே மிஞ்சுகிறது.

கட்சி சேர்த்துக்கொண்டு, வேறு பகைமைகளை மனதில் வைத்துக்கொண்டு, குழுவாக பிரிந்து அடித்துக் கொண்டு  நாம் சாதித்தது என்ன?  வருங்கால சமுதாயத்திற்கு வலைப்பதிவுத் தொகுப்பில் கருப்புப் பக்கங்களை விட்டுவைக்கப் போகிறோமா?

வலைப்பதிவு என்பது இணையம் இருக்கும் வரை இருக்கும். அதில் மகிழ்ச்சியை, உங்கள் ஆற்றலை, அறிவைப் பதிவு செய்யப்போகிறீர்களா? அல்லது தமிழனின் இருண்ட பக்கத்தையே காட்சிக்கு வைக்கப்போகிறீர்களா?

இதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் மனம். மனம். மனம்.  :))

நாம் முதலில் அமைதியாவோம் . அவர்கள் இருவருக்கும் இப்போதய தேவை
தனிமை, போதும் போதும் என்கிற வரைக்கும் யோசிக்க அவகாசம். அவங்க இரண்டுபேரையும் கொஞ்சம் தொந்தரவு பண்ணாம சுதந்திரமா விடுவோம். 


அவர்களே எங்களைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்யட்டும் என்பதும் தவறு. பின்னாட்களில் அதற்காக சந்தனமுல்லையும், நர்சிம்மும் இன்னும் வருந்த நேரிடும்.

இவ்விருவருக்கும் ஆலோசனைகள் வழங்குவதை முதலில் நாம் நிறுத்துவோம். காலமே இக் கசப்புக்கு சிறந்த மருந்து. சில காலம் பொறுத்தால் தானாக நல்லது நடக்கும். நாம் அதைத் தடுக்காமல் இருந்தால் போதும் :))

நாம் கொஞ்சம் அமைதியாக வேறு விசயங்களில் ஈடுபடுவோம். நிஜ வாழ்வில் சாதியை, மதங்களை முழுமையாக ஒதுக்க முடியாமல், வலையுலகமாவது நமக்கு மன நிறைவைத்தரட்டும். முகம் தெரியாத, ஆணா பெண்ணா என்று கூடத் தெரியாமல் கருத்து பரிமாற்றம் செய்து நட்பை வளர்த்துக்கொள்வதே நமது பொதுவான நோக்கம்.  அதன் மூலம் நிம்மதி பெறுவோம்

ஒருவரைப் பிடிக்கவில்லையானால் ஒதுங்கிவிட்டால் நம்க்கும் நிம்மதி, சம்பந்தப்பட்டவருக்கும் நிம்மதி. ஒருவரின் கருத்து பிடிக்கவில்லை எனில் அந்த கருத்தோடு முரண்படலாம். ஆனால் நண்பரோடு முரண்பட வேண்டியதில்லை.

ஆனால் ’அப்படி விட்டா எப்படி’ என நாட்டமைக்கு போக வேண்டியதில்லை. எல்லாத்துக்கும் பெரிய நாட்டாமை செயல்விளைவுத் தத்துவம். அதை நான் நம்புகிறேன். யாருக்கு எந்த நேரத்தில் எதைக்கொடுக்க வேண்டுமோ அதைக்கொடுக்கும். அது நல்லதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை, பேராசையும் கூட :))

நாம் பார்வையாளராக இருப்போம், நல்லவற்றில் பங்கேற்பாளராக இருப்போம். அல்லாதவற்றில் வெறும் பார்வையாளராக வாயை மூடிக்கொண்டு இருப்போம். இதுவே பிரச்சினையை சுமுக தீர்வைத்  தரும். 

 இன்னும் கூட பதிவுலகம் என்றால் ஒருசில நண்பர்கள் மட்டுமே என்ற எண்ணம் மாற வேண்டும். பதிவுலகம் விரிந்தது, பரந்தது. நர்சிம்மும் சந்தனமுல்லை மட்டுமே அல்ல, இதன் பொருள் அவர்களைத்
தாழ்த்துவது அல்ல, அவர்களையே முன்னிலைப்படுத்தி, சூடாகவே இருப்பதைத்தவிர்ப்பதுதான் நோக்கம். இனி நடப்பதாவது நல்லதாக இருக்கட்டும். என்ற எண்ணமே

இந்த பதிவுலக அரசியலில் இருந்து வெளிவருவோம். குடும்பமாக பயணிப்போம்.




வாழ்த்துகளுடன் 
நிகழ்காலத்தில் சிவா

7 comments:

  1. கடவுளே, இது இன்னும் முடியலியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  2. உங்களுக்குதான் எழுதி இருக்கிறேன் :))

    ம்ம்ம்ம்...

    ReplyDelete
  3. அமைதியை வேண்டி மிகவும் நல்ல எண்ணத்தோடு எழுதியிருக்கிறீர்கள் சிவா!

    நல்லதை இந்த நாடு கேட்குமா?! தாம் தான் நாட்டாமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில பதிவர்கள்தான் கேட்கப் போகிறார்களா?

    எதுவாயினும், ஆரம்பமான ஒன்று முடிவுக்கு வந்தே ஆக வேண்டும் என்கிற விதி இதையும் முடித்து வைக்கும்!

    அந்த விதி, காலம்!

    ReplyDelete
  4. கேட்டுவிட்டால் அதற்குப்பெயர் மனம் அல்ல :))

    \\நல்லதை இந்த நாடு கேட்குமா?! தாம் தான் நாட்டாமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில பதிவர்கள்தான் கேட்கப் போகிறார்களா?\\

    அவர்களையும் காலம் கவனித்துக்கொள்ளும் :))

    நன்றி நண்பரே

    ReplyDelete
  5. எண்ணங்களை சொல்வது செதுக்க உதவட்டும்.

    ReplyDelete
  6. //நாம் முதலில் அமைதியாவோம் . அவர்கள் இருவருக்கும் இப்போதய தேவை
    தனிமை, போதும் போதும் என்கிற வரைக்கும் யோசிக்க அவகாசம். அவங்க இரண்டுபேரையும் கொஞ்சம் தொந்தரவு பண்ணாம சுதந்திரமா விடுவோம்.//

    Well said. =))

    ReplyDelete
  7. நன்றி ஜோதிஜி அவர்களே

    நன்றி அனாமிகா துவாரகன், ஆனாலும் நம் வலையுலக பிரபலங்கள் அவர்களை விடுவதாக இல்லை :))

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)