"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு!" புத்தர்

Tuesday, January 6, 2015

பொதிகைமலை யாத்திரை முன்பதிவு குறித்து..

அகத்தியர் மலை எனும் பொதிகைமலை யாத்திரை அனுபவம் குறித்து இதே வலைதளத்தில் தொடர் இடுகைகள் படித்திருப்பீர்கள்..சில அன்பர்கள் இந்த யாத்திரை செல்ல ஆர்வம் கொண்டு என்னிடம் இ-மெயில் மூலம் விசாரித்துள்ளனர்.

தற்போது 2015 இந்த வருடத்திற்கான யாத்திரை முன்பதிவு வருகின்ற 8 ம் தேதி காலை 8 மணிமுதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள இயலும்.

நாங்கள் சென்ற சமயத்தில் இந்த வசதி இல்லாததால் நேரில் சென்று பதிவு செய்தோம்..

ஆர்வமுடையோர் இந்த அரிய வாய்ப்பினை  பயன்படுத்திக்கொள்க

கேரள வனத்துறை இணையதளம் இந்த முகவரிக்குச் சென்று

கிளிக் செய்து முன்பதிவினை நிறைவு செய்து கொள்ளவும்...அடையாளச் சான்று ஒன்றினை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.........மறவாதீர் முன்பதிவு தொடங்கும் நாள் 08.01.2015

நிகழ்காலத்தில் சிவா