"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, September 9, 2013

பொதிகை மலை பயணத்தொடர் பகுதி - 8

மழை மீண்டும் ஆரம்பித்தது...அடுத்த வந்த அன்பர்களுக்கு வழிவிட்டு இறங்க ஆரம்பித்தோம். ஏறும்போது இருந்ததை விட பாதைகளில் நீர் வரத்து அதிகம் இருந்தது. பாறைகளில் வழுக்கும் தன்மை இல்லாததால் தைரியமாக இறங்க ஆரம்பித்தோம். படத்தில் சற்று கவனமாகப் பார்த்தால் மட்டுமே மஞ்சள் கோடு அடையாளம் தெரியும்... இப்போது தான் கேமிராவை வெளியே எடுத்து ஒருவிதமாக மழையில் நனையாமல் சமாளித்து புகைப்படம் எடுத்தேன்.




குத்து மதிப்பாகவே இறங்க ஆரம்பித்தோம். சுற்றிலும் திசைதெரியாத வகையில் மேகம், மழைத்துளி என கலந்து கட்டி இருக்க...ஏறும்போது ஞாபகத்தில் வைத்த சில அடையாளங்கள், பாறைகள், மரங்கள் என இறங்கி வந்தோம். சன்னமாக இருந்த அருவிகள் நுரைத்துக்கொண்டு பொங்கிப் பிரவாகமாய் வந்து கொண்டிருந்தது... பார்க்க பார்க்க எங்களை மறந்தோம் :) இறங்கவே மனசில்லாமல் இறங்கினோம்.

இரண்டு  மலைகளுக்கு இடையில் அமைந்த சற்றே சமதளமான பாறைப்பகுதி...  இதை கடந்து வருகையில் நீர் வரத்து சற்று அதிகமாக இருந்தது.. நாங்கள் சென்ற மார்ச் முதல்வாரம் தான் மழைக்காலம் ஆரம்பமாம்.. முன்னதாக வந்திருந்தால் இந்த மழையை பார்த்திருக்க முடியாது என கீழே வந்த பின் தகவல் கிடைத்தது.  மேலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்த அருவி..

அதே இடத்தில் அருவி தலைகுப்புறப் பாய்ந்து செல்லும் காட்சி கீழே... மேலே இருக்கும் பாதையை கடந்து வந்த போது நீரின் அளவு அதிகமாகி இருந்தால் நினைத்துப் பார்க்கக்கூட நேரமின்றி சிவலோகம்தான் :)



இதன் வீடியோ ஒன்று...மேலே...


பொதிகை மலை உச்சியில் இருந்து முந்தையநாள் இரவு தங்கிய அதிரமலை முகாமுக்கு பக்கமாக வந்துவிட்டோம் என்பதற்கான மரங்கள் அடர்ந்த பகுதி நீரோட்டத்துடன்...






அடுத்த பகுதியில் நிறைவு பெறும் :)
நிகழ்காலத்தில் சிவா

8 comments:

  1. கொஞ்சம் விரிவாகவே எழுதலாமே?

    ReplyDelete
  2. உங்களிடம் எனசொல்வது?ஜோதிஜி சொல்வது போல்விரிவாக எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. எனது அனுபவத்தை எழுதுவதால் சுருக்கமாக வருகிறது.. வாசிப்பவர்கள் மனதில் கேள்விகள் எழும் பட்சத்தில் அவற்றிற்கான முழுமையான தகவல்களை தரும்போது அது விரிவாக வரும்..நன்றி திரு.பழனிசாமி

      Delete
  3. ஓசையுடன் பாயும் அருவி அழகாக இருக்கின்றது.

    உங்கள் திகில் பயணத்தில் எமக்குக பார்த்து ரசிக்க கிடைத்தது இயற்கையின் அழகிய இடங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒருநாள் உங்களுக்கும் அனுபவமாக வாழ்த்துகள் :)

      Delete
  4. this place can be reached from tamilnad through papanasam but facilities are available or not i don't know. visited up to banathirtham

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாடு வழியாக செல்லும் வழி இருந்தது உண்மைதான்.. இப்போது அந்த வழித்தடத்தில் புலிகள் வாழும் பகுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் அனுமதி இல்லை.. கேரள அரசு வனத்துறை தினம் 100 பேரை அனுமதிக்கிறது.. கட்டணம் 500*100=50,000 இப்படி 60 நாளைக்கு கணக்குப் போட்டுப் பாருங்கள்.. 60*50,000=30,00,000= 30 இலட்சம் ரூபாய் வருமானம்...ஒன்றும் சொல்வதற்கில்லை ...

      Delete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)