அதைப்பற்றி கொஞ்சம் அலசும் முயற்சிதான் இது..
1.அதிகாலை எழுந்தவுடன் சில நிமிடங்களுக்குள் மலம் கழிய வேண்டும். அது ஓரிரு நிமிட வேலையாக முடிந்து விட வேண்டும். பெரும் முயற்சி இருக்கக் கூடாது :)
2.மலம் உடலிலிருந்து ஒரே கயிற்றுத்திரிபோல் கழன்று வந்துவிடவேண்டும். வெளியே தள்ளுவதற்கு அதிக முயற்சியோ, அழுத்தமோ இருக்கக் கூடாது. ஒரு பெரிய குழாயிலிருந்து சிறிய துண்டுக்குழாய் கழன்று வருவது போல வரவேண்டும்.
3.மலத்தின் மேல் சளிபோன்ற ஒரு படலம் இருக்கவேண்டும். மாட்டுச் சாணத்தின் மேல் இவ்வித சளிப்படலத்தைக் காணலாம்.
4.மலத்தில் துர்நாற்றம் இருக்கக்கூடாது
5.மலம் கழிந்தவுடன் வயிறு காலியான உணர்வு இருக்க வேண்டும். சோம்பலில்லாமல் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தகுதியாகவும் இருக்க வேண்டும்.
6.மலம் கழித்தபின் சிறிது நேரம் கழித்து மீண்டும் அது வருமாறு, உள்ளே தங்கி இருக்கக் கூடாது.
7.பசைபோல் மலம்கழிக்கும் இடத்தில் ஒட்டக்கூடாது. முன்போ பின்போ வயிற்றை வலிக்கக்கூடாது, எரிச்சல் அரிப்பு இருக்கக்கூடாது.
இப்படி இருந்தாத்தான் அது நார்மல், இல்லைன்னா அதுக்குப் பெயர்தான் மலச்சிக்கல், சரி இதை எப்படி சரி செய்வது?, சரி செய்யவேண்டியது அவசியமா? அடுத்த இடுகையில் பார்ப்போம்.
நன்றி: இனிமை தந்து இன்னல் நீக்கும் இனிமா, மணிமேகலை பிரசுரம் நூல்