"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Sunday, January 1, 2012

இனி வரும் நாட்களே நம் கையில்-2012

ஆங்கில புத்தாண்டு 2012 தொடங்கிவிட்டது. இந்த வருடம் நம் அனைவருக்கும் மகிழ்வான தருணங்களை அதிகம் தரட்டும் என உள்ளன்போடு பிரார்த்திக்கிறேன்.

துன்பங்களே இன்றி இருக்க இயலாது. அதை எதிர் கொள்ளும் மன வலிமை நமக்கு அதிகரிக்க வேண்டும் என்கிற புரிதல் நமக்குள் வளரட்டும்.

கடந்தவருடத்தில் நாம் சந்தித்த நிகழ்வுகளை அசை போடுவதோடு, ஏற்பட்ட மன உடல் துன்பங்கள், இவற்றில் நம் பங்கு என்ன என்பதை ஆராய்வோம். கண்டிப்பாக பங்கு இருக்கும் :) நம் பங்கினை இவ்வருடத்தில் சிக்கலான சூழ்நிலைகளை சந்திக்கும்போது  எப்படி குறைப்பது, எப்படி செயல்படவேண்டும் என்பதனை சிலமணித்துளிகள் ஒதுக்கி சிந்திப்போம்.

நம் வயதில் ஒன்று கூடிவிட்டது. அதே சமயம் அனுபவமும் கூடி இருக்கிறது. நான் இப்படித்தான் இருப்பேன் என்கிற அடையாளங்களால். செயலால், எண்ணத்தால் என்ன நடந்தது எனவும் பார்ப்போம். நல்லவை சில, அல்லவை பல எனத்தான் இருக்கும்:). எது நடந்திருப்பினும் மனதில் குற்ற உணர்ச்சி இன்றி சரி செய்து கொள்வோம். போன நாட்களும், போன வருடங்களும் திரும்ப வரவே வராது.

இனி வரும் நாட்களே நம் கையில்.. நமது எண்ணங்களில், செயல்களில், உடல் நலத்தில் மேம்பாடு அடைவோம். இது நம் அனைவருக்கும் வாய்க்கட்டும் என சங்கல்பித்து புது வருட வாழ்த்துகளை உங்களுடோடு பகிர்ந்து கொள்கிறேன்,

வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா

8 comments:

  1. சென்றுபோன தருணங்கள் என்றும் திரும்பி வாரா. அவைகளை நினைத்து வருந்துவது வீண். நடைமுறைக்கு மிகவும் பொருத்தமான கருத்து. பாராட்டுகள்.

    ReplyDelete
  2. மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நீங்கள் சொன்னது நிதர்சனமான உண்மை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //இனி வரும் நாட்களே நம் கையில்.. //
    இந்த அரிய உண்மையை உணர்ந்து செயல்பட்டால் நாட்டில் சுபிட்சம் உண்டாகும்..

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  6. இந்த வருடம் அனைவருக்கும் மகிழ்வான தருணங்களை அதிகம் தரட்டும் என உள்ளன்போடு பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)