"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Monday, August 1, 2011

திருக்கைலாய யாத்திரை பகுதி 13

இடுப்பில் மழையில் நனையாத பெல்ட், அதில் டார்ச், கொஞ்சம் பணம் யுவான், கேமரா, எக்ஸ்ட்ரா பேட்டரி, கழுத்தில் கயிறுடன் கூடிய UV கண்ணாடி, இது பனியில் சூரிய ஒளி பட்டு பிரதிபலிக்கும்போது புற ஊதா கதிர்களினால் கண் பாதிக்கப்படாமல் இருக்க, கையில் பனியிலும் நடக்க உதவியாக வாக்கிங் ஸ்டிக். தோளில் மாட்டியுள்ள பையில் ஒரு செட்காலுறை, கையுறை இவற்றுடன் பாதயாத்திரையாக கிளம்புவோம் என்பது  நான் நினைத்துப்பார்க்காத ஒன்றே.

சரி சதுரகிரி,வெள்ளியங்கிரி என மலை ஏறிய அனுபவங்கள் இருப்பதால் அதிகம் யோசிக்காமல் ஷெர்பா எனப்படும் உதவியாளருடன் நடையைக் கட்டி விட்டேன்.:) கிளம்பும்போது மணி 11.30 சீன நேரம். யார் பின்னால் வருகிறார்கள் என்றெல்லாம் பார்க்காமல் நடக்க ஆரம்பித்து விட்டேன்.






மலேசியாவில் இருந்து வந்த சகோதரி ஒருவர் ஏற்கனவே நுரையீரலில் சிறு அறுவைச்சிகிச்சை செய்திருப்பார் போலும்.  ஒரு கி.மீ நடந்தவுடன் மூச்சுத்திணறல் ஏற்பட உதவியாளருடன் திருப்பி அனுப்பப்பட்டார்.

நான் சற்று தனிமையை விரும்பியதால் யாரோடும் சேராமல் நடக்க ஆரம்பித்துவிட்டேன். அதிகம் பேசுவது என்பது அங்கு உடலில் உள்ள ஆக்சிஜனில் இழப்பை ஏற்படுத்தும் என்பதும் ஒரு காரணம்.

நண்பர்கள் உடன் வர கொஞ்சம் தூரம் நடந்தவுடனே களைப்பு அடைந்து அமர்ந்து ஓய்வெடுத்து, ஓய்வெடுத்தே வந்தோம். கொண்டு வந்த ஸ்நாக்ஸ், எனர்ஜி டிரிங்ஸ் என எல்லாவற்றையும் நண்பர்கள் காலி செய்து கொண்டே வந்தனர்.

ஆனால் கூட வந்த ஷெர்பாக்களோ தண்ணீர் மட்டுமே அருந்தினர். அதுவும் மிகவும் குறைவாகவே., அவர்களை பார்த்து நானும் தண்ணீர் மட்டுமே அருந்தினேன்.


மேற்கு முக தரிசனம், சத்யோஜாத முகம் என்று அழைக்கப்படும் கைலயங்கிரியின் தோற்றம்.  இடதுபுறம் பாதியாக தெரிவது நந்தி பர்வதம். மலையை சற்று உற்று பாருங்கள்..பார்த்துக்கொண்டே இருங்கள்., உங்கள் மனதில் என்ன உணர்வு தோன்றுகிறதோ அதேதான் எனக்கும்:)


நீங்கள் திருக்கைலாய மலையிலிருந்து நேரடியாக உருகிவரும் தீர்த்தத்தை இங்கு மட்டுமே பார்க்க/சேகரிக்க முடியும். இந்த விவரம் எனக்குத் தெரியாததால் தீர்த்தத்தை தலையில் வைத்தும், கண்களில் ஒற்றிக்கொண்டும், நிறைவாக போதும் என்கிற வரையும் அருந்தினேனே தவிர சேமிக்கவில்லை. ஆனால் ஒரு நாள் யாத்திரையாக இதே வழியாக திரும்பிவரும்போது சேமித்துக்கொள்வது நல்லது., சுமையைக் குறைக்கும்:)


யாத்திரை தொடரும்
நிகழ்காலத்தில் சிவா

6 comments:

  1. அற்புதமான கைலைநாதன் தரிசனம்...

    பகிர்வுக்கு நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. தொடர்ந்து ........ உள்ளேன் ஐயா.............

    ReplyDelete
  3. following...

    மொத்த போட்டோக்களையும் ஒரு ஆல்பமா ஷேர் பண்ணுங்க...

    ReplyDelete
  4. கைலாயனாதனின் கண்களும் மூக்கும் தலையில் கிரீடம் வைத்தாற்போல் தெரிகிறதே

    ReplyDelete
  5. ஆமாம் திருக்கைலாய தரிசனத்தில் மேற்கு நோக்கிய பகுதி இறைவனின் முக்கிய முகமாக கருதப்படுகிறது விருட்சம்..

    வருகை புரிந்து கருத்தும், உற்சாகமும் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்

    ReplyDelete

மனசுல தோணினத சொல்லிட்டு போங்க :)